26.11.2020 அன்று நடுவண் அரசின் வேளாண் சட்டத் திருத்தம் மற்றும் தொழிலாளர் நலச் சட்டத் திருத்தம் ஆகியவற்றுக்கு எதிராக அனைத்துக் கட்சிகள் நடத்திய அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பு கலந்து கொண்டது.
திருச்சி மண்டலம்-கரூர் மாவட்டம் - மக்கள் அதிகாரம்
விவசாயிகளையும் தொழிலாளர்களையும் நிரந்தர கொத்தடிமைகளாக மாற்றும் புதிய வேளாண் மற்றும் தொழிலாளர் விரோத சட்டத்திற்கு எதிராக நவம்பர் 26 நாடு தழுவிய மறியல் போராட்டம் கரூர் RMS பேருந்து நிலையம் அருகில் சாலை மறியல் செய்யப்பட்டது இந்த சாலை மறியலிற்கு LPF தோழர் V.R.அண்ணாவேலு தலைமை ஏற்று நடத்தினார் மேலும் மறியலில் LPF ,CITU , AICITU , AICCTU , HMS , AIUTUC , MLF , LLF , KADALU - F , மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புக்கள் சார்பில் பெருந்திரளாக சுமார் 200 க்ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் நாட்டு மக்களை அடக்கி ஒடுக்கி வரும் RSS BJP கும்பலிற்கு எதிராக கன்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன பிறகு காவல் துறை அனைவரையும் கைது செய்து மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது .
திருச்சி மண்டலம்-திருச்சி
மக்கள் அதிகாரம்
விவசாயிகள்,தொழிலாளர்கள் அகில இந்திய அளவில் அறிவித்திருந்த சாலை மறியல் போராட்டத்தையொட்டி இன்று திருச்சியில் CPI, CPM தொழிற்சங்கம், விவசாய சங்கங்கள் தலைமையில் சுமார் 1500 பேர் கலந்துகொண்டு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு, அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்கள் மற்றும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் வழக்கறிஞர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சாலை மறியல் செய்து அனைவரும் கைது செய்யப்பட்டு தற்போது மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி மண்டலம் - மணப்பாறை
மக்கள் அதிகாரம்
இன்று நடந்த அகில இந்திய மறியல், வேலை நிறுத்தம் போராட்டத்தில் பல்வேறு விவசாய / தொழிலாளர் சங்கத்தினர் உடன் மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டனர்
திருச்சி மண்டலம் - லால்குடி
மக்கள் அதிகாரம்
லால்குடி ஊராட்சி ஒன்றியத்தில் பேருந்து நிலையம் ரவுண்டனா அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இன்று நடந்த அகில இந்திய மறியல், வேலை நிறுத்தம் போராட்டத்தில் பல்வேறு விவசாய / தொழிலாளர் சங்கத்தினர் உடன் மக்கள் அதிகாரம் தோழர்கள் 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மதுரை மண்டலம்-திருமங்கலம், மக்கள் அதிகாரம்
மக்கள்அதிகாரம்
மதுரை மண்டலம் - மக்கள் அதிகாரம்
சிவகங்கை மாவட்டம்
காளையாா் கோவிலில்
மக்கள் அதிகாரம் மற்றும் தோழமை அமைப்புகளுடன் மறியலில்மக்கள் அதிகாரம்.
மதுரை மண்டலம்-ஒத்தகடை
மக்கள் அதிகாரம்
கடலூர் மண்டலம் - விருத்தாச்சலம்
மக்கள் அதிகாரம்
விசாயிகளையும்,தொழிலாளர்களையும் நிரந்தர கொத்தடிமைகளாக மாற்றும் புதிய வேளாண் மற்றும் தொழிலாளர் விரோத சட்டத்திற்கு எதிராக நவம்பர் - 26 நாடு தழுவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக விருத்தாசலம் பாலக்கரையில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்.
