Wednesday, 2 September 2026
அச்சமே ஆன்மீகத்தின் ஊற்றுக் கண்!
Friday, 28 August 2026
தையூர்: சாதி ஆணவம் மட்டுமல்ல, வர்க்க ஆணவமும் படுகொலை செய்யும்!
ஆனால், அண்மையில் செங்கல்பட்டு மாவட்டம் தையூர் பகுதியில் நடந்த படுகொலை, நமது சமூக ஆய்வை அடுத்த தளத்திற்கு நகர்த்தியிருக்கிறது.
பறையர் சாதியைச் சேர்ந்த, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரவீன்குமார் என்கிற ஒரு ஏழை இளைஞன், அதே பறையர் சாதியைச் சேர்ந்த வசதியான வீட்டுப் பெண்ணைக் காதலித்ததற்காகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான்.
கொலையுண்ட இளைஞரின் தாயார், "வசதி இல்லை, பணம் இல்லை; யார் வந்து கேட்கப் போகிறார்கள் என்று இப்படிச் செய்துவிட்டார்கள்" என்று கூறியிருப்பது, இந்தக் கொலையின் பின்னால் செயல்பட்ட பொருளாதார அதிகார உறவை வெளிப்படையாகச் சுட்டிக்காட்டுகிறது.
எனவே, தையூரில் நடந்தது சாதி வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்ட வழக்கமான ஆணவப் படுகொலை அல்ல; ஒரே சாதிக்குள் பொருளாதார ஏற்றத்தாழ்வின் அடிப்படையில் நிகழ்ந்த வர்க்க ஆணவப் படுகொலை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
இது நம்மை ஒரு முக்கியமான கேள்வியை நோக்கி நகர்த்துகிறது: ஆணவப் படுகொலைகளுக்கு அடிப்படை சாதி மட்டும்தானா? அல்லது பொருளாதார ஏற்றத்தாழ்வும் வர்க்க ஆதிக்கமும் அவற்றில் செயல்படுகின்றனவா?
நகர வாழ்வும் கிராமப்புறச் சாதி–வர்க்க உறவுகளும்
நகர்ப்புறங்களில் கல்வி, வேலைவாய்ப்பு, தனிநபர் வருமானம், இடப்பெயர்வு போன்ற காரணிகளால் குடும்பம் மற்றும் சாதி சார்ந்த நேரடி கட்டுப்பாடுகள் சில நேரங்களில் தளர்கின்றன. பொருளாதாரச் சுயாதீனம் அதிகரிக்கும்போது, தனிநபரின் காதல் மற்றும் திருமணத் தேர்வுகளும் ஓரளவு சுதந்திரம் பெறுகின்றன. ஆனால் இதனால் நகரங்களில் சாதி ஆதிக்கம் மறைந்துவிட்டது என்று பொருள் கொள்ள முடியாது.
கிராமப்புறங்களில் நிலைமை இன்னும் சிக்கலானது. பல பகுதிகளில் நிலஉடைமை உறவுகள், சாதி ஆதிக்கம், குடும்ப அதிகாரம், சமூகக் கட்டுப்பாடு ஆகியவற்றின் எச்சங்கள் இன்னும் வலுவாகச் செயல்படுகின்றன.
அதே நேரத்தில், தையூர் போன்ற சம்பவங்கள் இன்னொரு உண்மையையும் நமக்குக் காட்டுகின்றன: ஒரே சாதிக்குள் இருந்தாலும் பொருளாதார அதிகாரத்தில் ஏற்றத்தாழ்வு இருந்தால், அந்த ஏற்றத்தாழ்வே மனித உறவுகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரமாக மாற முடியும்.
சாதியும் வர்க்கமும்: இந்தியச் சூழலில்
சாதியும் வர்க்கமும் ஒரே தட்டில் வைத்து சமன்படுத்த முடியாது; இரண்டும் தன்மையில் வேறுபட்டவை.
