Tuesday 27 April 2021

ஸ்டெர்லைட் திறப்புக்கு எதிராக மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்!

கரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை இந்தியாவை உலுக்கிக் கொண்டிருக்கிறது. முதல் அலையின் போது கரோனாவை விரட்டுகிறேன் என்ற பெயரில் மணி அடித்து விளக்குப் பிடித்த கேலிக் கூத்தை தவிர வேறெதையும் ஆக்கப்பூர்வமாக மோடி அரசாங்கம் செய்யாததால் இப்பொழுது இந்தியா திண்டாடிக் கொண்டிருக்கிறது. கரோனா நோய்க்கு இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படாத சூழலில் தடுப்பூசி மட்டுமே போடப்பட்டு வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை சொற்ப அளவில்தான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நோய் முற்றிய நிலையில் ஆக்சிஜன் கிடைக்காமல் வட இந்தியாவில் கொத்துக் கொத்தாக மக்கள் மடிகின்றனர். ஆக்சிஜன் தேவையை உணர்ந்து போதிய முன் ஏற்பாடுகளை செய்திருந்தால் உயிரிழப்புகளை தடுத்திருக்க முடியும். ஆனால் இன்றும் கூட ஆக்சிஜன் தயாரிப்பதற்கான ஏற்பாடுகளை அரசே செய்வதற்கு பதிலாக ஏற்கனவே சுற்றுச்சூழலை நாசப்படுத்தியக் குற்றத்திற்காக மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிப்பதன் மூலம் மறைமுகமாக மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான ஏற்பாடுகளை மோடி அரசு செய்து வருகிறது.  எடப்பாடி அரசு இதற்கு ஒத்தூதுவது ஒன்றும் அதிசயம் இல்லை என்றாலும், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு ஒப்புதல் தெரிவித்தது தமிழக மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஆக்சிஜனை வேறு எங்கு வேண்டுமானாலும் தயாரித்துக் கொள்ளட்டும், கண்டிப்பாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கூடாது என்று தூத்துக்குடி மக்கள் மீண்டும் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர்.

எக்காரணத்தைக் கொண்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதை அனுமதிக்க முடியாது என்ற கோரிக்கையை முன்வைத்து போராடும் தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் 26.04.2021 அன்று தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

திருவெண்ணைநல்லூர்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்று வேதாந்தா சூழ்ச்சிக்கு அடிபணியும் மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது அதன்ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டம்அரசூர் நான்குமுனை சந்திப்பில் மக்கள் அதிகார அமைப்பை சேர்ந்த தோழர்கள் 35 பேர்காவல் துறை அனுமதி தராததால் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்பிறகு கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்         

தகவல்  
மக்கள் அதிகாரம் 
திருவெண்ணநல்லூர் வட்டாரம்


விருத்தாசலம்

ஸ்டெர்லைட்டை திறக்காதே! நிரந்தரமாக மூடு!

என விருதாச்சலம் பாலக்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம். 

இதில் வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் மணிவாசகம்,

மண்டல ஒருங்கிணைப்பாளர்  தோழர் பாலு,

மாநில ஒருங்கிணைப்பாளர்

தோழர் ராஜூ

மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டனர்.

மக்கள் அதிகாரம்

கடலூர் மண்டலம்- 81108 15963


திருச்சி

தூத்துக்குடி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்று !

மத்திய அரசே !

கொலைகார கிரிமினல் வேதாந்தாவிற்கு துணைபோகாதே !

உச்சநீதிமன்றமே!

கொலைகார வேதாந்தா வழக்கைத் தள்ளுபடி செய்!

ஆக்சிஜன் தயாரிக்க வேதாந்தாவிற்கு ஐந்து மாநிலங்களில் ஆலைகள் இருக்கு மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதற்கு?

