வேளாண் திருத்தச்சட்டத்தை திரும்ப பெறு!
விழுப்புரத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம்!
மோடி அரசால் அவசரமாக கொண்டுவரப்பட்ட வேளாண் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும்என்பதை முன்வைத்து பஞ்சாப் ,அரியானா,உத்தரப்பிரதேசம்,ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலிருந்து விவசாயிகள் டெல்லியில் கடந்த 26ம் தேதி முதல் இன்று வரை தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இப்போராட்டத்தை தடுத்து நிறுத்த பல்வேறு அடக்குமுறை நடவடிக்கைகளை மோடி அரசு மேற்கொண்டது.
டெல்லியின் எல்லைப் பகுதிகளில் ரோட்டை பெயர்த்து பள்ளங்கள் தோண்டி வழிமறித்தது,குளிர்ந்த தண்ணீர் பீச்சி அடித் தது,தடியடி நடத்தி காலாவதியான கண்ணீர் புகை குண்டு வீச்சு எதற்கும் சளைக்காமல் டில்லி நகரத்தை நோக்கி விவசாயிகள் 18வது நாள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.
தற்பொழுது பெண்கள் தன்னெழுச்சியாக இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பெண்கள் தனியாக டெல்லியை நோக்கி படையெடுத்தனர் விவசாயிகளின் பேரெழுச்சி மோடி அரசை நிலைகுலைய செய்துள்ளது.
மோடி அரசு எவ்வளவு முயன்றும் விவசாயி போராட்டத்தை தடுக்க முடியவில்லை அவர்கள் அனைத்து அரண்களையும் தகர்த்தெறிந்து முன்னேறிச் செல்கிறார்கள் பாசிச மோடி அரசு அஞ்சுகிறது.
அவர்களின் விவசாயிகளின் எழுச்சி மிக்க இப்போராட்டம் தான் பாசிச மோடி அரசை அதிகாரத்திலிருந்து வீழ்த்துவதற்கான காரணம் அந்த வகையில் இந்த போராட்டத்தை ஆதரித்து பல்வேறு மாநிலங்களில் விவசாய சட்டத்தை திரும்பப்பெற வேண்டுமென போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இதனடிப்படையில் தமிழகம் தழுவிய அளவில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது இதன் ஒரு பகுதியாக விழுப்புரத்தில்
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு விவசாய சங்கங்கள் அகில இந்திய விவசாயிகள் மகாசபை மற்றும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பில் இன்று (14/12/2020) விழுப்புரம் மாவட்ட தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இதில் டெல்லியில் விவசாய போராட்டத்தில் பங்கேற்க சென்ற விவசாய சங்க தலைவர்களை கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.
விவசாய திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்டது. அனைவரையும் கைது செய்து மண்டபத்தில் அடைத்துள்ளனர்.
No comments:
Post a Comment