சாதி என்பது பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரித்து நிரந்தர சமூகப் படிநிலையில் நிறுத்தும் அமைப்பு — இதை வெறும் பொருளாதார வேறுபாட்டோடு ஒப்பிட முடியாது. வர்க்கம் என்பது உற்பத்திச் சாதனங்களுடனான மனிதர்களின் உறவு, சொத்து உடைமை, உழைப்பு மற்றும் பொருளாதார அதிகாரம் ஆகியவற்றோடு தொடர்புடையது.
ஆனால் இந்தியச் சமூகத்தின் தனித்துவம் என்னவென்றால், இரண்டும் ஒன்றிலிருந்து ஒன்று முற்றிலும் பிரிந்து இயங்குவதில்லை. வரலாற்றில் நிலம், கல்வி, தொழில், அதிகாரம் ஆகியவை குறிப்பிட்ட சாதிக் குழுக்களிடம் குவிந்திருந்தன — சாதி ஆதிக்கமும் பொருளாதார ஆதிக்கமும் ஒன்றுக்கொன்று துணைபுரியும் உறவுகளாக வளர்ந்துள்ளன.
இதன் பொருள் ஒரே சாதியைச் சேர்ந்த அனைவரும் ஒரே வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதல்ல. ஒரே சாதிக்குள்ளேயும் பொருளாதார ஏற்றத்தாழ்வு உருவாகிறது — அந்த வேறுபாடு ஒரு கட்டத்தில் குடும்ப அதிகாரமாக மாறும்போது, அது காதல் மற்றும் திருமணத் தேர்வுகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரமாகவும் மாறுகிறது. தையூர் சம்பவம் இந்த இரட்டை இயங்கியல் ஐப்பசியில் புரிந்துகொள்வதற்கான ஒரு முக்கியமான நிகழ்வாக அமைகிறது.
சட்டமா? சமூக மாற்றமா?
ஆணவப் படுகொலைகளுக்குத் தனிச் சட்டம் அவசியம் — குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கவும், பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கவும் அது இன்றியமையாதது. ஆனால் சட்டம் மட்டும் சமூகத்தின் அடிப்படை உறவுகளை மாற்றிவிட முடியாது.
சாதி ஆதிக்கத்தை உருவாக்கும் சமூகக் கட்டமைப்புகளையும், பொருளாதார ஆதிக்கத்தை உருவாக்கும் வர்க்க உறவுகளையும் மாற்றுவதற்கான போராட்டமும் அவசியம். சாதி முற்றிலுமாக ஒழிக்கப்படும் வரை சாதி ஆணவப் படுகொலைகளும், வர்க்க வேறுபாடுகள் களையப்படும் வரை வர்க்க ஆணவப் படுகொலைகளும் தொடரும்.
சாதி இயக்கங்களின் மௌனமும் வர்க்கப் பார்வையும்
தையூர் படுகொலை குறித்து பேசும்போது, பட்டியல் சாதி இயக்கங்களும் அடையாள அரசியல் பேசுபவர்களும் ஏன் இந்த பொருளாதாரப் பரிமாணத்தைப் பேசுவதில்லை?
தையூரில் கொல்லப்பட்ட இளைஞனும் பட்டியல் சாதியைச் சேர்ந்தவன்தானே? அப்படியானால், ஒரே சாதிக்குள் பொருளாதார ஏற்றத்தாழ்வு எவ்வாறு அதிகாரமாக மாறுகிறது என்பதையும் நாம் பேச வேண்டாமா?
அடையாள அரசியலுக்கு அப்பாற்பட்ட மார்க்சிய–லெனினிய வர்க்கப் பார்வை இருந்தால்தான், தையூரில் நடந்தது சாதியைத் தாண்டி செயல்பட்ட வர்க்க ஆணவம் என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.
ஆனால் இதன் பொருள் சாதி ஆணவப் படுகொலைகளைப் பின்னுக்குத் தள்ளுவது அல்ல. மாறாக, சாதி ஆணவப் படுகொலைக்கு எதிரான போராட்டமும், வர்க்க ஆணவப் படுகொலைக்கு எதிரான போராட்டமும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல; அவை இரண்டும் சுரண்டல் மற்றும் ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தின் வெவ்வேறு தளங்கள்.
