வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி தமிழகத்தில் தொடரும் போராட்டங்கள்.......
திருவள்ளூர்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கூட்டமைப்பின் சார்பாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் டிசம்பர் 14,15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்முன் #காத்திருப்பு_போராட்டம் நடத்துவது என்ற முடிவின் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் #தோழர்_அருள் தலைமையில் 14.12.2020 அன்று திருவள்ளுர் ஆட்சியர் அலுவலகத்தின்முன் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளுர் கிழக்கு மாவட்ட செயலாளர் #தோழர் #K_M_விகந்தர் கலந்து கொண்டார். அதில் இது விவசாயிகளுக்கான போராட்டமாக மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களுக்கான போராட்டமாக... குறிப்பாக தனியார்மயம், தாராளமயம், உலகமய கொள்கைகளை அம்பலபடுத்தி அதற்கு எதிரான போராட்டமாக அடுத்த கட்டத்திற்கு வளர்தெடுக்க வேண்டுமென போராட்ட தலைமைக்கு வேண்டுகோள் விடுத்தார்.
ஏனெனில், தொழிலாளர் சட்டதிருத்தம், புதிய கல்வி கொள்கை, இரயில்வே, வங்கி, மருத்துவம் என அனைத்தையும் தனியார்மயமாக்குவதற்கு அடிகோலாக அமைவது தனியார்மய கொள்கைகளே!! ஆகவே, ஒவ்வொன்றுக்கும் தனித்தனி போராட்டங்கள் சாத்தியமற்றதெனவும் தற்போதைய விவசாயிகள் போராட்டங்களை அடுத்த கட்டத்திற்க்கு வளர்தேடுக்க மக்களை அணிதிரட்ட இடதுசாரிகள் ஒன்றினைய வேண்டுமென விவசாயிகள் சங்க கூட்டமைப்புக்கு கோறிக்கைவைத்து உரையாற்றினார்.
போராட்டத்துக்கு அனுமதி மறுத்த காவல்துறை போராட்டத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்களை கைது செய்து மண்டபத்தில் அடைத்தது. காவல்துறை அளித்த உணவை மறுத்து.. தாங்களே உணவை தயாரித்து கொண்டது சிறப்பாக அமைந்த்து. மண்டபத்தில் நடந்த ஒருங்கினைப்பு குழு கூட்டத்தில் இன்னும் முழுவீச்சில் போராட்டத்தை கொண்டு செல்வது எனவும், மீண்டும் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவது என முடிவு செய்தோம். போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டனர்.
இன்று(16.12.2020) நடைபெறுகின்ற போராட்டத்திலும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தலைமை குழு தோழர் #அ_முகுந்தன் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் தோழர் விகந்தர் அவர்களும் களத்தில் இருக்கின்றனர்.
தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் (கிழக்கு) மாவட்டம்.
பெரம்பலூர்
இன்று பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண்மை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து ஐனநாயக அமைப்பு சார்பில் தொடர்காத்திருப்புப்போராட்டம் நடைப்பெற்றது. இதில் அகில இந்திய போராட்ட ஒருங்கினைப்புக்குழு தோழர் பாலகிருஷ்ணன் பேசினார். ம. க. இ. க கலைக்குழுவின் சார்பாக பாடல்கள் பாடப்பட்டது.
விழுப்புரம்
விழுப்புரத்தில் தடையை மீறி தொடர் காத்திருப்பு போராட்டம் மூன்றாவது நாளாக நடத்திய அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு (AIKSCC) அனைத்து விவசாய சங்கத்தினர் கைது!
வேளாண் திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறு!
வேளாண் திருத்த சட்டம், இலவச மின்சார சட்டத்தை திரும்ப பெறு என்று "டெல்லி சலோ" என்ற முழக்கத்தை முன்வைத்து கடும் குளிரை பொருட்படுத்தாமல் கடந்த 21 நாட்களாக பஞ்சாப்,ஹரியானா மாநிலங்களை சார்ந்த விவசாயிகள் போராடி வருகிறார்கள்.
இந்தப் போராட்டம் "பாரத் பந்த்,சாலை மறியல்,மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை" போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. மற்ற மாநிலங்களில் காத்திருப்புப் போராட்டம் என தற்போது நடத்தி வருகின்றனர்.
மத்தியில் அமைந்துள்ள பாசிச மோடி அரசு விவசாயிகளின் போராட்டத்தை துளியும் மதிக்காமல் வேளாண் சட்டங்களால் அவர்களுக்கு நன்மையே ஏற்படும் என பிரச்சாரத்தை மத்திய அரசின் செய்தி விளம்பரத்துறை செய்தித்தாள்கள் மூலம் பரப்பி வருகிறது.
