Tuesday, 26 January 2021

டெல்லி செங்கோட்டையில் வேளாண் கொடி! கிழிந்தது மோடியின் முகத்திரை!

டெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு தெரிவித்தும், 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும் தமிழகம்-புதுவையில்  பல்வேறு இடங்களில் வாகனப் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன.

திருபுவனை, புதுச்சேரி

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்ட மசோதாக்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் விவசாயிகள் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இதில் 149 பேர் போராட்டக் களத்திலேயே உயிர்துறந்த பிறகும் தங்களது‌ கோரிக்கைகளை விடாப்படியாக போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் உழைக்கும் மக்களுக்கான போராட்டம் என்ற அடிப்படையிலும், அவர்களின் போராட்டத்தை வெற்றி பெற செய்வது உணவு உண்ணும் ஒவ்வொருவரின் கடமை என்ற வகையிலும், உழைக்கும் மக்களுக்கான போராட்டத்தில் தொழிலாளர்களும் பங்கு கொள்ளும் விதமாகவும், இந்தியா முழுவதும் விவசாயிகள் - தொழிலாளர் ஒற்றுமை உருவாக்கவும், அனைத்திந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு அறிவித்துள்ள டிராக்டர் பேரணி போராட்டம் வெற்றிப்பெற தொழிலாளர்களும் இணைந்து போராட வேண்டும் என்பதை வலியுறுத்தும்வகையில் இன்று ( 26/01/2021 ) புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக திருபுவனை தொழிற்பேட்டை சுற்றியுள்ள பகுதிகளில் முழக்கப் போராட்டம் மற்றும் இரு சக்கர வாகன பேரணி நடத்தப்பட்டது.

திருவண்டார்கோயில், திருபுவனனனை மதகடிப்பட்டு ஆகிய இந்த மூன்று மக்கள் கூடும் பகுதியில் முழக்கமிடப்பட்டது. இதில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி இணைப்பு மற்றும் கிளை சங்க தோழர்கள் கலந்து கொண்டனர்.

தொழிலாளர்கள் தங்களின் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று மக்கள் நிறைந்த சந்திப்பில் முழக்கமிட்டனர்.  பிறகு, பேரணியாக சென்றது மக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்க செய்தது.

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
புதுச்சேரி.
தொடர்புக்கு:  95977 89801



கடலூர்

ஜனவரி 26 அகில இந்திய டிராக்டர் பேரணியின் ஒருபகுதியாக கடலூரில் நடைபெற்றது.
இந்த பேரணியில் மக்கள் அதிகாரம் தோழர்கள்.
மக்கள் அதிகாரம் தமிழ்நாடு - புதுவை



திருச்சி

டெல்லி விவசாயிகள் போராட்டதாதை இதரித்து திருச்சி லால்குடியில் விவசாயிகள் போராட்ட ஒருங்கினைப்புகுழு மற்றும் மக்கள் அதிகாரம் சார்பாக போராட்டம் நடைப்பெற்றது.


கரூர்

AIKSCC ஒருங்கிணைக்க..
அனைத்து தோழமை இயக்கங்களும் பங்கேற்க...
அனைத்து தொழிற்சங்ககளும் கைகோர்க்க..
மக்கள் அதிகாரம் தோழர்களும் கலந்து கொண்டனா்...
பல்வேறு இயக்க தலைவர்கள் தனது கண்டன உரையை பதிவு செய்தனர்...
மக்கள் அதிகாரத்தின் தோழர் வீரணன் அவர்களும் பங்கேற்றார..
உசிலை.-திருமங்கலம்  மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளா் தோழர் ஆசையன் கண்டன உரையாற்றினார்...
PRPC வழக்கறிஞர் நட்ராஜ் தனது கண்டன உரையை பதிவுசெய்தார்.
திருமங்கலத்தில் வேளாண் விரோதசட்டத்தை ரத்து செய்யக்கோரி...
இரு சக்கர வாகன ஊர்வலமும் நடந்தேறியது.


மதுரை

26.01.2021 இன்று மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி நாடு முழுவதும் டிராக்டர் பேரணி அறிவித்து அகில இந்திய விவசாய கூட்டமைப்பு சார்பில் இன்று மதுரையில் ஒத்தக்கடையில் வாகன பேரணி நடைபெற்றது.

