Monday 9 November 2020

தஞ்சை: 103 ஆம் ஆண்டு நவம்பர் புரட்சி நாள் விழா நிகழ்ச்சிகள்!

உலக நிலப்பரப்பின் ஆறில் ஒரு பகுதியான ரஷ்யாவை முதலாளித்துவ சுரண்டலில் இருந்து விடுதலை செய்த நாளான ரஷ்ய சோசலிச புரட்சியின் 103 வந்து நாள் விழா தஞ்சையில் சிறப்பாக கொண்டாடப் பட்டது.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில் தஞ்சை மானோஜிப்பட்டி கீழவாசல் ஆகிய இடங்களில்  கொடி ஏற்றப்பட்டு பகுதிமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது

தஞ்சை தலைமை அஞ்சலகம் முன்பு இன்று காலை 11 மணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி தலைமையில்  நடந்த நிகழ்ச்சியில் மக்கள் அதிகாரத்தின் மாநில பொருளாளர் காளியப்பன்,  சிறப்புரையாற்றினர். மக்கள் கலை இலக்கியக் கழகம் மாநகர செயலாளர் ராவணன், சிபி எம் எல் மக்கள் விடுதலை மாவட்ட குழு உறுப்பினர் ஜோதி,  சி பி ஐ எம் எல் லிபரேஷன் மாநகர குழு உறுப்பினர் ரமேஷ், ஏ ஐ டி யு சி மாநில செயலாளர் சி.சந்திரகுமார், மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம், வங்கி ஊழியர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் க.அன்பழகன், ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் பி.அப்பாதுரை, அரசு போக்குவரத்துக் குடந்தை கழக ஏஐடியுசி பொருளாளர் தாமரைச்செல்வன், துரை மதிவாணன் 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் வே சேவையா, ஆர் பி முத்துக்குமரன், கே மாரிமுத்து, மக்கள் அதிகாரம் தேவா, தமிழ்நாடு இளைஞர் இயக்க நிர்வாகிகள் ஜான் வின்சென்ட், மரிய திலீப் அருண்ஷோரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ்  நிகழ்வில் அனைவருக்கும் இலவச கல்வி மருத்துவம் வேலை உத்திரவாதம் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றிய மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளை, முதலாளிகளின் சுரண்டலை ஒழித்த, பெண் விடுதலையை உறுதி செய்த ரஷ்ய புரட்சியை உயர்த்திப் பிடிப்போம் என்றும் தேசிய இனங்களின், சுயநிர்ணய உரிமை கோட்பாட்டை உலகிற்கு வகுத்துத் தந்து ரஷ்யாவில்  பிரிந்து செல்வதும் சேர்ந்து வாழ்வதும் அந்தந்த தேசிய இனங்களின் உரிமை என்று கொள்கையை செயல்படுத்திய ரஷ்ய புரட்சியை உயர்த்திப் பிடிப்போம் என்றும் ,பாட்டாளிகளின் விவசாயிகளின் உரிமைகளை பறித்து கார்ப்பரேட் முதலாளிகளின் கொத்தடிமை ஆக்கும் மோடியின் பாசிசத்தை ஒழித்துக் கட்டுவோம்என்றும் ,உழைக்கும் மக்கள் தாழ்த்தப்பட்டோர் சிறுபான்மையினரை ஒடுக்கும் இந்து மதவெறிக் கும்பலை வேரறுப்போம் என்றும் ,உலக பாட்டாளி வர்க்கத்தைச் சுரண்டி ஒடுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய சக்திகளை வீழ்த்துவோம் என்றும் முழக்கம் இடப்பட்டது .மேலும் உலக நாடுகளின் ஏழை மக்களை பசி பஞ்சம் பட்டினியில் இருந்து பாதுகாப்போம் என்றும் ,முதலாளித்துவம் மனித குலத்தின் எதிரி அதனை வீழ்த்தி சுரண்டல் அமைப்பை ஒழித்து சோசலிச சமூகத்தை படைப்போம் என்று உறுதி ஏற்கப்பட்டது. 

தஞ்சை இராவணன்

07-11-2020








No comments:

Post a Comment