இந்த பொய்களை எல்லாம் அம்பலப்படுத்தியும் வேளாண் சட்டத்தின் அபாயத்தை முறியடிக்கும் விதமாகவும் தொடர்ந்து டெல்லியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பெருந்திரளாக திரண்டு போராடி வருகின்றனர்.
மேலும் டெல்லியில் போராடுகின்ற விவசாயிகளுக்கு எதிராக பிஜேபியின் விவசாய சங்கங்கள் வேளாண் சட்டத்தை ஆதரித்து பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும் என பாசிச மோடி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லியில் நடக்கும் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து பல்வேறு தரப்பினரும் விவசாயிகளுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்து வருகின்றனர்.
விவசாயிகளின் போராட்டம் உலகம் தழுவிய அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.பாசிச மோடி அரசுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகம் முழுக்கவதும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பாக போராட்டங்களை நடத்தி வருகிறது அதன் ஒரு பகுதியாக இன்று (16/12/2020) அருகில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு (AIKSCC), சார்பாக
தமிழக விவசாய சங்கங்கள், மற்றும் மக்கள் அதிகாரம், உள்ளிட்ட அமைப்புகள். விழுப்புரத்தில் தடையை மீறி 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தொடர் காத்திருப்பு போராட்டம் மூன்றாவது நாளாக நடத்திய தோழர்களை கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
தகவல்.
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம் மண்டலம்.
திருவண்ணாமலை
வேளாண் திருத்த சட்டத்தை எதிர்த்து இன்று - 16.12.2020 - திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்றது. காத்திருப்பு போராட்டத்தை நடைபெற விடாமல் தடுத்து அவர்களைக் கைதுசெய்து தனியார் மண்டபத்தில் வைத்துள்ளது போலீஸ்.
இதில் திரளாக கலந்து கொண்ட
மக்கள் அதிகார தோழர்களும்,
பகத்சிங்கின் வாரிசுகளும்....
கடலூர்
#டெல்லி_விவசாயிகள்
#போராட்டம்_வெல்லட்டும்! ✊️
கடலூரில் மூன்றாவது நாளாக தடையை மீறி அகில இந்திய விவசாய ஒருங்கிணைப்புக் குழுவினர் கைது!
டெல்லியில் கடும் பனி குளிரையும் பொருட்படுத்தாமல் கடந்த 20 நாட்களாக 1- வயது குழந்தை முதல் 90 வயது முதியவர் வரை பிஎச்டி முடித்த பட்டதாரிகள் முதற்கொண்டு உறுதியான விவசாய போராட்டத்தை உலகம் தழுவிய அளவில் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள்.
இந்த போராட்டம் உலக அளவில் வரவேற்பு பெற்றாலும் பாசிச மோடி அரசிற்கு இது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த ஆறு ஆண்டு பாஜகவின் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட சட்டங்களை எதிர்த்து பெரிய அளவில் போராட்டங்கள் எதுவும் நடைபெறாது. அப்படி நடந்தாலும் அது அவர்களின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாகும் வகையில் இல்லாமல் கடந்து சென்று விட்டது.
விவசாயிகளின் வர்க்க உணர்வு மிக்க இப்போராட்டம் மோடியின் அதிகாரத்தை வலுவிழக்க செய்யும் வகையில் அமைந்துள்ளது. இதனால் மகாத்மா காந்தியை கொல்ல கோட்சே எப்படி இஸ்லாமியரின் பெயரை கையில் பச்சை குத்திக் கொண்டு இஸ்லாமியருக்கு எதிரான கலவரமாக மாற்ற முயற்சித்தானோ அதேபோன்று பாஜகவின் கைகூலிகளை கொண்டு ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் அடையாளம் தெரியாத நபர்களை விவசாயிகள் என்ற பெயரில் வேளாண் சட்டத்தை ஆதரித்து மத்திய வேளாண் அமைச்சரை சந்தித்து வேளாண் திருத்த சட்டத்திற்கு ஆதரவாக மனு கொடுத்துள்ளனர்.
இதைப் போன்ற சம்பவங்கள் பார்ப்பனிய ஆர்எஸ்எஸ் வரலாற்றில் எப்பொழுதும் நடைபெறுவது தான்! என? விவசாயிகளுடைய போராட்டம் கடந்து செல்கிறது.
