Tuesday, 27 June 2023

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி: வெள்ளிவிழா மாநாட்டுச் செய்திகள்!...3

பொதுக் கூட்டம்

"தீவிரமாகும் கார்ப்பரேட் சுரண்டல் - காவி பாசிசம் மோதி வீழ்த்துவோம்!" எனும் முழக்கத்துடன் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் வெள்ளி விழா மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் 25.06.2023 அன்று மாலை சென்னை சைதை தேரடியில் பு.ஜ.தொ.மு மாநிலத் தலைவர் தோழர் இல.பழனி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் அவர்கள் பு.ஜ.தொ.மு கடந்து வந்த பாதை பற்றி அறிமுக உரையாற்றினார்.  


இல்.பழனி

முகுந்தன்

முன்னிலை

ம.க.இ.க கலைக்குழு பொறுப்பாளர் தோழர் லதா, பு.ஜ.தொ.மு சென்னை உறுப்பினர் தோழர் பேச்சியம்மாள், மக்கள் அதிகாரம் சென்னை பொருளாளர் தோழர் வெண்ணிலா ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். 

லதா

பேச்சியம்மாள்

வெண்ணிலா

உரை வீச்சு

பு.ஜ.தொ.மு மாநில பொதுச் செயலாளர் தோழர் லோகநாதன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

தோழர் பிரதீப், அகில இந்திய பொதுச் செயலாளர், IFTU, ஆந்திரா, தோழர் பாலன், பெங்களூரூ உயர்நீதிமன்ற வழக்கறிஞர்,  தோழர் கு.பாரதி, துணை பொதுச் செயலாளர் LTUC, தோழர் ஸ்ரீகுமார், தேசியச் செயலாளர் AITUC, தோழர் ஜெயராமன், துணைத் தலைவர் CITU, வடசென்னை, மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் தோழர் காளியப்பன் மற்றும் தோழர் ராஜூ, மாநில பொதுச் செயலாளர், மக்கள் அதிகாரம் தமிழ்நாடு - புதுவை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

லோகநாதன்

பிரதீப்

பாலன்
பாரதி

ஸ்ரீகுமார்

ஜெயராமன்

ராஜூ

காளியப்பன்

கலை நிகழ்ச்சி

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மைய கலைக்குழு தோழர்கள் தோழர் கோவன் தலைமையில் சிறப்பானதொரு கலை நிகழ்ச்சி வழங்கினர்.












ஒரு மாதமாக காலமாக தமிழகமெங்கும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் மேற்கொண்ட விரிவான பிரச்சாரமும், தோழர்களின் கடின உழைப்பும் இந்த மாநாட்டை வெற்றி பெறச் செய்துள்ளது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி என்ற பெயரை பயன்படுத்திக் குழப்பத்தை ஏற்படுத்தி வரும் வினவு மற்றும் செங்கனல் கும்பலைச் சேர்ந்த சிறு கூட்டம் போலிகள் என்பதை இந்த மாநாடு உணர்த்தி உள்ளது. 

மேலும், தீவிரமாகும் கார்ப்பரேட் சுரண்டல் மற்றும் காவிப் பாசிசத்தை வீழ்த்துவதற்கு தொழிலாளர்கள் ஒரு குடையின் கீழ் அணி திரள வேண்டும் என்பதை இந்த மாநாடு அழுத்தமாக பதிவு செய்துள்ளது.

தமிழ்மணி 

தொடர்புடைய பதிவுகள்


புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி: வெள்ளிவிழா மாநாட்டுச் செய்திகள்!...2


புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி: வெள்ளிவிழா மாநாட்டுச் செய்திகள்!...1

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி: வெள்ளிவிழா மாநாட்டுச் செய்திகள்!...2

மாநாட்டுச் செய்திகள்

தீவிரமாகும் கார்ப்பரேட் சுரண்டல் - காவி பாசிசம் மோதி வீழ்த்துவோம் ! எனும் தலைப்பில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் வெள்ளி விழா மாநாடு 25.06.2023 அன்று காலை சென்னை சைதாப்பேட்டையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.