மாங்குளம் அருகில் பூசாரிப்பட்டியில் ஆரம்பிய்த்து சிதம்பரம் பட்டி, அயிலாங்குடி, கொடிக்குளம், A.புதூர், அரும்பனூர், புதுப்பட்டி, மங்கலக்குடி விளக்கு, யானைமலை குவாரி, நரசிங்கம்,  ஒத்தக்கடையில் நிறைவடைந்தது பேரணி  பத்துக்கும் மேற்ப்பட்ட கிராமங்களில்  வாகன பேரணியாக சென்று முழக்கமிட்டு சட்டத்தின் தன்மையையும், அபாயங்களையும், விளக்கி டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக நாம் குரல் கொடுக்க வேண்டிய அவசியத்தை விளக்கினர்.
இந்த வாகன பேரணியில் சி.பி.எம், சி.பி.ஐ, மக்கள் அதிகாரம், ஆட்டோ தொழிலாளர்கள், மற்றும் ஜனநாயக சக்திகள் அனை வரும்  கலந்து கொண்டனர்.
இந்த பேரணியை சி.பி.எம. விவசாய சங்க மாவட்ட செயலாளர் எஸ்.பி.இளங்கோவன் தலைமை தாங்கினார், பேரணியை சி.பி.ஐ. புறநகர் மாவட்ட செயலாளர் காளிதாஸ் அவர்கள் துவக்கி வைத்தார், மக்கள் அதிகாரம் தோழர் சரவணன்,  மற்றும் மாற்று கட்சித் தோழர்கள்  மக்களிடையே உரையாற்றினர். 

செய்தி: மக்கள் அதிகாரம், மதுரை.



திருமங்கலம்

AIKSCC ஒருங்கிணைக்க..
அனைத்து தோழமை இயக்கங்களும் பங்கேற்க...
அனைத்து தொழிற்சங்ககளும் கைகோர்க்க..
மக்கள் அதிகாரம் தோழர்களும் கலந்து கொண்டனா்...
பல்வேறு இயக்க தலைவர்கள் தனது கண்டன உரையை பதிவு செய்தனர்...
மக்கள் அதிகாரத்தின் தோழர் வீரணன் அவர்களும் பங்கேற்றார..
உசிலை.-திருமங்கலம்  மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளா் தோழர் ஆசையன் கண்டன உரையாற்றினார்...
PRPC வழக்கறிஞர் நட்ராஜ் தனது கண்டன உரையை பதிவுசெய்தார்.
திருமங்கலத்தில் வேளாண் விரோதசட்டத்தை ரத்து செய்யக்கோரி...
இரு சக்கர வாகன ஊர்வலமும் நடந்தேறியது.



விழுப்புரம்

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக மோடி அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் கோரிக்கையின் அடிப்படையில் 60 நாட்களுக்கும் மேலாக டெல்லியை முற்றுகையிட்டு பல லட்சக்கணக்கான விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். விவசாயத்தை காக்கும் இந்த போராட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இந்த போராட்டம் அடுத்த கட்டம் நோக்கி செல்வதற்கு ஜனவரி 26 குடியரசு தினத்தன்று டெல்லியில் லட்சக்கணக்கான டிராக்டர்களை கொண்டு பேரணியை  விவசாயிகள் நடத்துகிறார்கள்.
 அதன் அடிப்படையில் இந்தியா முழுவதும் உள்ள 700 மாவட்டங்களில் நடத்துவது என்ற அடிப்படையில்  அகில இந்திய விவசாயிகள் போராட்டம் ஒருங்கிணைப்பு குழு சார்பில் விழுப்புரத்தில் ரயில் நிலையம் அருகில் கண்டன முழக்கங்களுடன் பேரணி தொடங்கி புதிய பேருந்து நிலையம் அருகில் ஜல்லிக்கட்டு திடலில் முடிந்தது. அதில் மக்கள் அதிகாரம் சார்ப்பாக  கலந்து கொண்டோம்.

தகவல்
மக்கள் அதிகாரம்.
விழுப்புரம் மண்டலம்.
94865 97801

டெல்லி:
புறப்பட்டாகிவிட்டது டிராக்டர் படை!

