Monday 9 November 2020

விருத்தாச்சலம்: 103 ஆம் ஆண்டு நவம்பர் புரட்சி விழா நிகழ்ச்சிகள்!

 #நவ7ரஷ்யசோசலிசபுரட்சிஆண்டுவிழா! 

#கார்ப்பரேட்காவிபாசிசத்தை வீழ்த்த ஒன்றிணைவோம் என்ற தலைப்பில் கடலூர் #புரட்சிகரமாணவர்இளைஞர்முன்னணி சார்பாக  விருதாச்சலத்தில் அரங்கக் கூட்டம் நடத்தப்பட்டது.

தலைமை:தோழர்.மணியரசன் (மாவட்டச் செயலாளர்), புமாஇமு. 

கருத்துரை:

தோழர்.பால்ராஜ் (மாவட்ட குழு உறுப்பினர்), புமாஇமு, 

தோழர்.பூங்குழலி (மாவட்ட குழு உறுப்பினர்), புமாஇமு. 

சிறப்புரை:தோழர்.ராஜு 
(மாநில ஒருங்கிணைப்பாளர்), 
மக்கள் அதிகாரம். 
தோழர்.கணேசன்
(மாநில ஒருங்கிணைப்பாளர்), புமாஇமு.

நன்றியுரை: தோழர். மணிகண்டன் (மாவட்ட குழு உறுப்பினர்),புமாஇமு.

அரங்க கூட்டத்தில் தோழர்கள் பேசியதாவது ரஷ்ய சோசலிசப் புரட்சி என்பது பாட்டாளி வர்க்கத்தை ஆட்சி அதிகாரத்தில் அமர வைத்த தினம் இந்த நிகழ்வை நாம் அனைவரும் பொங்கல்,தீபாவளி ,ரம்ஜான்,கிறிஸ்துமஸ்,புத்தாண்டு போன்று அனைத்து தரப்பு மக்களிடமும் நாம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். 

மக்கள் கொண்டாடும் தினமாக இதனை மாற்ற வேண்டும். 

மார்க்சின் இந்த தத்துவத்தை கண்டுதான் முதலாளித்துவம் அஞ்சுகிறது இன்றைக்கு முதலாளித்துவம் மாபெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து சீரழிந்து வருகிறது. 

இன்றைய சூழலில் கொரோனா நோய்த்தொற்று என்பது முதலாளித்துவத்தின் தோல்வியால்  வந்த விளைவே.

இதை போன்ற பல்வேறு நோய் தொற்றுகள் இந்த முதலாளித்துவ லாப வெறியால் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருக்கும் இதற்கு  உயிர்பலியாகப்போவது உழைக்கும் மக்களாகிய நாம்தான்.

இந்த நோய் தொற்றால் வேலை இழந்து, பொருளாதாரம் இழந்து, வாழ்வாதாரம் இழந்து 40 கோடி பேர் இந்தியாவில் வேலை இல்லாமல் இருப்பதாக ஆய்வு சொல்கிறது. உழைக்கின்ற மக்களை ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் வெயிலில் நடக்க விட்டது பாசிச மோடி அரசுதான். இத்தகைய நோய் தொற்றால் அனைத்து தரப்பு மக்களும் அவர்களுடைய வாழ்நிலையில் சரிவை நோக்கி செல்கின்றனர். ஆனால் அம்பானி உலக பணக்காரர் பட்டியலில் இருந்து 10-ம் இடத்தில் இருந்து 05-ம்  இடத்திற்கு முன்னேறி செல்கிறார்.  

இதே போன்று உலகம் முழுக்க முதலாளித்துவத்தை பாதுகாக்கதான் இந்த அரசு கட்டமைப்பு இருக்கிறதே ஒழிய மக்களை பாதுகாக்க அல்ல. 

இதிலிருந்து நாம் மீளவேண்டும் ஆனால் மக்கள் நாம் ஒன்று சேர்ந்து மக்களுக்கான அதிகார அமைப்பை நிறுவ வேண்டும்.  

புரட்சிக்குப் பின் சோசலிச ரஷ்யாவில் உழைக்கும் மக்கள்தான் அந்த நாட்டிற்கு தேவையான அடிப்படை தேவைகளை அவர்களே  தீர்மானித்தார்கள். கல்வி,மருத்துவம்,சுகாதாரம்,போக்குவரத்து அனைத்தும் பொதுவுடமை ஆக்கப்பட்டது. பெண்களுக்கு சரிசமமான வேலைவாய்ப்பு,பேறுகால விடுப்பு என  70 ஆண்டு காலம் எந்தவித வரி உயர்வு இல்லாமல் பூமியில் ஒரு சொர்க்கத்தை படைத்தது ரஷ்ய சோசலிச புரட்சி அதேபோன்று இந்தியாவிற்கு தேவையான புதிய ஜனநாயகப் புரட்சியை நாம் படைக்க வேண்டும் அதற்கு மாணவர்கள் இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் தனித்தனியே நமது  போராடுவதால் நமது வெற்றியை பெற முடியாது. ஒருங்கிணைந்து மக்கள் அதிகாரத்தை நிறுவ கூடிய போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற வகையில் பேசினார் மேலும் இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் ம.க.இ.க புரட்சிகர பாடல்,நடனம் மற்றும் கவிதை,ஓவியம் ஆகியவை  அரங்கேற்றப்பட்டது. இறுதியில் கிராமங்களில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும்  பரிசு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அரங்கக் கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட தோழர்கள்,  ஜனநாயக சக்திகள் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். மாணவர்கள்,இளைஞர்கள்,தொழிலாளர்கள் தங்களது  குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். 

தகவல்:

தோழர்.மணியரசன் 
(மாவட்டச் செயலாளர்), 
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி, கடலூர்.

தொடர்புக்கு: 97888 08110













#rsyftn #பு_மா_இ_மு_தமிழ்நாடு #நவம்பர்_7 #ரசிய_புரட்சிநாள்விழா

நவம்பர்-7 ரசிய புரட்சிநாள் விழாவை முன்னிட்டு விருதை- பூவணூர் பகுதியில் பு.மா.இ.மு சார்பில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டி புகைப்படங்கள்!







No comments:

Post a Comment