மலர் வெளியீடு

பு.ஜ.தொ.மு-வின் முன்னாள் மாநில தலைவரும், மூத்த தோழருமான தோழர் அ.முகுந்தன் அவர்கள் மலரை வெளியிட தோழைமை அமைப்புகளின் பிரதிநிதிகளும், பெங்களூர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தோழர் பாலன் அவர்களும் பெற்றுக் கொண்டனர்.

தோழர் காளியப்பன், மாநில பொருளாளர், மக்கள் அதிகாரம்

பெங்களூரு வழக்கறிஞர் தோழர் பாலன்

தோழர் சேகர், விவசாயிகள் விடுதலை முன்னணி, தேனி

வழக்கறிஞர் ஜானகிராமன், தலைமைக் குழு, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

தோழர் அன்பு, மாநில பொதுச் செயலாளர், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

பொதுச் செயலாளர் அறிக்கை

மாநிலத் தலைவர் இல.பழனி அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், முன்னாள் மாநில பொதுச் செயலாளர் தோழர் முகுந்தன் அவர்களும், முன்னாள் மாநில இணைச் செயலாளர் தோழர் சுதேஷ்குமார் அவர்களும் அறிமுக உரை நிகழ்த்தினர்.

அதன் பிறகு பு.ஜ.தொ.மு வின் 25 ஆண்டுகால தொகுப்பறிக்கையை  மாநில பொதுச் செயலாளர் தோழர் லோகநாதன் அவர்கள் மாநாட்டில் முன் வைத்தார்.

மேலும், தொழிலாளர்களை பணி அமர்த்துவதில் தொழில் நிறுவனங்கள் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள், தொழிலாளர்களின் மனநிலை, GIG தொழிலாளர்களின் மனநிலை குறித்தும், தொழிலாளி வர்க்கத்தின் முன் நிற்கும் சவால்கள் போன்றவற்றையும் எடுத்துரைத்தார். தொழிலாளர்கள் நிரந்தரம், காண்டிராக்ட், ப்ராஜெக்ட் ஒர்கர்ஸ் போன்ற முதலாளித்துவம் ஏற்படுத்தியுள்ள பேதங்களை கடந்து பாட்டாளி வர்க்கப் பண்புடன் அமைப்பாகத் திரண்டு சமூகத்தை முன் நகர்த்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மாநில பொருளாளர் தோழர் ஜெயராமன் அவர்கள் நிதி அறிக்கையைச் சமர்ப்பித்தார்.

மாநில துணைத் தலைவர் தோழர் M.K.K சரவணன் அவர்கள் மாநாட்டு தீர்மானங்களை வாசித்தார். மாநாட்டில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் பொதுக்குழுவால் ஏற்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

மாநில இணைச் செயலாளர் தோழர் K.மகேந்திரன் அவர்கள் நன்றி உரையாற்றினார். 

பழனி

முகுந்தன்

சுதேஷ்குமார்

லோகநாதன்

ஜெயராமன்

சரவணன்

மகேந்திரன்

வாழ்த்துரை

மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மக்கள் அதிகாரம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஆகிய தோழமை அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பெங்களூரு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தோழர் பாலன் அவர்களும் மாநாட்டில் உரையாற்றினர். 

வழக்கறிஞர் பாலன்

காளியப்பன், மாநில பொருளாளர், மக்கள் அதிகாரம்

ஜானகிராமன், PRPC, தலைமைக் குழு

அன்பு, மாநில பொதுச் செயலாளர், RSYF

கோவன், மாநில பொதுச் செயலாளர், மகஇக

சேகர், விவசாயிகள் விடுதலை முன்னணி, தேனி

கலை நிகழ்ச்சிகள் 

மாநாட்டில் மக்கள் கலை இலக்கியக் கழக கலைக் குழுத் தோழர்களின் புரட்சிகர கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

இறுதியாக பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் மாநாடு நிறைவடைந்தது. 

கலை நிகழ்ச்சி


பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதம்

மாலையில் நடைபெற்ற மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்ட நிகழ்ச்சித் தொகுப்பு அடுத்த தொடரில்...