என்ற முழக்கத்தின் அடிப்படையில் திருச்சியில் இன்று 26.04.2021 காலை 11 மணிக்கு மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகில் மக்கள் அதிகாரம் தலைமையில் ஜனநாயக அமைப்புகள் பங்கேற்று கண்டன முழக்கங்கள் முழங்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொடிகளுடன் பெண்கள் சிறுவர்கள் தோழர்கள் என பலரும் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்திற்கு  திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினர் தோழர் ராஜா தலைமையேற்றார். மக்கள் அதிகாரத்தின் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர்.செழியன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஐயா ம.ப சின்னத்துரை ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தோழர்.சம்சுதீன் மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் தோழர்.ஜீவா கண்டன உரையாற்றினர். 

தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர். ரமணா மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் மாநகர் மாவட்ட துணைத் தலைவர் தோழர்.புல்லட் லாரன்ஸ் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி செயலாளர் தோழர்.தமிழாதன், மக்கள் உரிமை மீட்பு இயக்கம் தோழர்.பசீர் அகமது, மக்கள் உரிமை கூட்டணி தோழர். காசிம், ஜோசப். ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் தோழர்.கோபி , செயலாளர் மணலிதாஸ் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாவட்ட செயலாளர் தோழர்.அரிச்சந்திரன் என ஜனநாயக அமைப்புகள் பெருந்திரளாக  பங்கேற்றனர். ஒரு மணிநேரம் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பரவலாக பொதுமக்கள் நின்று கவனித்தனர் இறுதியாக காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை கைது செய்து மண்டபத்தில் அடைத்தது.

தகவல்
மக்கள் அதிகாரம் 
திருச்சி மாவட்டம்.
தொடர்புக்கு. 94454 75157



தஞ்சை

வேதாந்தா தாக்கல் செய்துள்ள வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்! கைது! 

====================

வேதாந்தா தாக்கல் செய்துள்ள வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மக்கள்அதிகாரத்தின் சார்பில் இன்று காலை 10 மணிக்கு தஞ்சாவூர் ரயிலடியில்  மக்கள் அதிகாரத்தின் தஞ்சை மாநகர ஒருங்கிணைப்பாளர் தேவா தலைமையில் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்து.  மக்கள் அதிகாரத்தின் மாநில பொருளாளர் காளியப்பன் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநகரச் செயலாளர் இராவணன், ஏஐடியூசி மாவட்ட துணை செயலாளர் துரை. மதிவாணன், ஆர்எம்பிஐ மாவட்டச் செயலாளர்  மதியழகன், தஞ்சை நஞ்சை கலைக்குழு சாம்பான், ஆதி தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர்  ரங்கராஜ்,  சமூக ஆர்வலர் ஜெயபால், தவத்திரு விசிறி சாமியார்  முருகன், மக்கள் அதிகாரம் நிர்வாகள் பாபு, அருள் சிபிஐ மாவட்ட குழு உறுப்பினர் வெ. சேவையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக முறையாக காவல்துறைக்கு அனுமதிக்கு விண்ணப்பித்து கடைசிநேரத்தில் மறுக்கப்பட்டு தடையை மீறி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 9 பேர் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.  காவல்துறையின் இந்த அனுமதி மறுப்பு கண்டனத்திற்குறியது. நாள்தோறும் இதே இடத்தில்  ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. மக்கள் அதிகாரத்தின் ஆர்பாட்டத்திற்கு காவல்துறையின் அனுமதி மறுப்பு கண்டனத்திற்குறியது. ஜனநாயக உரிமைகளை மறுத்து  அடக்குமுறையின் மூலம் எந்த ஒரு இயக்கத்தையும்  முடக்கிவிட முடியாது.

தஞ்சை இராவணன் 
26-04-2021

கோத்தகிரி

உயிர் கொல்லி நச்சு ஆலை ஸ்டெர்லைட் ஆலையை புறவாசல் வழியாக திறக்க முயற்சிக்கும் உச்ச நீதிமன்றம,, தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளின் நிலைப்பாட்டிற்கு எதிராக   இன்று கோத்தகிரி பகுதியில்  மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது... இதில் ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் தயாரிப்பதற்காக எனக்கூறி ஸ்டெர்லைட் திறக்கும் அயோக்கியத் தனத்திற்கும்  எதிராக  கோத்தகிரி பகுதி மக்கள் அதிகார ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆனந்தராஜ் அவர்கள் உரையாற்றினார்... ஸ்டெர்லைட்டை தமிழகத்தில் இருந்து முழுவதுமாக விரட்டி அடிக்கும் வரை எமது போராட்டம் தொடரும்..