சாதியாலும் வர்க்கத்தாலும் ஒரே சமயத்தில் எதிரெதிர் திசைகளில் இழுக்கப்படும் தமிழக உழைக்கும் மக்களுக்கு, இரண்டையும் ஒருங்கே புரிந்துகொள்ளும் கண்ணோட்டம் இன்று முன்பைவிட அதிக அவசியமாகியுள்ளது.
தையூர் நமக்கு உணர்த்தும் பாடம் இதுதான்: ஆதிக்கம் என்பது சாதியின் பெயரால் மட்டுமல்ல; பணத்தின் பெயராலும் செயல்படும். ஒரே சாதி என்ற அடையாளம் மட்டும் இருவரையும் சமமானவர்களாக்கிவிடாது. அந்த உண்மையை நாம் கண்டுகொள்ளும் வரை, தையூர் நமக்கு விடை கேட்டுக்கொண்டே இருக்கும்.
— ஊரான்
Thursday, 27 August 2026
ஆற்றுப்படுகைகளும் நுகர்வுப் பயணங்களும்! நேபாளம் உணர்த்தும் பாடம் என்ன?
Tuesday, 25 August 2026
'இயம்' என்றால் என்ன? பெரியார், அம்பேத்கர் கருத்துகள் கோட்பாடா? சிந்தனையா?
Friday, 14 August 2026
இந்திய அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பு இயக்கக் கலந்துரையாடல் கூட்டம் – இராணிப்பேட்டை
Tuesday, 11 August 2026
மிடுக்கு நடிகரின் ‘ஆன்லைன்’ சரக்கு!
- கடை ஊழியர் – விநியோகஸ்தர் கூட்டணி: இணையதளத்தில் இருப்பு இருப்பதாகக் காட்டிப் பணம் செலுத்தினாலும், நேரில் செல்லும்போது “சரக்கு இல்லை” என்று கூறி ஆர்டர்களை நிராகரிக்கும் போக்கு நிலவுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
- MRP கூடுதல் விலை கட்டாயமா?: ஆன்லைனில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்த பிறகும், நேரில் சென்று பெறும்போது வழக்கமான ரூ.10 கூடுதல் தொகையைக் கடை ஊழியர்கள் கேட்க மாட்டார்கள் என்பதற்கு அரசுத் தரப்பில் எந்த உறுதியான நடைமுறைப் பாதுகாப்புமில்லை.
- பெயரளவில் நவீனமயம்: வீடுகளுக்கே தேடி வராமல், ஆன்லைனில் பதிவு செய்துவிட்டு மீண்டும் கடைக்குச் சென்று வரிசையில் நின்று வாங்கி வர வேண்டும் எனில், இது வெறும் ‘டோக்கன் சிஸ்டம்’ அல்லது முன்பதிவுதானே தவிர, குடிகாரர்களுக்கு எந்தப் பெரிய மாற்றத்தையும் தரப்போவதில்லை.
- குடும்ப அமைப்பின் சீரழிவு: பிறர் முன்னிலையில் புகைபிடிப்பதையோ அல்லது மது அருந்துவதையோ அவமானமாகக் கருதும் பண்பாட்டு மரபு கொண்ட தமிழ்நாட்டில், ‘ஆன்லைன் டாஸ்மாக்’ சாராயத்தை எளிதில் அணுகக்கூடிய ஒரு பொருளாக மாற்றுகிறது.