அலங்கார பீரங்கிப்படைகள்
இனி வயல்வெளிகள்  நோக்கி 
உழுவதற்குச் செல்க

புறப்பட்டாகிவிட்டது
நாட்டைக்காக்க
டிராக்டர்கள் படை

முப்படைகளுக்கும் மேலான
டிராக்டர் படையொன்று
காத்திருந்தது யாருக்கும் தெரியவில்லைை

ஒரு கோடி விவசாயிகள்
ஐந்து இலட்சம் டிராக்டர்கள்
தேசியக்கொடிகள்
காற்றில் தீயாய் உயர்கின்றன
தடுப்பரண்கள்
தகர்ந்துவிழுகின்றன
தலை நகரம் முற்றுகையிடப்பட்டிருக்கிறது
தேசத்தின் சொந்தமக்களால்
பயிர்களைத் தின்னும்
வெட்டுக்கிளிகளை
வேரறுக்கும் யுத்தம் துவங்கியிருக்கிறது

அலங்கார ஊர்திகள் 
பின்வாங்கிச் செல்க
ஒரு மக்கள் யுத்தப்பேரணியை
தேசம் பார்த்துக்கொண்டிருக்கிறது
அன்னிய ஆட்சியாளனுக்கு
எதிராகக்கூட இப்படியொரு அலை
எழுந்து வந்ததில்லை
எதுவும் அவர்களை
தடுக்க முடியவில்லை
 கண்ணுக்கெட்டியதூரம்வரை
எதிர்ப்பின் கடல்
நீண்டுகொண்டேயிருக்கிறது

அதிகாரத்தின் லத்திகள்
விவசாயிகளின் தலை நோக்கி உயர்கின்றன
கண்ணீர் புகைக்குண்டுகள்
வெடிக்கின்றன
ஒரு ரத்தம் வெள்ளத்திற்கான
ஆயத்தங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன

மக்களை எப்படி சீண்டவேண்டுமென
அவர்களுக்குதெரியும்
மக்களை எப்படி வன்முறையார்களாக
காட்டவேண்டும் என
அவர்களுக்குத் தெரியும்
வன்முறையாளர்கள் ஊடுருவுகிறார்கள்
ஏதோ ஒன்று நிகழப்போகிறது
எனும் அச்சம் எங்கும் பரவுகிறது

அதிகாரத்தின் ஏவல் நாய்கள்
கேமிராக்கள் பின்னிருந்து
தேசத்தின் கெளரவம்
அவமதிக்கப்பட்டுவிட்டது என
ஊளையிடுகின்றன
'நான்தான் தேசம்'
என முழங்குகிறான் விவசாயி

விவசாயிகள் அமைதியாக
செல்ல விரும்புகிறார்கள்
அரசு அதை விரும்பவில்லை
யார் முதல் கல்லை எறிவார்கள் என
பசியுடன் காத்திருக்கிறது

டிராக்டர்களை நிறுத்த
பெட்ரோல் பங்குகள் மூடப்படுகின்றன
காவல்துறையினர்
சாலையில் அமர்ந்து மறியல் செய்கின்றனர்
அவர்கள் எண்ணிக்கையில் சிறியவர்கள்
மக்கள் வெள்ளத்தைக்கண்டு
அவர்கள் திகைத்து நிற்கிறார்கள்

விவசாயிகள்
அச்சமற்று முன்னேறுகிறார்கள்
பிசாசுகளின் தலைநகரை
ஆழ உழுது பயிரிட
டிராக்டர்கள் தொடர்ந்து முன்னேறுகின்றன
குரு கோவிந்த் சிங்கின்
மஞ்சள் கொடி அவர்களை
வழி நடத்திச் செல்கிறது

செங்கோட்டைவரை வந்துவிட்டார்கள்
அரசரின் அகங்காரத்தின் கோட்டைகள்
அதிர்கின்றன

டிராக்டர்களில் குழந்தைகளும் பெண்களும்
உற்சாகமாக வந்துகொண்டிருக்கிறார்கள்
டிராக்டர்களின் பேரொலி
போர் விமானங்களின் 
பேரொலியாக் கேட்கிறது

எல்லையில் பதட்டம் என்பது
சீன எல்லையிலிருந்து
பாகிஸ்தான் எல்லையிலிருந்து
டெல்லி எல்லையில் பதட்டம் என்றாகியிருக்கிறது

