Monday, 14 December 2020

தஞ்சையில் காத்திருப்புப் போராட்டம்!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி  தஞ்சையில் தொடர் காத்திருப்பு போராட்டம்

==============================

தஞ்சை பனகல் கட்டிடம் அருகில் நூற்றுக்கணக்கான விவசாயிகள்அனைத்துக் கடசிகள்  இயக்கங்கள் சார்பில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும்இன்று

(14-12-2020) தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். 

டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த 11 விவசாயிகளுக்கு   அஞ்சலி செலுத்தி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.    வேளாண் திட்டத்திற்கு எதிராகவும், தமிழக அரசு இந்த சட்டத்திற்கு ஆதரவு வழங்கக் கூடாது என வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

போராட்ட பகுதியில், ஏராளமான அதிரடி படையினர் கவச உடையில் குவிக்கப்பட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

இதனிடையே, போராட்டத்திற்கு வரும் விவசாயிகளை தடுக்கும் விதமாக தஞ்சை நகருக்கு வரும் அனைத்து சாலைகளிலும் தடுப்புகள் ஏற்படுத்தி, போலீசு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு போராட்டத்திற்கு  வருகின்ற விவசாயிகளை கைது செய்துவருகிறது. காவல்துறையின் தடையை மீறி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுவருகின்றனர்.

தஞ்சை பனகல் கட்டிடம் அருகில் காத்திருப்பு போராட்டத்திற்கு அனுமதி அளித்த காவல்த்துறை பலவேறு தடைகளை உருவாக்கியது. நாற்காலி எடுத்துவர தடைவிதித்தது. சாமியானா பந்தல் போட தடைவிதித்தது. தடைகளை கடந்து போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

14-12-2020








No comments:

Post a Comment