Tuesday, 28 April 2026
எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது ஒரு சுமையா?
Saturday, 25 April 2026
பசித்தவனுக்கு ஏதடா ருசி?
Wednesday, 22 April 2026
கொரோனாவை விடக் கொடியது: ஒரு அரசுப் பேருந்துப் பயணத்தின் 'கலீஜ்' அனுபவம்!
Monday, 20 April 2026
உழைப்புச் சுரண்டலும் விடைதெரியா கேள்விகளும்: புதிய தொழிலாளர் சட்டங்கள் யாரைப் பாதுகாக்கிறது?
நொய்டா போராட்டம்: தொழிலாளர்களின் கொந்தளிப்பு
அண்மையில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் நொய்டாவில் 40,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திரண்டு நடத்திய மாபெரும் போராட்டம், உழைக்கும் வர்க்கத்தின் பொறுமை எல்லை மீறிவிட்டதைக் காட்டுகிறது.
விவசாயி vs முதலாளி: ஒரு அற விழுமிய ஒப்பீடு
விவசாயத்தில் இன்று லாபம் என்பது குதிரைக்கொம்பாக மாறிவிட்டது. ஆனாலும், தன் நிலத்தில் பாடுபடும் கூலித் தொழிலாளிக்கு உரிய கூலியைக் கொடுக்க ஒரு விவசாயி தயங்குவதில்லை.
ஊதியம், தொழில் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு மற்றும் தொழில்துறை உறவுகள் ஆகிய நான்கு பிரிவுகளில் கொண்டு வரப்படும் இந்த மாற்றங்கள், உண்மையிலேயே தொழிலாளர்களைப் பாதுகாக்குமா? அல்லது வேலை நேரத்தை அதிகரிப்பதற்கும், எளிதாகத் தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்குவதற்கும் முதலாளிகளுக்கு அதிகாரம் வழங்குமா?
மல்லிகாவைப் போன்றவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் உழைப்பிலேயே கழிக்கிறார்கள். ஆனால், அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான கூலி என்பது இன்னும் சட்டப் புத்தகங்களுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறது.
மத்திய அரசு அமல்படுத்தத் துடிக்கும் 4 புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் (New Labour Codes 2020) குறித்துப் பல்வேறு ஐயங்கள் எழுகின்றன.
அரசு கொண்டு வரும் புதிய சட்டங்கள் முதலாளிகளின் லாபத்தைப் பாதுகாப்பதை விட, தொழிலாளர்களின் வயிற்றுப்பசியையும் உரிமையையும் பாதுகாக்க முன்னுரிமை அளிக்கவில்லை என்பதையே நொய்டா போராட்டம் உணர்த்துகிறது.
பொன்.சேகர்
வழக்குரைஞர்
Sunday, 19 April 2026
தேர்தல் கால 'எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்': அரசியல் அலப்பறைகள்!
உன்னை எனக்குப் பிடிக்காது: ஏன் தெரியுமா?
Saturday, 18 April 2026
பசியும் மானமும்!
- ஒரு மனிதன் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்று, கையேந்தாத நிலையை அடையும்போது, அவனது மானமும் மரியாதையும் தானாகவே மெல்ல மெல்ல உயரத் தொடங்கும்.
- பசியைப் போக்காத எந்தச் சீர்திருத்தமும் ஒரு மனிதனுக்கு நிரந்தர மரியாதையைத் தந்துவிடாது. இதுவே வறுமை ஒழிப்பு குறித்த அறிவியல் பூர்வமான தீர்வு.
Friday, 17 April 2026
சந்தையின் தந்திரங்கள்: நாம் ஏய்க்கப்படுகிறோமா?
- "உள்ளூர் தயாரிப்பு"
- "இயற்கை உரமிட்டது"
- "பாரம்பரிய ரகம்"
Thursday, 16 April 2026
மிரள வைக்கும் ‘சிலிகா துகள்கள்’: நம் நுரையீரலில் எழும் 'ஹாலோ பிளாக்குகள்'!
Saturday, 11 April 2026
தேர்தல் 2026: இது ஜனநாயகத் திருவிழாவா அல்லது ஜகஜால வித்தைக்காரர்களின் மேடையா?
- களத்தில் இறங்கிய ‘விவசாயிகள்’: சேற்றில் இறங்கி நாற்று நடும் வேட்பாளர், அந்த நாற்றைத் தலைகீழாகப் பிடித்திருப்பது கூடத் தெரியாமல் கேமராவுக்குப் போஸ் கொடுக்கிறார்.
- தொழிலாளர் அவதாரம்: சிமெண்ட் தொழிலாளியாக மாறி ஹாலோ பிளாக் கல் வடிப்பது, டீக்கடையில் வடை சுடுவது, காய்கறி கடையில் தராசு பிடித்து வியாபாரம் செய்வது என இவர்களின் நடிப்புக்கு எல்லையே இல்லை. துணி துவைக்கும் பெண்ணிடம் இருந்து துணியைப் பிடுங்கி, 'வாஷிங் மெஷின்' தோற்கும் அளவுக்குத் துவைத்துக் காட்டும் வேட்பாளர்களும் உண்டு.
- அப்பளம் முதல் பிரியாணி வரை: ஒரு வேட்பாளர் அப்பளம் காய வைக்கிறார், தோசை சுடுகிறார்; மற்றொருவர் லாவகமாகப் பிரியாணி பொட்டலம் கட்டித் தருகிறார். சாலையில் செல்லும் பாட்டியின் காலில் விழுவது முதல், குழந்தைகளைத் தூக்கி வைத்துக் கொஞ்சுவது வரை இவையனைத்தும் 'பெர்ஃபார்மன்ஸ்' என்பதே அனைவருக்கும் தெரிந்த உண்மை.






.jpeg)

.png)
.jpeg)