முள் வேலிகள்
வாகன வேலிகள்
கல் வேலிகள் தகர்ந்து விழுகின்றன

செங்கோட்டையில்
நாட்டின் முதல் குடிமகன்
கொடியேற்றிய
அதே நாளில்
அதே இடத்தில்
கடைசிக்குடி மக்களான
விவசாயிகள் 
கொடியேற்றிவிட்டார்கள்

ஒரு குடியரசு நாளில்
உண்மையான குடியரசு
பிறந்தேவிடும் போலிருக்கிறது

26.1.2021
பகல் 1.39
மனுஷ்ய புத்திரன்




Saturday, 23 January 2021

டெல்லி போராட்டக் களத்தில் மக்கள் அதிகாரம்!

மோடி அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். 

போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்திலிருந்து மக்கள் அதிகாரம் தோழர்கள் 41 பேர், அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு தலைமையில் டெல்லி சிங்கு மற்றும் திக்ரி எல்லையில் போராடும் விவசாயிகளுடன் 2021, ஜனவரி 17-20 தேதிகளில் உடனிருந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு போராடும் விவசாயிகளிடையே உரையாற்றினார். மக்கள் கலை இலக்கியக் கழக கலைக்குழுத் தோழர்கள் பாடல்கள் பாடி உற்சாகப்படுத்தினார். 

மக்கள் அதிகாரம் தோழர்கள் டெல்லி விவசாயிகளோடு போராட்ட களத்தில் இருந்த செய்திகள் வட இந்திய ஊடகங்களில் விரிவாக எடுத்துச் செல்லப்பட்டன. 

டெல்லி போராட்டக் களத்தில் 
மக்கள் அதிகாரம்












ஆளுநர் மாளிகை முற்றுகை!

மோடி அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் 59வது நாளாகப் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் இன்று 23ஆம் தேதிஅகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பாக ஆளுநர் மாளிகை முற்றுகைைைைப் போராட்டம் சென்னையில் நடைபெற்றது‌. இதில் பல்வேறு விவசாய சங்கங்கள், தொமுச, CITU உள்ளிட்ட தொழிற்சங்கங்கள், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்றன.

போராடுபவர்களை வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தி கைது செய்து கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் அடைத்து வைத்துள்ளது எடப்பாடி அரசு. இந்தப் போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

போராட்டக் களக் காட்சிகள்











Thursday, 14 January 2021

இழி குணம்: போராளிகள் தடம் புரளும் தருணங்கள்!.....12

போராளியாய் வாழ்க்கையைத் தொடங்குவது எளிது, ஆனால் தொடர்வதுதான் கடினம். 

திருமண வாழ்க்கைப் பலரைத் திருப்பி அழைத்துக் கொள்கிறது. குழந்தைகள் வந்த பிறகு குடும்ப வாழ்க்கையில் மூழ்கிப் போவோரும் உண்டு. இருப்பதை இழக்கத் தயங்கி, பின்சென்றோரும் உண்டு. 

சட்டச் சிக்கலை எதிர் கொள்வதற்காக பெரும்பாலும் புனைப் பெயரில்தான் பொதுமக்களிடையே அறிமுகமாவோம். கார்மேகம், குயிலன், மாடன், முகிலன், குறிஞ்சி, இசையரசன், கோவலன், அருணன், கபிலன், முத்து, கோவன், தமிழ்மணி என மொத்தத் தமிழும் திருச்சி மகஇக விற்குள் அடக்கம். சில சமயம் புனைப் பெயர்கள் எமக்குக் கேடயமாய்ப் பயன்பட்டதும் உண்டு. ஆனால் இன்று, மொத்த தமிழில் சில மட்டுமே எஞ்சி இருந்தாலும் அவர்களின் அர்ப்பணிப்பு அளப்பரியது. தொடக்க காலத்தில் இடர்களை எதிர் கொள்வது அவ்வளவு எளிதல்ல.

திருச்சி, தில்லை நகர், 5-வது குறுக்கு உதயசூரியன் தேநீர் விடுதி அறியாதோர் உண்டோ? மகஇக-வின் உலக முகவரி அதுதான். பக்கத்திலேயே தில்லை நகர் காவல் நிலையம். பெருந்தலைகள் திருச்சி வருகை என்றால் போலீசின் முதல் வேலை, தேநீர் விடுதி முற்றுகைதான். முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் முதல் நபரே கபிலன்தான். எண்ணற்ற வழக்குகள். யார்தான் பொறுத்துக் கொள்வர்? இத்தகையப் போராளிகள் கூட சில சமயம் தடம் புரள்வதுண்டு.

