மோடி அரசின் வேளாண் திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் நடக்கும் விவசாயிகளின் போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயப் போராளிகளுக்கு வீரவணக்க நிகழ்வு நடந்த அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பாக விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று தமிழகம் எங்கும் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் உயிர் நீத்த போராளிகளுக்கு இன்று 20.12.2020 அஞ்சலி செலுத்தினர்.
விழுப்புரம்
காலை 11 மணியளவில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் அகில இந்திய விவசாயிகள் போராட்டக் ஒருங்கிணைப்புக் குழுவின் விழுப்புரம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலியமூர்த்தி தலைமையில் இந்நிகழ்வானது நடைபெற்றது. அதில் ஜனநாயக அமைப்புகள், மக்கள் அதிகாரம் , தமிழக விவசாயிகள் சங்கங்கள் கலந்துகொண்டு விவசாயிகள் போராட்டத்தில் உயிர்நீத்த 33 தியாகிகளின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம்! வேளாண் மற்றும் தொழிலாளர் விரோத மூன்று சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டி சபதம் ஏற்போம்! என உணர்வுபூர்வமாக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பின்பு விவசாயப் போராளிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
விருத்தாச்சலம்
புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லி போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் இன்று காலை 10 மணி அளவில் விருத்தாச்சலம் பாலக்கரையில் மக்கள் அதிகாரம் தலைமையில் மற்றும் அனைத்து கட்சிகளின் சார்பில் உயிர் தியாகம் செய்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது .மேலும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் போடப்பட்டது பின்பு உயிர் தியாகம் செய்த தியாகிளுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்....
மக்கள் அதிகாரம்
கடலூர்
டெல்லி விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும்!
முகந்தரியாங்குப்பம் கிராமத்தில் உயிர்நீத்த போராளிகளுக்கு வீரவணககம்!
புதிய வேளாண் திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லி போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் (20.12.2020) இன்று இரவு கடலூர் மாவட்டம் முகந்தரியங்குப்பம் கிராமத்தில் டாக்டர் பீமாராவ் படிப்பகம், மற்றும் மக்கள்அதிகாரம் சார்பில் முழக்க பேரணி,மவுன அஞ்சலி போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரி சார்பாக புதிய வேளாண் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் - போந்தூர் கூட்ரோட்டில் விவசாயிகள் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த 33 விவசாய போராளிகளுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் பு.மா.இ.மு மாநில ஒருங்கிணைப்பாளரும், மக்கள் அதிகாரம் தலைமைக்குழு உறுப்பினருமான தோழர்.கணேசன் உரை.
விசாயிகளுக்கு வீரவணக்கம்!
விவசாயிகளின் உரிமைப் போராட்டத்தில் பங்கெடுத்து டெல்லி கடுங்குளிரில் உயிர் நீத்த விவசாய தியாகிகளுக்கான நினைவேந்தலில் சென்னை இளம் வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு நினைவஞ்சலி செலுத்திய தருணம்.
இடம்: வள்ளுவர்கோட்டம்
#Chennai_Young_Advocates
சென்னை வள்ளுவர்கோட்டத்தில் AIKSCC ஒருங்கிணைத்த நினைவேந்தல் கூட்டத்தில் மக்கள் அதிகாரம், புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி சார்பில் தோழர்கள் கலந்துகொண்டனர். இதில் சென்னை மாவட்ட செயலாளர் சாரதி நினைவேந்தல் உரையாற்றினார்.
திருமங்கலம்
தோழமை இயக்கங்கள் மற்றும் மக்கள் அதிகாரம், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்
இன்று திருச்சி காஜாப்பேட்டையில். வேளாண் திருத்தச் சட்டத்தைக் கண்டித்து போராடி உயிர் நீத்த டெல்லி விவசாயிகளுக்கு வீர அஞ்சலி செலுத்தப்பட்டது. இதற்கு பு. மா. இ. மு திருச்சி மாவட்ட அமைப்பாளர் ஹரிச்சந்திரன் தலைமை தாங்கினார். ம. க. இ. க கலைக்குழு தோழர் சத்யா அஞ்சலி உரையாற்றினார். ம. க இ. க தோழர் சரவணன். மக்கள் அதிகாரம் தோழர்செழியன் திராவிடர் விடுதலைக்கழகம் தோழர் புதியவன் அஞ்சலி உரையாற்றினர். கலைக்குழுத்தோழர் லதா நன்றியுரை செழுத்தினார்.
மோடி அரசின் வேளாண் திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லியில் நடக்கும் விவசாயிகளின் போராட்டத்தில் உயிர் நீத்த விவசாய போராளிகளுக்கு வீரவணக்க நிகழ்வு!