தகவல்
மக்கள் அதிகாரம் 
கோத்தகிரி.


கோவை
ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்தி என்ற பெயரில் மறைமுகமாக வேதாந்தா கார்ப்பரேட் கம்பெனிக்கு ஆதரவாக வேலை செய்யும் உச்ச நீதிமன்றத்தை கண்டிக்கும் விதமாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி புதிய தொழிலாளர் முன்னணி மக்கள் அதிகாரம் மக்கள் கலை இலக்கியக் கழக அமைப்புகளின் சார்பாக கோவை டாடாபாடத்தில்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அதனை முதலில் அனுமதி தருவதாக இருந்த காவல்துறை பின்பு கைது செய்தது 16 பேர் கலந்துகொண்டு கைதாகினர்..

தகவல்
மக்கள் அதிகாரம்.கோவை


மதுரை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில்   ஆக்சிஜன் தயாரித்து தருகிறோம் எனும்,தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருவதால்...

ஸ்டெர்லைட் ஆலையை நயவஞ்சகமாக திறக்காதே..

என்ற முழக்கத்தின் கீழ்..

மதுரை ஒத்தக்கடை பகுதியில்

மக்கள் அதிகாரம் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் தோழர் சரவணன் தலைமையில்.

ஆர்ப்பாட்டம் நடந்தேறியது.

தோழமை இயக்கத்தை சேர்ந்த தோழர்கள் கண்டன உரையாற்றினர்.

சிபிஐ மதுரை மாவட்ட கிழக்கு ஒன்றிய செயலாளர்

தோழர் பூமிநாதன்.

விடுதலை வீரன் மாநில நிதிச் செயலாளர் ஆதித்தமிழர் கட்சி.

தோழர் விஜயகுமார்தமிழ் புலிகள் கட்சி மதுரை புறநகர் மாவட்ட  செயலாளர்.

மக்கள் அதிகாரம் திருமங்கலம் உசிலை ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆசை.

நன்றி உரை.

தோழர் ராஜா, மக்கள் அதிகாரம் மற்றும் புரட்சிகர இளைஞர் முன்னணி சேர்ந்த தோழர்களும் கலந்து கொண்டனர்.

தகவல்
மக்கள் அதிகாரம் 
மதுரை மண்டலம்




கடலூர்

28.04.2021 அன்று கடலூரில் தலைமை தபால் நிலையம் அருகே உலகக் கிரிமினல் வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக இழுத்து மூடு!
மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்.






Friday 23 April 2021

லெனின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள்!

மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளால் மகத்தான ரசிய சோசலிசப் புரட்சிக்கு வித்திட்ட பாட்டாளி வர்க்கத்தின் மாபெரும் தலைவர் மாமேதை லெனின் அவர்களின் 151-வது பிறந்த நாள் விழா 22.04.2021 அன்று கொண்டாடப்பட்டது. 

சென்னை, மகஇக

மக்கள் கலை இலக்கியக் கழகம், சென்னை கிளை சார்பாக நேரு பார்க் மற்றும் சேத்துப்பட்டு கிளைகளில் பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் அவர்களின் 151-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இதில் நேருபார்க்கில் அமைப்பின் கொடியேற்றி விழாக் கொண்டாடப்பட்டது.
தோழர் வெங்கடேசன் இவ்விழாவிற்கு தலைமை தாங்கினார்.
தோழர் தீபன் பறையிசைத்தார்.
தோழர் தாமரைபரணி அவர்கள் கொடியேற்றி தோழர் லெனின் பற்றி உரையாற்றினார்.முழக்கங்களுடனும்,
இனிப்பும் வழங்கப்பட்டது.