செய்கிற வேலையில், தொழிலில் நேர்மை இருக்கவேண்டும், ஏமாற்று பித்தலாட்டம் இருந்தால் கைவிட வேண்டும். இலஞ்ச ஊழலில் உழலும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வேலையா? அல்லது அமைப்பா? என்ற கேள்வி எழுந்தபோது ஒருவர் அமைப்பைக் கைவிட்டுச் சென்ற வரலாறும் உண்டு.

People not talk about the world, but talk about their perception" என்பார் கிரேக்க நாட்டு பிரபல ஹோமியோபதியர் வித்தல் காஸ். "மக்கள் உண்மையைப் பேசுவதில்லை; அவரவர் உணர்ந்ததைத்தான் பேசுகின்றனர்". எனவே உண்மையைப் பேசாத வரை மாறுபட்ட கருத்துக்கள் இருப்பதைத் தவிர்க்க முடியாது.

பொதுவுடமைச் சமூகம் என்ற தொலைநோக்கு இலட்சியத்தை நோக்கிப் பயணிப்பவர்கள்தான் கம்யூனிஸ்டுகள். இந்தப் பயணத்தின் ஊடே சிலருக்குச் சாதி-மதம் சார்ந்த, இனம்-மொழி சார்ந்த, இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதி சார்ந்த, தேர்தல் அரசியல் சார்ந்த விடயங்களில் கருத்து முரண் ஏற்பட்டு சிலர் வெளியேறுவதுண்டு. காரணம் ஏதுமின்றி சும்மா ஒதுங்கினால் மதிப்பு மட்டுப்பட்டு விடும் என்பதால், ஏதோ ஒரு கருத்து முரணைக் காரணம் காட்டிச் செல்வோரும் உண்டு.

பாலியல் உணர்வு ஒரு உயிரியல் தேவைதான் என்றாலும் அதை ஒரு கட்டுக்குள் வைத்தால் மட்டுமே குமுக வாழ்வில் குந்தகம் வராது. வேட்கைக்கு வேலியிடாத போது, சிலர் தடம் புரள்வதும் உண்டு. இதற்காக ஓரங்கட்டப்பட்டோரும் உண்டு. எத்தனை திறமைகள் இருந்தாலும் சிரழிவில் வீழ்ந்து விட்டால், தொண்டனாய் இருந்தாலும், தலைவராய் இருந்தாலும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு அளவுகோல் ஒன்றுதான்.

"மக்களுக்குத்தானே மாடாய் உழைக்கிறோம்; கொஞ்சம் எடுத்தால் என்ன?" என உண்டியலில் கை வைப்போரும் உண்டு. சில சமயம் பாக்கெட்டில் பதுக்குவோரும் உண்டு. இவர்கள் மிகச் சொற்பமானவர்களே என்றாலும்  சிக்காதவரை காலம் தள்ளுவர். மிகச் சமீபத்தில் கூட வேலூரில் இத்தகைய நபர் ஒருவர் சிக்கியதுண்டு..

பாலியலும், பண மோசடியும் இழி குணத்தின் அங்கம் அன்றோ? யார்தான் இதை ஏற்பர்? அதுவும் பொது வாழ்வில்? இவர்கள் பல்துறை வித்தகர்கள் என்றாலும் விதிவிலக்கு ஏதும் தருவதில்லை. உரிய நேரத்தில் இடித்துரைத்தால் மீள்வோரும் உண்டு. மீள முடியாதோர் விலக்கப்படுவதும் உண்டு. 

தான் மட்டுமல்ல, தனது இணையர் உள்ளிட்ட குடும்பத்தாரும் இழி குணம் அற்றோராய் இருக்க வேண்டும். இல்லையேல் அதற்கும் நடவடிக்கை உண்டு.

