வெளுக்கும் சாயங்கள்!
நேற்றுவரை யாரைக் “கெட்டவன்” என்று மேடைதோறும் சாடினார்களோ,
அவனோடுதான் இன்று கூச்சமின்றிக் கூட்டுச் சேருகிறார்கள்!
நேற்றுவரை யாரோடு நட்பு பாராட்டித் தோளோடு தோள் நின்றார்களோ,
அவர்களைத்தான் இன்று பகையாளிகளாகப் பார்க்கிறார்கள்!
கடும் வெயிலும் பெருமழையும்தான்
துணியில் ஏறிய சாயத்தின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்தும்.
அதுபோல,
தேர்தல் கால நெருக்கடிகளும் அதிகாரப் பசியும்தான்
கட்சிகளின் போலி முற்போக்குச் சாயத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும்.
அறுந்துபோகும் செருப்பின் வார் போல,
எப்போது வேண்டுமானாலும் அறுந்துபோகின்றன
இவர்களின் கொள்கை உடன்படிக்கைகள்.
தவறி விழுந்த நாணயத்தைத் தேடுவது போல,
தன்நலத்திற்காக மட்டுமே அலைபாய்கின்றன
இவர்களின் அரசியல் நகர்வுகள்.
நெருக்கடியான காலங்கள்தான்
கொள்கையின் உண்மை முகத்தையும்,
கூட்டணியின் உண்மை நோக்கத்தையும்
அடையாளம் காட்டுகின்றன.
ஊரான் @ பொன். சேகர்
சாயம் என்பது வெளிப்பூச்சு. அது கரையும் பொழுது (வெளுத்தல்) உண்மை (உள் மறைந்திருக்கும் நிறம்) தெரிகிறது. இதை அரசியல் என்று கீழ்மை படுத்தும் இன்றையப் பெரும்பான்மையினர் அரசு ஒர் இயல் என்ற உண்மை அறியாத அறிவீனர். சுயநலப் பெரும்பான்மைக்கு அதுவே சரி என்ற எண்ணத்தை உண்டாக்குவதால் தொடர்கதையாகிறது. வேதனை....
ReplyDelete