- குடும்பச் சூழல் மற்றும் குழந்தைகளின் நிலை: ஒருவேளை எதிர்காலத்தில் ஆன்லைன் மூலம் வீட்டிற்கே சாராயம் விநியோகம் செய்யப்படும் சூழல் உருவானால், வீட்டின் கதவைத் திறக்கும் சிறு குழந்தைகளும், குடும்பத்தினரும் அந்தப் பார்சலை நேரடியாகப் பெறவேண்டிய அவலம் உருவாகும். வீட்டிற்குள் சாராயம் நேரடியாக நுழைவது என்பது, குழந்தைகளின் பிஞ்சு மனங்களில் சாராயம் குறித்த கூச்சத்தைக் குறைத்து, அதை ஒரு சாதாரண அத்தியாவசியப் பொருளாகப் பார்க்கும் தவறான மனநிலையைச் சிறுவயதிலேயே உருவாக்கிவிடும்.
- பயத்தின் தடுப்புச்சுவர் உடைதல்: "கடையில் வரிசையில் நின்று வாங்கினால் நாலு பேர் தவறாக நினைப்பார்கள்" என்ற அச்சமே பல இளைஞர்களையும், புதியவர்களையும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகாமல் தடுத்து நிறுத்தும் காரணியாக இதுவரை இருந்து வருகிறது. ஆன்லைன் முன்பதிவு மூலம் கடையில் சில வினாடிகளில் வாங்கிக் செல்லும் வசதி, இந்த சமூகத் தடுப்புச்சுவரை முற்றிலும் தகர்த்துவிடும்.
Sunday, 2 August 2026
வறண்டு கிடக்கும் டெல்டா; உளறிக் கொட்டும் அமைச்சர்!
- முரண்பாட்டின் உச்சம்: ஸ்டாலின் சொன்னால் கர்நாடக காங்கிரஸ் அரசு கேட்கும் என்றால், கடந்த காலங்களில் ஜூன் மாதத்திலேயே குறுவைச் சாகுபடிக்கு நீர் திறக்கப்பட்ட போது, "ஸ்டாலின் கேட்டுக்கொண்டதால்தான் கர்நாடகா காங்கிரஸ் நீர் திறந்தது" என்று இவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?
- முட்டாள்தனமான குற்றச்சாட்டு: தன் சொந்த மாநில விவசாயிகள் நீரின்றிக் கருகி அழியும் போது, தண்ணீர் பெற்றுத்தர வக்கற்றவர்கள் இப்படி பொறுப்பற்ற ஒரு மலிவான அரசியல் கூத்து அரங்கேற்றுகின்றனர்.
- கர்நாடக அரசியலின் உண்மை: மேகதாட்டு அணை கட்டுவதையே நோக்கமாகக் கொண்டு, தமிழகத்திற்கான உரிமைகளை மறுக்கும் கர்நாடக காங்கிரசின் கன்னட இனவெறி அரசியலை மறைத்துவிட்டு, அதற்குத் தூபமிடும் வகையில் பேசுவது யாருக்கான அரசியல்?
Saturday, 1 August 2026
அறிவியல்–தொழில்நுட்பத்தில் இந்தியா ஏன் பின்தங்கியது? கீழடி உணர்த்தும் பாடம்!
- உழைப்பும் கல்வியும் இணையும் இடத்தில் புதிய கண்டுபிடிப்புகள் தோன்றுகின்றன.
- புதிய கண்டுபிடிப்புகள் நவீன உற்பத்திக் கருவிகளை உருவாக்குகின்றன.
- உற்பத்தி பெருகும்போது நாட்டின் பொருளாதாரமும் அறிவியல் திறனும் வளர்கின்றன.
- அதுவே ஒரு நாட்டை முன்னேறிய நாடாக மாற்றுகிறது.
Friday, 31 July 2026
தமிழ் மக்கள் இசை விழா சிறக்க நிதி தாரீர்!
Wednesday, 22 July 2026
வடலூருக்குத் தேவை 'தூய்மை'... 'புனிதம்' அல்ல!
வடலூரைப் 'புனித நகரமாக' அறிவித்தால் அங்கு என்ன நடக்கும்?
வடலூர் நகர எல்லைக்குள் ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சிக் கடைகள் (கவிச்சிக் கடைகள்) முற்றிலுமாகத் தடை செய்யப்படும். மக்கள் தங்கள் வீடுகளில் கூட அசைவம் சமைக்க முடியாது!