பொது வாழ்க்கையில், கொள்கைக்காகக் கூட்டு சேர்ந்து பயணிப்பதைத் தவிர, சொந்தத் தேவைக்காகக் கூட்டு சேர்வது  ஆபத்தானது. இதைத்தான் கொள்கையற்ற உறவு என்பார்கள். இத்தகைய கொள்கையற்ற அணி சேர்க்கை தனக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்று வகை பிரித்துப் பழக வைக்கும். பின்னாளில் அது பிணக்குகளை உருவாக்கி இயக்கப் பணிகளுக்கு முட்டுக்கட்டையாய் மாறிவிடும். 

சொந்த பணத் தேவைக்கு சிலர் பிணை கேட்பர். தோழர்தானே என்று நம்பி கைச்சாத்து வைத்து ஏமாந்தோர் பலர். கடனைப் பெற்றவர் கம்பி நீட்ட, முட்டி மோதி கசந்து போவோரும் உண்டு. இதற்கும் வேலூர்தான் முன்னோடி. 

தடம் புரள்வோரைத் தள்ளிவிட்டு விட்டு பயணிப்பதால்தான் நக்சல்பாரிகளுக்கு நற்பெயர் உண்டு. இல்லையேல் என்னவாகும்.....?

தொடரும்

தமிழ்மணி

தொடர்புடைய பதிவுகள்

இழி குணம்: ஓய்வறியாப் போராளிகள்!.....11


இழி குணம்: பெல்லில் இரண்டாவது அத்தியாயம்.....10

இழி குணம்: மீண்டும் புதிதாய்ப் பிறந்தேன்!.....9

இழி குணம்: போனஸ் போராட்டமும் களப்பலியும்!.....8


இழி குணம்: நாலரை கோடி 'பெல்' உணவக ஊழல்!.....7


இழி குணம்: எதிர் கொண்ட கசையடிகளும், சிறைக் கொட்டடிகளும்!.....6


இழி குணம்: இராகு காலத்தில் இணை ஏற்பு! .....5 


இழி குணம்: கூட்டுறவு சொசைட்டி பொது நலன் சார்ந்ததா?.....3

Wednesday, 13 January 2021

போகியில் பொசுங்கிய வேளாண் சட்டங்கள்!

கடலூர்

கடலூரில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பாக போகி தினத்தில் வேண்டாத பழைய பொருட்களை கொளுத்தும் வகையில் மத்திய பாசிச மோடி அரசின் 3 வேளாண் சட்ட நகலை கொளுத்தப்பட்டது.


தகவல்

மக்கள் அதிகாரம் தமிழ்நாடு புதுவை 

கடலூர், வலையமாதேவி

மூன்று வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து 13/01/2021 போகி பண்டிகையில் வேளாண் சட்ட நகல் எரிப்பு கடலூர் மாவட்டம் வலையமாதேவியில் பு.மா.இ.மு தோழர்கள் நடத்தினார்.

தகவல்

புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
கடலூர் மாவட்டம்.

கடலூர், திருப்பாதிரிபுலியூர்

கடலூர் திருப்பாதிரிபுலியூர் இல் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக 3 வேளாண் சட்ட நகலை தீயில் கொளுத்தப்பட்டது.


திருமங்கலம்

திருமங்கலத்தில்,
AIKSCC ஒருங்கிணைக்க...
தோழமை இயக்கங்கள் ஒன்னு கூட..
மக்கள் அதிகாரம் தோழர்களும் கலந்துகொண்ட....
போகிப்பண்டிகை திருநாளில்...
பழையன கழிதலும்..
புதியன புகுதலுமான...
விவசாயிகளின் தியாக போராட்ட  மரபை புதியன,
புகுத்தலும்...
வேளாண் விரோத சட்ட நகலை பழையன எரித்தலும்...
மகிழ்வோடு போராட்டாம் நடந்தேறியது!

மற்றொரு அராஜகம் போகிப்பண்டிகை 
கொண்டாடிய தோழர்கள் அனைவரும் கைது!


மதுரை, ஒத்தக்கடை

மதுரை ஒத்தக்கடைப் பகுதியில்
AIKSCC ஒருங்கிணைக்க...
தோழமை இயக்கங்கள் ஒன்னு கூட..
மக்கள் அதிகாரம் தோழர்களும் கலந்துகொண்ட....
போகிப்பண்டிகை திருநாளில்...
பழையன கழிதலும்..
புதியன புகுதலுமான...
விவசாயிகளின் தியாக போராட்ட  மரபை புதியன,
புகுத்தலும்...
வேளாண் விரோத சட்ட நகலை பழையன எரித்தலும்...
மகிழ்வோடு போராட்டாம் நடந்தேறியது!