கடலூர் மண்டலம்-கடலூர், மக்கள் அதிகாரம்
நவ-26 விவசாய தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும்!
விவசாயிகள் மீதான தாக்குதலைக் கண்டித்து கடலூரில் ஆர்ப்பாட்டம்!
பாசிச மோடி அரசால் பாராளுமன்றத்தில் எந்தவித கேள்விக்கும் இடமில்லாமல் அவசர அவசரமாக கொண்டுவந்த விவசாய திருத்தச் சட்டம்,தொழிலாளர் நலச் சட்டம் ஆகியவை எதிர்த்து கடந்த ஒரு மாதங்களாக பஞ்சாப்,ஹரியானா உட்பட பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் தொழிலாளர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகிறார்.
இத்தகைய போராட்டத்தின் வலிமையை நிரூபிக்கும் வகையிலும் இந்த பாசிச சட்டங்களை திரும்பப் பெறக் கூடிய வகையிலும் நவம்பர் 26 27 அகில இந்திய சாலை மறியல் என விவசாய சங்கம் தொழிலாளர் சங்கம் அறிவித்தது அதன் அடிப்படையில் நவம்பர் 26 இந்தியா முழுமைக்கும் சாலை மறியல் போராட்டங்களை விவசாயிகள், தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் திரண்டு நடத்தினர்.
பாசிச மோடி அரசு போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது தொழிலாளர் மீது காட்டுமிராண்டித்தனமாக தடி அடி,நீர் பீச்சி அடித்தல்,கண்ணீர் புகை குண்டு வீச்சு என மோசமான தாக்குதலை மோடி அரசு மேற்கொண்டுள்ளது.
விவசாயிகள் மீதான மோடி அரசின் இந்த தாக்குதலை கண்டிக்கும் விதமாக இன்று(27/11/2020) கடலூர் லாரன்ஸ் ரோடு, (ஜாவன்பவன்மாளிகை) அருகே அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு, மக்கள் அதிகாரம்,CITU, தொழிற் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து கண்டன முழுக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் அகில இந்திய விவசாய மாவட்டத் தலைவர் தோழர்.மாதவன் தலைமை தாங்கினார். மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக மண்டல௧்குழு தோழர்.மணிவாசகம், தோழர் மணியரசன் (மாவட்ட செயலாளர்) புமாஇமு, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தகவல்:
தோழர் பாலு
(மண்டல ஒருங்கிணைப்பாளர்), மக்கள் அதிகாரம், கடலூர்.
தொடர்புக்கு:
81108 15963
கோவை மண்டலம் - கோத்தகிரி
மக்கள் அதிகாரம்
கோவை மண்டலம்-கோவை
மக்கள் அதிகாரம்
கோவை மண்டலம்-திரேப்பூர், மக்்கள அதிகாரம்.
கோவை மண்டலம்-பள்ளிப்பாளையம், மக்கள் அதிகாரம்.
சுழன்று வீசும் நிவர் புயலை விட கொடிய கார்பரேட், காவி எடுபிடி மோடியின் விவசாயிகள், தொழிலாளர்கள் விரோத சட்டத் தொகுப்புகளை எதிர்த்து நாடு தழுவிய வேலை நிறுத்த மறியலை பள்ளிபாளையம் பகுதியில் CITU, LPF, AICCTU, LTUC, AITUC, INTUC அமைப்புகள் முன்னின்று நடத்தினர். விவசாயிகள், தொழிலாளர்களுக்கு ஆதரவாக மக்கள் அதிகாரம் அமைப்பினரும் இதில் கலந்து கொண்டனர். காலை 11.00 மணிக்கு துவங்கிய மறியலில் 40கும் மேற்பட்ட தோழர்கள் முழக்கமிட்டு கைதானார்கள். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கொக்கராயன் பேட்டையில் நடைபெற்ற மறியலில் AIAWU, AIKS சேர்ந்த 26 பேர் கலந்து கொண்டு கைதானர்கள். இதில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டது சிறப்பானது.