இறைச்சி சாப்பிட விரும்பினால், மக்கள் வடலூர் நகரை விட்டு வெளியே சென்று, அங்கேயே சாப்பிட்டு, அதைச் செரித்து, அங்கேயே கழிவை வெளியேற்றிவிட்டுப் புனிதர்களாகத்தான் வடலூருக்குத் திரும்ப வேண்டும்!
என்னவொரு அராஜகமான கோரிக்கை இது! மனிதர்களின் உணவு உரிமையைப் பறிக்கும் இந்த வன்கொடுமையை என்னவென்று சொல்வது?
'கவிச்சி' (அசைவம்) என்பது அருவருப்பானது, தீட்டானது என்பது அப்பட்டமான பார்ப்பனிய-சனாதனக் கருத்து.
வரலாற்றில் ஒடுக்கப்பட்ட, தீண்டாமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு உணவு மறுக்கப்பட்ட போது, அவர்கள் உயிர் வாழச் செத்த மாட்டையும் விலங்குகளையுமே உண்ண வேண்டிய சூழல் இருந்தது. தீண்டத்தகாதவர்கள் கவிச்சி உண்ணுவதால் கவிச்சியும் தீட்டாகக் கருதப்பட்டது. காலப்போக்கில், அசைவ உணவே உடலுக்கு வலு சேர்க்கும் மலிவான சத்துணவு என்பதால் அது உழைக்கும் மக்களின் முதன்மை உணவாக மாறியது.
'புனித' நகரமான ஹரித்துவாரில் அசைவ உணவு கிடைக்காமல் மக்கள் எங்ஙனம் அவதிப்படுகிறார்கள் என்பதை நேரில் பார்த்தவன் நான். எனவே, வடலூரைப் 'புனித நகரமாக' அறிவிக்கக் கோரி உழைக்கும் மக்களின் உணவு உரிமையில் கைவைக்கும் இந்த நபர்களின் கோரிக்கையை, அசைவப் பிரியர்களும் உழைக்கும் மக்களும் உறுதியாக முறியடிக்க வேண்டும்!
வடலூருக்கு தேவையானது புனிதமா? தூய்மையா?
வடலூருக்கு உண்மையில் தேவையானது புனிதம் அல்ல; தூய்மை. சாக்கடை நீர் ஓடாத தெருக்கள், குப்பைகள் இல்லாத பொதுவெளிகள், அனைவருக்கும் குடிநீர், சுகாதாரம், மருத்துவ வசதிகள் கொண்ட நகரம்தான் மக்களுக்கு தேவை. ஆனால் மக்களின் உணவுத் தட்டில் என்ன இருக்க வேண்டும் என்று கட்டளையிடும் 'புனித நகரம்' யாருக்குத் தேவை?
வள்ளலாரை சனாதன உலைக்களத்திற்குள் தள்ளும் சதி!
உண்மையிலேயே வள்ளலார் விலங்கு வதைக்கு எதிராகப் பேசியதை விட, சனாதன-பார்ப்பனிய வதைக்கு எதிராகப் பேசியதுதான் அதிகம்! அவர் ஒரு சமரசமற்ற சனாதன எதிர்ப்புப் போராளி. அப்படிப்பட்ட வள்ளலாரை மீண்டும் சனாதனப் பிடிக்குள் தள்ளி, அவரது பெயரால் 'புனிதக் கூச்சல்' போடுவது அவரது தத்துவத்திற்கே செய்யும் துரோகமாகும்.
வள்ளுவரின் புலால் மறுப்பும் காலச் சூழலும்
வள்ளுவர் கூட 'புலால் உண்ணாமை' குறித்துத் திருக்குறளில் (அதிகாரம் 26) பத்து குறட்பாக்களை எழுதியுள்ளார். வேளாண் உற்பத்தி பெரிய அளவில் பெருகாத, வேட்டையாடி உண்பதே வழக்கமாக இருந்த அக்காலகட்டத்தில் உயிர் பலியைத் தடுப்பதற்காக வள்ளுவர் அதை எழுதி இருக்கக்கூடும்.