விவசாயிகளின் இந்த போராட்டம் வெற்றிகரமாக மாற்றக்கூடிய வேளைகளில் அகில இந்திய விவசாய ஒருங்கிணைப்புக் குழு என்ற அடிப்படையில் நாடு முழுக்க கடந்த 14ஆம் தேதி முதல் தொடர் போராட்டங்கள்,கலெக்டர் அலுவலகம் முற்றுகை,ரயில் மறியல்,மாவட்ட தலைநகரங்களில் முக்கிய சாலைகளில் மறியல் போராட்டம் என நீண்டு செல்கிறது.
அந்த அடிப்படையில் இன்று (16/12/2020) கடலூர் மஞ்சகுப்பம்
(கார் ஸ்டார்ட்) அருகில் அகில இந்திய விவசாய ஒருங்கிணைப்புக் குழு சார்பில் மூன்றாம் நாளாக கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நெல் நாற்றுடன்,காதில் பூவை சுற்றிக் கொண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (லெனினிஸ்ட்),மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்,மக்கள் அதிகாரம்,காவிரி டெல்டா ஒருங்கிணைப்புக் குழு மற்றும் பல்வேறு அமைப்பு கட்சியைச் சார்ந்த தோழர்கள்,விவசாயிகள்,மாணவர்கள்,இளைஞர்கள்,பெண்கள் என பலர் கலந்துகாலமும் கொண்டு கைதாகி கடலூர் "விக்னேஷ்" திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தகவல்:
அகில இந்திய விவசாய ஒருங்கிணைப்புக் குழு,(AIKCSS).
கடலூர் மாவட்டம்.
தோழர்.பாலு
(மண்டல ஒருங்கிணைப்பாளர்),
மக்கள் அதிகாரம்,
கடலூர்.
தொடர்புக்கு:
81108 15963
மதுரை - அவனியாபுரம்
மூன்று வேளாண் திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்திமதுரை அவனியாபுரத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில்.
மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டனர்.
தகவல்
மதுரை மண்டலம்
மக்கள் அதிகாரம்
மதுரை - மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைக்க, மற்றும் தோழமை கட்சிகள் பங்கேற்க மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இரண்டாம் நாளாக இன்றும் காத்திருப்புப் போராட்டம் தொடர்ந்தது..
மதுரை நாடாளுமன்ற தோழர் சு.வெங்கடேசன் அவர்கள் போராட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
தமிழகத்தின் பிற 7மாவட்டங்கள் காத்திருப்பு போராட்டத்திற்கு அனுமதி வழங்கியிருக்கும் பொழுது மதுரை மாவட்ட போலீஸ் மட்டும் அனுமதி வழங்க மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்?தென் மண்டல ஐஜி இடம் நான் பேசுகிறேன் அது வரை இவர்கள் போராட்டத்தை நடத்துவார்கள் யாரையும் கைது செய்யக் கூடாது என்று கண்டித்தார்..
சிறிது நேரம் கழித்து போராட்ட தலைமையிடம் காவல்துறை அதிகாரிகள் இன்று ஒரு நாள் மாலை 5 மணி வரை போராட்டம் நடத்திக் கொள்ளுங்கள் நாளை போராட்டம் கிடையாது என்று கூறினார்கள்.
போராட்டத் தலைமை தெளிவாக அறிவித்து விட்டது நாளை போராட்டம் என்பது ஆல் இந்தியா சம்பந்தப்பட்ட விவகாரம் அதில் நீங்களும் நாங்களும் முடிவெடுக்க முடியாது இன்று அனுமதி உண்டா? கைதா அதை மட்டும் சொல்லுங்கள் என்று கூறிவிட்டு போராட்டத்தை தொடங்க ஆரம்பித்தனர்.
மாலை 5 மணி வரை போராட்டம் சிறப்பாக நடைபெற்றது இடதுசாரி இயக்கத் தோழர்களும் விவசாய சங்க தலைவர்களும் பல்வேறு கண்டன உரைகளை பதிவு செய்தனர்.
மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டனர். மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்ட செயலாளர் தோழர் லயனல் அந்தோணிராஜ் கண்டன உரையாற்றினார்.மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் தோழர் நடராஜனும் கண்டன உரையாற்றினார்.
மக்கள் பாடகர் தோழர் ஜெயக்குமார் அவர்கள் எழுச்சிமிகு பாடல்களை இசைத்தனர்.
விவசாயிகள் சங்கத் தலைவர் தோழர் ராஜேந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார். தோழர் சந்தானம் அவர்கள் தலைமை தாங்கினார்..
மீண்டும் நாளை காலை 10 மணிக்கு போராட்டம் தொடங்கும் என அறிவித்து மாலை 5 மணிஇன்று போராட்டம் முடித்து வைக்கப்பட்டுள்ளது..
தகவல்
மதுரை மண்டலம்
மக்கள் அதிகாரம்
No comments:
Post a Comment