தமிழ்மணி 

தொடர்புடைய பதிவுகள்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி: வெள்ளிவிழா மாநாட்டுச் செய்திகள்!...1

1990 களின் தொடக்கத்தில் திருச்சி பெல் நிறுவனம், நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம் மற்றும் கோவையில் சில ஆலைகளில் "தொழிலாளர் பிரச்சாரக் குழு" என்ற பெயரில் செயல்பட்ட போது உள்ள அனுபவங்களும், அதன் பிறகு திருச்சி பெல் நிறுவனத்தில், பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் (BPWU-இந்தச் சங்கத்தில் உள்ள சில தோழர்களின் அறியாமையினால் இச்சங்கம் தற்போது செங்கனல் கும்பலோடு கூடி குலாவிக் கொண்டிருக்கிறது) என்ற பெயரில்  தொழிற்சங்கமாகச் செயல்பட்ட அனுபவங்களும், அதிலும் குறிப்பாக பெல் நிறுவன கேண்டின் ஊழலை வெளிக்கொண்டு வந்தது, பெல் நிறுவன போனஸ் போராட்டம் அதைத் தொடர்ந்து தோழர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட அனுபவங்களும்தான் 1998 இல் "புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி" தோன்றுவதற்கான முன் களப்பணிகள்.

திருச்சி பெல் நிறுவன தொழிற்சங்கப் போராட்டம் நீண்ட நெடிய அனுபவத்தை கொண்டது மட்டுமல்ல பல்வேறு இன்னல்களையும் வேலை நீக்கம் உள்ளிட்ட பல்வேறு இழப்புகளையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டவை. 

இத்தகைய பின்புலத்தோடு தொடங்கப்பட்ட புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சென்னை, வேலூர், ஓசூர், கோவை, திருச்சி புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிளைகள் அமைத்து ஒரு போர்க்குணமிக்க தொழிற்சங்கமாகப் பரிணமித்தது. மார்க்சிய-லெனினிய பின்புலத்தைக் கொண்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் வளர்ச்சி கண்டு ஆலை முதலாளிகளும் அதிகார வர்க்கமும் அரண்டு போயினர்.

2021 ஆண்டு வாக்கில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் இருந்து வெளியேறிய ஒரு சிறு கும்பல், வினவு கும்பலோடு சேர்ந்து கொண்டு ஒரு வெள்ளி விழா மாநாட்டை நடத்தி தாங்கள்தான் உண்மையான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி என்பதை நிரூபிக்க முயன்று தோற்றுப்போன வேளையில் தொடர்ந்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி என்ற பெயரிலேயே செயல்பட்டுக் கொண்டு குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அதன் பிறகு 2022 ஆம் வாக்கில் அவர்களுக்குள் ஏற்பட்ட குழு சண்டையால் வினவு கும்பலிடமிருந்து பிரிந்து சென்ற மற்றும் ஒரு சிறு கும்பல் செங்கனல் கூட்டத்தோடு சேர்ந்து கொண்டு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி என்ற பெயரிலேயே செயல்பட்டுக் கொண்டு குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

இத்தனைக் குழப்பங்களுக்கும் இடையில், தோழர்கள் மகஇக கோவன், மக்கள் அதிகாரம் காளியப்பன், ராஜூ, PRPC வாஞ்சிநாதன் அவர்களோடு தொடர்புடைய தோழர் பழனி மற்றும் தோழர் லோகநாதன் தலைமையில் செயல்பட்டு வந்த உண்மையான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தொடர்ந்து பல்வேறு போராட்டங்களின் மூலம் தன்னை புதுப்பித்துக் கொண்டும் வளர்ச்சி அடைந்து கொண்டும் செயல்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து பிரம்மாண்டமான 25 ஆவது வெள்ளி விழா மாநாட்டை புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி 25.06.2023 அன்று சென்னை, சைதாப்பேட்டையில் நடத்திக் காட்டி தனது பலத்தை நிறுவியுள்ளது. எனவே தொழிலாளி வர்க்கம் சிறுபான்மை போலிகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் அய்க்கியமாவதன் மூலமாகத்தான் தனக்கான கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும்.

வெள்ளிவிழா மாநாட்டுச் செய்திகள் மற்றும் புகைப்படங்கள் அடுத்த தொடரில்...

தமிழ்மணி

தொடர்புடைய பதிவுகள்

இழி குணம்: போனஸ் போராட்டமும் களப்பலியும்!.....8

இழி குணம்: நாலரை கோடி 'பெல்' உணவக ஊழல்!.....7