ஆனால், அன்றைய வரலாற்றுச் சூழலில் எழுதப்பட்ட ஒன்றை இன்றைக்கும் அப்படியே பொருத்த முடியாது. இன்றைக்கு அசைவ உணவே உழைக்கும் மக்களுக்கு மலிவாக வலு சேர்க்கக்கூடிய உணவாக இருக்கும் போது, வள்ளுவரை அப்படியே பின்பற்ற முடியாது.
எந்தவொரு அறநெறியையும் அந்தந்தக் காலச் சூழலுக்கு ஏற்பப் புரிந்துகொள்ள வேண்டுமே தவிர, அதில் ஆன்மீகப் பொருள் தேடி மூர்க்கமாகப் பின்பற்றுவது அறிவீனம்!
அசைவமும் குற்றமும்: அறிவியலுக்குப் புறம்பான கட்டுக்கதை!
"அசைவம் சாப்பிட்டால் முரட்டு குணம் வரும், குற்றம் செய்வான்" என்று சனாதனம் பேசுகிறது. இது முற்றிலும் அறிவியலுக்குப் புறம்பான கட்டுக்கதை! அசைவ உணவு உண்பவர்கள் மட்டும்தான் குற்றம் செய்கிறார்களா? சைவப் போர்வையில் வலம் வரும் உத்தமர்கள் யாரும் குற்றம் செய்வதில்லையா?
தூய்மை-தீட்டு (purity-pollution) என்கிற உயர்மை-தாழ்மை என்கிற இந்து மதக்கோட்பாடுதான் சாதியத் தீட்டையும் வாழ்வியல் தீட்டையும் வரையறுக்கிறது. எங்கெல்லாம் புனிதம் பேசப்படுகிறதோ அங்கெல்லாம் தீட்டும் சேர்ந்தே இயங்குகிறது.
முடிவுரை
வடலூரைப் புனித நகரமாக அறிவிக்கக் கோருவதன் உள்ளே ஒளிந்திருப்பது மறைமுகத் தீண்டாமையே அன்றி வேறில்லை. எனவே, 'புனிதம்' என்ற பெயரில் மக்களின் உணவு உரிமையைப் பறிக்கவும் சாதியத் தீட்டைத் திணிக்கவும் யார் பேசினாலும், அவர்கள் மீது வன் கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் (SC/ST Act) கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்!
வள்ளலார் வாழ்ந்த வடலூரை குப்பைகள் இல்லாத, சாக்கடைகள் இல்லாத, நோய்நொடியற்ற "தூய்மை நகரமாக" மாற்ற அரசு நடவடிக்கை எடுக்கட்டும். அதுதான் மக்கள் வாழத் தகுதியான நகரமாக இருக்கும். அதை விடுத்து, 'புனித நகரம்' என்ற பெயரில் மக்களின் வாழ்வுரிமையை உணவோடு சேர்த்துப் பறிக்க நினைப்பது அப்பட்டமான சனாதன பாசிசமே!
— ஊரான்
Monday, 13 July 2026
மறையும் முன்பே தணிந்த அக்கினி!
Thursday, 9 July 2026
நோபல் பரிசும் ஏகாதசி விரதமும்: அறிவியல் உண்மையா? ஆன்மீகப் புனைவா?
- ஏன் காலரா, அம்மை, பிளேக் போன்ற நோய்கள் வந்தபோது லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தார்கள்?
- ஏன் தடுப்பூசிகள், கிருமிக் கோட்பாடு, பென்சிலின் போன்ற மருத்துவ முன்னேற்றங்கள் நவீன அறிவியல் வளர்ச்சிக்குப் பிறகுதான் உருவாகின?
- ஏன் மனிதகுலம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நோய்களுடன் போராட வேண்டியிருந்தது?

.jpeg)

.jpeg)












