ஜாதகத்தையும், ஜோதிடத்தையும் நம்பும் ஐயன்மீர்! ஐயம் தீர்ப்பீர்!
கிரகங்களின் தாக்கம் இந்த பூமியில் உள்ள அனைத்து மனிதர்கள் மீதும் உள்ளது என்றால், அது ஏன் இந்துக்கள் மீது மட்டும், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டு இந்துக்கள் மீது மட்டும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன?
அக்கம் பக்கமாக வாழுகின்ற இஸ்லாமிய, கிறிஸ்தவர்கள் மீது ஏன் அந்தக் கிரகக் கதிர்கள் விழுவதில்லை? கீழ் வீட்டில் இருக்கிற இந்து மீது, அதுவும் சாதிக்குத் தகுந்தவாறு விழுகிற கிரகக் கதிர்கள், மாடி வீட்டில் இருக்கிற இஸ்லாமிய - கிறிஸ்தவன் மீது விழுவதில்லையே. கிரகங்களுக்கே 'செலெக்ட்டிவ் அம்னீசியாவா'? இல்லை, இஸ்லாமிய - கிறிஸ்தவர்களைக் கண்டு கிரகங்களுக்ககே அச்சமா?
கிரகங்களப் பாத்து இந்துக்கள் அச்சப்படுகிறார்கள். ஆனால், கிறிஸ்தவர்களையும், இஸ்லாமியர்களையும் பார்த்து கிரகங்களே அஞ்சுகின்றன. என்ன கொடுமை 'சார்' இது?
ஓ! புரியுது! புரியுது! உங்க அச்சம் ஏன்னு? இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள். அவிங்க குண்டு போட்டா கிரகங்களின் குண்டியே கிழிஞ்சிடுமோ? பெறவு, கிருஸ்தவன்? ஏசுவ பகைச்சிக்கிட்டா தேசம் போன இந்துக்கள் எல்லாம் திரும்ப வர வேண்டி இருக்குமே? அவங்களுக்கும் சேர்த்து பலன் பாக்கணும்னா கிரகங்களுக்கு 'ஒர்க்லோடு' அதிகமாயிடுமே? படா கில்லாடிங்கப்பா நீங்க?
அவன் இந்து, இவன் இஸ்லாமியன், இவன் கிருஸ்தவன் என்ற 'டேட்டாவை' கிரகங்களுக்கு யாரப்பா கொடுத்தது? மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவே அரசுகள் ஓடி ஒளியும் பொழுது நீங்க எப்படிப்பா கணக்கெடுப்பு நடத்துனீங்க? அந்த ரகசியத்தை டாக்டர் ஐயாகிட்ட சொல்லலாம் இல்ல? பாவம் புலம்பிக்கிட்டே இருக்காரு.
ஜாதகம், ஜோதிடம், நல்ல நேரம், கெட்ட நேரம், ராகு காலம், எமகண்டம், குளிகை, பொறந்த நேரம், புண்ணாக்கு நேரம் இதெல்லாம், ஏன்டா இந்துக்களுக்கு மட்டுமே வைக்கிறீங்க?
எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவீர் இந்த நாட்டிலே?
ஊரான்