மற்றொரு அராஜகம் போகிப்பண்டிகை 
கொண்டாடிய தோழர்கள் அனைவரும் கைது!



தகவல்
மக்கள் அதிகாரம் 
மதுரை மண்டலம்

திருச்சி, காஜாப்பேட்டை

திருச்சி காஜாபேட்டை பகுதியில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக புதிய வேளாண் திருத்தச் சட்ட நகல்களை போகிப்பண்டிகை ஆன இன்று எங்களுக்கும்  எங்கள் நாட்டுக்கும் தேவையில்லாத சட்டமான வேளாண் சட்டத்தின் நகல்களை அப்பகுதி இளைஞர்கள் எரித்தனர்

தகவல் : 
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி 
திருச்சி 
9944847888


திருச்சி பு.மா.இ.மு

திருச்சி, காந்திபுரம்

வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் இன்று காலை 11 மணி அளவில் மக்கள் அதிகாரம் தலைமையில் தில்லைநகர் காந்திபுரம் பகுதியில் நடைபெற்றது. மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாவட்ட செயலாளர் தோழர் ஜீவா, சரவணன், லதா, பரமசிவம்,
பாலு மணலிதாஸ், நிர்மலா மற்றும் மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர்செழியன் ஜனநாயக சமூகநல கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர்.சம்சுதீன், முத்துக்குமார் கலந்து கொண்டு சட்ட நகலை எரித்தனர். இதில் 30க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். நகலை எரித்த முன்னணியாளர்களை காவல்துறையினர் கைது செய்து மண்டபத்தில் வைத்துள்ளனர். 



செய்தி
மக்கள் அதிகாரம்
திருச்சி
செல்:9445475157

திருச்சி, அரவானூர்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய 3 வேளாண் சட்டத்தை எதிர்த்து அதன் சட்ட நகலை திருச்சி அரவானூர் பகுதியில் 
மக்கள் அதிகாரம் மாவட்ட குழு உறுப்பினர்  தோழர் ராஜா தலைமையில் ஊர் பொதுமக்களுடன் இணைந்து கொளுத்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.


செய்தி:
மக்கள் அதிகாரம்
திருச்சி.

சேந்தநாடு

மோடி அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டம் எரிக்கும் போராட்டம் .... இந்தியாவில் வாழக்கூடிய 130 கோடி  மக்கள்  வாழ்வாதாரம் பறிக்கும் திட்டம் ....டெல்லியை முற்றுகை இட்டு   1.40 கோடி மக்கள் மேல் கலந்து கொண்டு நடக்கும் போராட்டம் ....62 நபருக்கு மேல் உயிர் தியாகம் செய்து தொடர் போராட்டம் நடக்கிறது .. மோடி அரசு விவசாயி போராட்டத்தை ஒடுக்கி வருகிறது ....அதையும் முறியடித்தும்  போராட்டம் நடக்கிறது ..மூன்று வேளாண் சட்டம் நடைமுறை ஆனால் விவசாயம் ,விவசாயம் சார்ந்த தொழில் ,விவசாயம் சார்ந்த வர்த்தகம் என எல்லாம் கார்ப்பரேட்டிடம் கொடுக்கப்படும் உணவு ஆதாரம் விற்பனை பண்டமாக மாறும் ,உணவு வாழ்வாதாரம் சுரண்ட படும் .இதன் விளைவு ரேஷன் கடை மூட படும் ,ரேஷன் அரிசி இல்லை , சத்துணவு இல்லை ...உணவு பொருள் விலை தங்க விலைபோல் உயரும் .இது நடைமுறை ஆனால் பட்னி,பஞ்சம் தலை விருத்தி ஆடும் ...80 கோடிக்கும் மேற்ப்பாட்ட மக்களின்  வாழ்வாதாரத்திற்க்கெதிரான ...இந்த மூன்று வேளாண் சட்டங்களை முறியடிக்கும் போராட்டம் ஆதரவாக போகி இன்று வேளாண் சட்டம் நகல் எரிப்பு போராட்டம் சேந்தநாடு கிராம பகுதியில் தோழர் பால்ராஜ் தலைமையில் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டு நகல் எரிப்பு போராட்டம் நடத்தப்பட்டது ...