பு.ஜ.தொ.மு SRF மணலி கிளை

ஆசான் லெனினின் 151வது பிறந்தநாளை முன்னிட்டு SRF பு.ஜ.தொ.மு மணலி, கிளை சார்பாக நடைபெற்ற ஆலைவாயில் கூட்டத்தில் தோழர் #C_வெங்கடாசலபதி (பு.ஜ.தொ.மு SRF மணலி கிளை நி.குழு உறுப்பினர்) தோழர் #P_R_சங்கர் (பு.ஜ.தொ.மு SRF மணலி கிளை தலைவர்) சிறப்புரையாற்றினார். இதில் கார்ப்பரேட் - காவி பாசிசத்தை வீழ்த்த உறுதியேற்க்கப்பட்டது. இறுதியாக அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
தகவல்: பு.ஜ.தொ.மு SRF மணலி கிளை.




கும்மிடிப்பூண்டி
தோழர் லெனின் பிறந்தநாளை முன்னிட்டு, கும்மிடிப்பூண்டியில் அமைந்துள்ள #SRF புதிய ஜனநாயகத் தொழிலாளர் சங்கம் சார்பாக ஆலைவாயில் கூட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் பொதுச்செயலாளர் #தோழர்_விஜயகுமார் தலைமை தாங்கினார். சங்கத்தின் சிறப்பு தலைவர் #தோழர்_ம_சி_சுதேஷ்_குமார் அவர்கள் கொடியேற்றினார். பின்பு ஆசான் லெனின் படத்திற்கு மாலை அணிவித்து தோழர் லெனின் நமக்கு ஏன் தேவைப்படுகிறார் என உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் #தோழர்_விகந்தர் கலந்துக்கொண்டார். இறுதியில், அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்.

புதுச்சேரி, புஜதொமு
மார்க்சிய ஆசான்களில் ஒருவரும், சுரண்டலற்ற சமுதாயத்தைப் படைப்பதற்கு பாட்டாளி வர்க்கக் கட்சி அமைப்பு பற்றிய கோட்பாடுகளை வகுத்தளித்தவரும் ரசியப் புரட்சியை தலைமை தாங்கி நடத்தியவருமான தோழர் லெனின் பிறந்த நாள் இன்று. 150 ஆண்டுகளுக்கு முன் பிறந்த "தோழர் லெனின் தற்போது ஏன் தேவை" என விளக்கி புதுச்சேரி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கங்களில் ஆலைவாயிற்க் கூட்டம் நடத்தப்பட்டது. தகவல்: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி.





வேலூர், புஜதொமு

உழைக்கும் மக்களின் ஆசான் தோழர் லெனின் அவர்களின் 151-வது பிறந்த நாள் உலகம் முழுக்க கொண்டாடப்பட்டு கொண்டு இருக்கின்றன. அதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி கிளைச் சங்கமான தரைகடை வியாபாரி சங்கங்களின் சார்பாக மீன் மார்க்கெட் மற்றும் அண்ணா கலையரங்களம் ஆகிய கிளைகளில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன. கிளைச் சங்கத் தோழர்களும் மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்களும் இவ்விழாவில் பங்கேற்றனர்.








தருமபுரி, புமாஇமு

திருச்சி, புஜதொமு

மாமேதை தோழர் லெனின் 151வது பிறந்த நாளை முன்னிட்டு சுமைப்பணி தொழிலாளர் பாதுகாப்பு சங்கம் குட்செட் தோழர்கள் சார்பாக இன்று 22.04.2021 காலை 9 மணி அளவில் குட்செட் தொழிலாளர்கள் அலுவலகத்தில் மாமேதை தோழர் லெனினுடைய படத்திறப்பு விழா மற்றும் 151 வது பிறந்தநாளை கொண்டாடினர். சுமைப்பணி தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் குட்செட் தலைவர் தோழர். குத்புதீன் தலைமையில் தோழர். பாலு வாழ்த்துரை வழங்கினார். சுமைப்பணி தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சிறப்பு தலைவரும் மக்கள் அதிகாரத்தின் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினருமான தோழர். ராஜா வாழ்த்துரை வழங்கி பேசினார்.
அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு பாட்டாளி வர்க்கத்தின் ஆசான் தோழர் லெனின் பிறந்த நாளில் சிறப்பம்சங்களை விளக்கியும் இன்றைய அரசியல் சூழலில் கார்ப்பரேட் காவி பாசிச அபாயத்தை வீழ்த்த வேண்டிய நமது கடமைகளை வலியுறுத்தியும் பேசினார் . இறுதியாக சுமைப்பணி தொழிலாளர் பாதுகாப்பு சங்கம் (இரும்பு செட்) பொருளாளர். தோழர் பாபு அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
தகவல் :
சுமைப்பணி தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கம்,
திருச்சி.