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பாக பல்வேறு அமைப்புகள் தமிழகத்தில் வீர வணக்க அஞ்சலி நிகழ்ச்சி ஒவ்வொரு கிராமம் தோறும் நடத்த தீர்மானித்தது.இதனை முன்னிட்டு திருச்சி மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பாக இன்று 20.12.2020 காலை 11.00 மணியளவில் குழுமணி சாலை மேல பாண்டமங்கலம், அரவானூரில் பள்ளிக்கூடம் அருகில் மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தோழர் ராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் பகுதி விவசாயிகள் இளைஞர்கள், சிறுவர்கள், வயதானவர்கள் என விவசாயிகளுக்கு படத்திற்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி, அஞ்சலி செலுத்தினர். வீரவணக்கம் வீரவணக்கம் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தன்னுயிரை தியாகம் செய்த போராடிய விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்துவோம்! அஞ்சலி செலுத்துவோம்! என கோஷமிட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது அஞ்சலி கூட்டத்தில் அதன் ஒரு பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் மதிவாணன் மற்றும் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் கலைக்குழு பாடகர் கோவன் மற்றும் தோழர்.லதா.மகஇக மாவட்ட செயலாளர் தோழர்.ஜீவா,தமிழ் தேச மக்கள் முன்னணி தோழர்.கென்னடி, மக்கள் அதிகாரத்தின் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர்.செழியன் ஆகியோர் வேளாண் சட்டங்களால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை மக்களுக்கு புரியும் வகையில் எளிமையாக பேசினர். கார்ப்பரேட் முதலாளிகளின் லாப வேட்டைக்காக மோடி அரசு கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அளிக்கிறது. விவசாயத்துறை மட்டுமல்ல அனைத்து துறையிலும் கார்ப்பரேட் ஆதிக்கம் செலுத்துகின்றன. கொள்ளை லாபம் அடிக்கின்றன. இதனால் அரசு, மக்களுக்கு மருத்துவம், சுகாதாரம்,கல்வி உள்ளிட்ட சேவைகளை மறுத்து தனியார் மயமாக்கி வாழ வழியற்றவர்களாக மக்களை மாற்றி வருவதை எதிர்த்து தோழர்கள் பேசினர். இறுதியாக மகஇக தோழர் சரவணன் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சி போராடும் விவசாயிகளுக்கு நாம் உறுதுணையாக இருந்து பாதுகாக்க வேண்டும் போராட வேண்டும் என்ற எண்ணத்தை அப்பகுதி மக்களுக்கு உணர்த்தும் வகையில் இருந்தது.
கரூர்
மோடி அரசின் வேளாண் திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் நடக்கும் விவசாயிகளின் போராட்டத்தில் உயிர்நீத்த விவசாய போராளிகளுக்கு வீரவணக்க நிகழ்வு
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பாக பல்வேறு அமைப்புகள் தமிழகத்தில் 20.12.2020 அன்று வீர வணக்க அஞ்சலி நிகழ்ச்சி ஒவ்வொரு கிராமம் தோறும் நடத்த தீர்மானித்துள்ளது.
இதனை முன்னிட்டு கரூர் பகுதியில் காலை 11 மணியளவில் லைட்ஹவுஸ் கார்னர் பெரியார் சிலை முன்பு அகில இந்திய விவசாயிகள் போராட்டக் குழுவின் கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் தலைமையில் இந்நிகழ்வானது நடைபெற்றது அதில் ஜனநாயக அமைப்புகளான மக்கள் அதிகாரம் , சாமானிய மக்கள் நல கட்சி , தந்தை பெரியார் திராவிட கழகம் , தமிழக விவசாயிகள் சங்கம் , சுயாட்சி இந்தியா , பார்வர்ட் பிளாக் கட்சி , விடுதலை சிறுத்தைகள் கட்சி ,
சி பி ஐ என பல்வேறு அமைப்புகள் கலந்துகொண்டு விவசாயிகள் போராட்டத்தில் உயிர்நீத்த 29 தியாகிகளின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம் வேளாண் மற்றும் தொழிலாளர் விரோத மூன்று சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டி சபதம் ஏற்போம் என உணர்வுபூர்வமாக முழக்கங்கள் எழுப்பப்பட்டன பின்பு விவசாயப் போராளிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது
தஞ்சை
பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் துவக்கிவைத்த போராட்டம் 25ஆம் நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. இருபத்தைந்து நாள் போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்த அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழு அரைகூவல் விடுத்தது. தமிழகமெங்கும் வீரவணக்க கூட்டங்கள் 20-21-2020 அன்று நடைபெற்றது. தஞ்சை இரயிலடியில் விவசாயிகள் போராட்டக்குழு ஒருங்கினைப்பாளர் என். வி. கண்ணன் தலைமையில் நடைபெற்றது. மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் தோழர். காளியப்பன் அஞ்சலி உரையாற்றினார்.
No comments:
Post a Comment