தகவல்
புரட்சிகர மாணவர் -இளைஞர் முன்னணி தொடர்புக்கு .9788808110

தருமபுரி

வேளாண் திருத்த சட்டத்தை முறியடிப்போம்! என்ற முழக்கத்தை முன்வைத்து பு.மா.இ.மு சார்பில் தமிழ்நாடு முழுவதும் சில இடங்களில் போகி பண்டிகையான இன்று (13/01/2021) எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் புதிய மூன்று வேளாண் சட்ட நகலை எரிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் தோழர் அன்பு பு.மா.இ.மு, மாவட்ட அமைப்பாளர் தலைமையில் நடைபெற்றது‌.



தகவல்

புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
தருமபுரி மாவட்டம்.

தஞ்சை


வேளாண்சட்டங்களை தீயிலிட்டு எரித்து நாடெங்கிலும் போகிக்கொண்டாட்டம்.
=======================
வேளாண்சட்டங்களை ரத்து செய்யக்கோரி போராடிவரும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு  அறிவிப்பை ஒட்டி நாடுமுழுவதும்  வேளாண்சட்ட எரிப்பு 13-01-2021 போகிப்பண்டிகை அன்று நடைபெற்றது. . மக்கள் தன்னெழுச்சியாக இதனை சொந்த போராட்டமாக கொண்டாடுவதை சமூக ஊடகங்கள் மூலம் உணர முடிகிறது. 

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர்  நான்கு ரோடு சாலையில் சமவெளி விவசாயிகள்  இயக்க நிறுவுனர் தலைவர் தோழர். பழனிராஜன் தலைமையில் மக்கள் அதிகாரம் தோழர். பிரவின் குமார், புரட்சிகர மாணவர் -இளைஞர் முன்னணி தோழர். மகேந்திரன்,   ஓய்வு பெற்ற ஆசிரியர் அய்யனாபுரம் ஞாணசம்பந்தன்,  சமூக ஆர்வலர் பூதலூர் ஆர். எஸ். புத்தர் மற்றும்  விவசாயிகள்    ஒருங்கிணைப்பு குழு வேண்டுகோளை ஏற்று   வேளாண்சட்டத்தை தீயிட்டுக்கொளுத்தினர். கைதுசெய்யப்பட்டு மாலை விடுதலை செய்யப்பட்டனர். 

தஞ்சை மானோஜிப்பட்டியில் மக்கள் அதிகாரம் தஞ்சை ஒருங்கிணைப்பாளர் தேவா தலைமையில் அப்பகுதி மக்கள் வேளாண் சட்டத்தை தீயிட்டுக் கொளுத்தினர். 

தஞ்சை இரயிலடியில்  விவசாயிகள் போராட்டக்குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர். என்.வி.கண்ணன் தலைமையில் வேளாண்சட்ட எரிப்பு போராட்டம் நடைபெற்றது. மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் தோழர். காளியப்பன், 
தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வீரமோகன், 
சிபிஐ மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ஆர்.கே. செல்வகுமார், மக்கள கலை இலக்கியக் கழக மாநகர செயலர் இராவணன், ஏஐடியூசி மாவட்ட துணைச் செயலாளர் துரை. மதிவாணன், 
சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே அன்பு, 
தரைக்கடை சங்க மாவட்ட பொருளாளர் எ. ராஜா, 
எஸ்எஃப் ஐ மாவட்ட செயலர் அரவிந்தசாமி மற்றும் குணா, 
விசிறி சாமியார் முருகன் உட்பட பதிமூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கக்கரக்கோட்டை,  ஒரத்தநாடு,  பேராவுரருணி, பாபநாசம், வெளளாண்சட்ட எரிப்பு நடைபெற்றது. 




தகவல்: மதிவேல்
14-01-2021

மத்திய அரசு கொண்டு வந்துள்ள  மூன்று வேளாண் சட்டத்தை எதிர்த்து அதன் சட்ட நகலை  கொளுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை காவல்துறை கைது செய்துள்ளனர்..

இடம் : தஞ்சை 

மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் தோழர் காளியப்பன் உரை


https://youtu.be/dTqcWa7