ஆட்டோ ஓட்டநர் பாதுகாப்புச் சங்கம், திருச்சி

திருச்சியில் ஆ. ஓ. பா. ச சார்பாக தோழர் லெனினின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.




திருச்சி, மகஇக
இன்று ஜூலை-22 மாமேதை கம்யூனிச ஆசான் தோழர்.லெனின் அவர்களின் 151ம் ஆண்டு பிறந்த நாள் விழா உலகெங்கிலும் உள்ள பொதுவுடமைவாதிகள் அனைவரும் கொண்டாடும் நாள். ரசிய சோசலிச புரட்சியை நடத்தி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவி முதலாளித்துவத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் தோழர்.லெனின்.
தோழர்.லெனின் பிறந்த இந்நாளை சிறப்பிக்கும் வகையில் புரட்சிகர அமைப்புகளான மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் திருச்சியில் 3 இடங்களில் தோழர்.லெனின் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
தில்லை நகர் காந்திபுரத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட செயலாளர் தோழர்.ஜீவா தலைமையில் ம.க.இ.க தோழர்கள் மற்றும் கலைக்குழு தோழர்கள் பகுதி மக்களுடன் இணைந்து தோழர்.லெனின் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடினர்.
கலைக்குழு தோழர்.சத்யா அவர்கள் தோழர்.லெனின் பிறந்தநாள் பற்றியும் காவி கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த ஜனநாயக சக்திகள் அணி திரள்வது பற்றியும் உரையாற்றினார்.
மோடி அரசின் காவி கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த அணிதிரள்வோம் என முழக்கங்கள் இடப்பட்டது.
தகவல்:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி.





திருச்சி, புமாஇமு

மாமேதை தோழர் லெனின் 151 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி காஜா பேட்டை பகுதியில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக திருச்சி மாவட்ட அமைப்பாளர் தோழர் அரிச்சந்திரன் தலைமையில் ,மாவட்ட பொருளாளர் தோழர் வின்சென்ட்ராஜ் மற்றும் அனைத்து தோழர்களும் கலந்து கொண்டு தோழர் லெனின் அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது .
தோழர் லெனினை பற்றி தோழர் அரிச்சந்திரன் விளக்கி பேசினார். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ,
திருச்சி.
99448478885



கரூர், புமாஇமு
கரூரில் இன்று ஏப்ரல் 22 கம்யூனிச ஆசான் தோழர் லெனின் 151 வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கரூர் தாந்தோன்றிமலையில் ஜீவா நகர் என்ற பகுதியில் புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி RSYF அமைப்பின் கொடி ஏற்றி , தோழர் லெனின் போட்டோவிற்கு மாலை அணிவித்து , தற்போது நடக்கும் கார்ப்பரேட்- காவி பாசிசத்தை வீழ்த்த போராடுவோம் என உறுதி ஏற்று , பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது . இதில்
மக்கள் அதிகாரம் , விடுதலை சிறுத்தை கட்சி , திராவிட அமைப்பு , தோழர்கள் மற்றும் ஜனநாயக பொறுப்புணர்வு கொண்ட வழக்கறிஞர்கள் மற்றும்
ஜீவா நகர் பொது மக்கள் என அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு ஆசான் தோழர் லெனின் பிறந்த நாளை சிறப்பித்தனர்
தகவல்
புரட்சிகர மாணவர் -இளைஞர் முன்னணி
கரூர்