தஞ்சை மண்டலம்-தஞ்சாவூர், மக்கள் அதிகாரம்
2020 நவம்பர் 26 நாடுதழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தின்ல் தஞ்சை
==================================
கடந்த இரண்டு வார காலமாக 2020 நவம்பர் 26 நாடுதழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவாக தொழிலாளர்கள், விவசாயிகள் இயக்கங்கள் அனைத்தும் தஞ்சை மாவட்ட பகுதியில் வீச்சான பிரச்சாரம் செய்திருந்தன.
புயல், மழை காரணமாக அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் திட்டமிடப்பட்டிருந்த இரயில் மறியல் போராட்டமும், அனைத்து தொழிற்சங்களின் சார்பில் பேரணி மறியலும் கைவிடப்பட்டு மாபெரும் ஆர்ப்பாட்டம் 26-11-2020 அனைத்து தொழிற்சங்களின் சார்பில் எழுச்சிமிக்க ஆர்ப்பாட்டமாக காலை 11.00 மணிக்கு தஞ்சை பனகல் கட்டிடம் அருகில் நடைபெற்றது
மத்திய அரசின் மக்கள் விரோத தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு எதிரான புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், தொழிலாளர்களுக்கு எதிரான சட்டத் தொகுப்பை திரும்பப்பெற வலியுறுத்தியும்,
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிடக்கோரியும்,
மக்களுக்கு எதிரான மின்சார சட்ட திருத்தம், சுற்றுசூழல் வரைவு அறிக்கை ஆகியவற்றை கைவிடக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில்
ஏஐடியூசி மாநில செயலாளர் சி.சந்திரகுமார்,
ஏஐடியூசி மாவட்ட செயலாளர் ஆர். தில்லைவனம்
சிஐடியு மாநில செயலாளர் சி ஜெயபால்,
ஏஐசிசிடியூ மாவட்ட செயலாளர் கே ராஜன்,
தொ.மு.ச மாவட்ட செயலாளர் கு.சேவியர் ,
தொமுச மாவட்ட கவுன்சில் தலைவர் மாடாகுடி செல்வராஜ்,
ஐஎன்டியூசி மாவட்ட தலைவர் ஏ.ரவிச்சந்திரன்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து சங்க பொதுச்செயலர் துரை. மதிவாணன்,
பிஎஸ்என்எல்இயு மாவட்ட செயலர் மகேந்திரன்,
உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தோழர்கள் ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர்.
அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்
என. வி.கண்ணன், மக்கள்அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன்,
மக்கள் கலை இலக்கியக் கழக தஞ்சை கிளைச்செயலர் இராவணன் மற்றும் தோழர்கள் பங்கேற்று வேலை நிறுத்த போராட்டத்தை ஆதரித்தனர்.
வங்கி ஊழியர்கள் சங்க சார்பில் தஞ்சாவூர் நிக்கல்சன் வங்கி முன்பு மாவட்ட செயலாளர் கே.அன்பழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வங்கி உள்ளிட்ட பொதுத்துறைகளை பாதுகாக்கவும், பாதுகாப்பு தளவாட நிறுவனம், நிலக்கரி, விமானம், ரயில்வே உள்ளிட்ட லாபம் தரும் பொதுத்துறைகளை கார்ப்பரேட் களுக்கு தாரைவார்ப்பதை கண்டித்து கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
வங்கி ,எல்.ஐ.சி ஊழியர்கள் அனைவரும் முழுமையாக வேலைநிறுத்தில் ஈடுபட்டனர்
பொது வேலை நிறுத்தத்தை யொட்டி ஏஐடியூசி தொழிற்சங்க சார்பில்
கும்பகோணம்,
பாபநாசம் பாப்பாநாடு,
பூதலூர், அம்மாபேட்டை உள்ளிட்ட இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
26-11-2020