தஞ்சை

பாட்டாளி வர்க்க ஆசானகளில் ஒருவரும் மாபெரும் ரஷ்ய சோசலிச புரட்சியின் நாயகருமான தோழர் லெனினின் 151 வது பிறந்தநாள் விழா தஞ்சை இரயிலடியில் 22-042021 அன்று காலை 1030மணிக்கு நடைபெற்றது.
சிபிஐ(எம்) மாநகரச்செயலாளர் தோழர். என். குருசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னதாக லெனின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. .
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் தோழர். முத்து. உத்திராபதி,
சிபிஜ மாவட்ட பொருளாளர் தோழர். என்.பாலசுப்பிரமணியன்,
சிபிஐ வடக்கு மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் தோழர். ஆர்.தில்லைவனம்,
மக்கள் கலை இலக்கிய கழகம் மாநகரச் செயலாளர் தோழர். ராவணன்,
மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர். தேவா,
ஏஐடியூசி மாநிலச் செயலாளர் தோழர். சி. சந்திரகுமார்,
ஏஐடியூசி மாவட்ட தலைவர் தோழர். வெ. சேவையா,
தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி ( மாலெ மாவோ சிந்தனை) மாவட்ட செயலாளர் தோழர். அருண்ஷோரி,
ஆதித்தமிழர் பேரவை மாவட்ட தலைவர் தோழர். எம்.பி.நாத்திகன்,
இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் தோழர். ச.அரவிந்தசாமி,
சிஐடியூ தோழர். மணிமாறன்,
விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி தோழர். ஆர் கே. செல்வகுமார் ,
ஆர் எம் பி ஐ மாவட்டச் செயலாளர் தோழர். மதியழகன்,
தஞ்சை நஞ்சை கலைக்குழு அமைப்பாளர் தோழர். சாம்பான், தவத்திரு விசிறி சாமியார் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் துரை. மதிவாணன் நன்றி கூறினார்.
உலக நாடுகளின் ஏழை எளிய மக்களிளை பசி பஞ்சம் பட்டினியில் இருந்து பாதுகாப்பது,
மூன்றாம் உலக நாடுகளை அச்சுறுத்தும் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களை வீழ்த்துவது , தொழிலாளர்கள்,விவசாயிகளின் உரிமைகளை பறிக்கின்ற மோடி அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒன்றிணைப்பது,
கருத்துரிமை எழுத்துரிமை உள்ளிட்ட ஜனநாயக உரிமைகளைப் பறிக்கின்ற கார்ப்பரேட் காவி பாசிசத்தை முறியடிப்பது,
இந்தியாவின் அனைத்து தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்ட ஆதரவு,
இடதுசாரிகள் ஒற்றுமைக்கும்,
ஜனநாயக சக்திகளின் ஐக்கியத்திற்கும் தொடர்ந்து பாடுபடுவது குறித்து உரைகள் முழக்கங்களளின் உள்ளடக்ங்கள் அமைந்திருந்தன. இடதுசாரி அமைப்புகளை சார்ந்த தோழர்களின்ஒற்றுமையயை பறைசாற்றிய நிகழ்வாக இந்நிகழ்ச்சி அமைந்திருந்தது
22-04-2021








மதுரை

மதுரை ஒத்தக்கடை பகுதியில்..
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள்...
ஆசான் தோழர் லெனின் பிறந்த நாளில்
தொழிலாளியை தோழர் லெனினாக
தோழர் லெனினை தொழிலாளியாக
எவர்சில்வர்யைமின்னச் செய்யும் தொழிலாளியின் கைகளை...
உலகையே தன் வசப்படுத்த புரட்சிசெய்..

மதுரை ஒத்தக்கடை பகுதியில்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள்..
தோழர் லெனின் அவர்களின் 151வது பிறந்தநாளில்..
தொழிலாளர்களிடம் பிரசுரத்தை விநியோகித்து பிரச்சாரம் செய்தனர்..