Monday, 9 November 2020

கோவை: 103 ஆம் ஆண்டு நவம்பர் புரட்சி விழா நிகழ்சிகள்!

103 வது ரசிய புரட்சி நாளையொட்டி கோவையில் 08.11.2020 காலை மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் அரங்கக்கூட்டம் நடத்தப்பட்டது.  இதில் தோழர் தேவராஜ் (மாவட்ட துணைத் தலைவர், பு.ஜ.தொ.மு) தலைமை உரையாற்றினார்.  அடுத்தடுத்து தோழர்கள் ஒவ்வொரு தலைப்பின்கீழ் தங்களது சிறப்புரையை வழங்கினர்.

அதுமட்டுமின்றி, இரண்டு வீடியோ போடப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் பெரும் திரளான தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்கள் கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்தனர்.








#கோவை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக‌ #எஸ்_ஆர்_ஐ ஆலைவாயிலில் 103 வது புரட்சி நாள்‌ விழா கொண்டாடப்பட்டது.






திருச்சி: 103 ஆம் ஆண்டு நவம்பர் புரட்சி விழா நிகழ்ச்சிகள்!

நவம்பர் 7 ரஷ்ய புரட்சி நாள் விழா திருச்சியில் கொண்டாடப்பட்டது. இதில் பொதுமக்கள், ஜனநாயக சக்திகள், தோழர்கள் கலந்துகொண்டனர். இதில் காலையில் கொடி ஏற்றுதல், விளையாட்டுப்போட்டிகள், மாலையில் கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. காலை மதியம் உணவு வழக்கப்பட்டது. இரவு மாட்டுக்கறி உணவு வழங்கப்பட்டது.
























கரூர்: 103 ஆம் ஆண்டு நவம்பர் புரட்சி நாள் விழா நிகழ்ச்சிகள்!

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக கரூரில் நடைபெற்ற 103 ஆம் ஆண்டு நவம்பர் புரட்சி விழா நிகழ்ச்சிக் காட்சிகள்.





தஞ்சை: 103 ஆம் ஆண்டு நவம்பர் புரட்சி நாள் விழா நிகழ்ச்சிகள்!

உலக நிலப்பரப்பின் ஆறில் ஒரு பகுதியான ரஷ்யாவை முதலாளித்துவ சுரண்டலில் இருந்து விடுதலை செய்த நாளான ரஷ்ய சோசலிச புரட்சியின் 103 வந்து நாள் விழா தஞ்சையில் சிறப்பாக கொண்டாடப் பட்டது.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில் தஞ்சை மானோஜிப்பட்டி கீழவாசல் ஆகிய இடங்களில்  கொடி ஏற்றப்பட்டு பகுதிமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது

தஞ்சை தலைமை அஞ்சலகம் முன்பு இன்று காலை 11 மணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி தலைமையில்  நடந்த நிகழ்ச்சியில் மக்கள் அதிகாரத்தின் மாநில பொருளாளர் காளியப்பன்,  சிறப்புரையாற்றினர். மக்கள் கலை இலக்கியக் கழகம் மாநகர செயலாளர் ராவணன், சிபி எம் எல் மக்கள் விடுதலை மாவட்ட குழு உறுப்பினர் ஜோதி,  சி பி ஐ எம் எல் லிபரேஷன் மாநகர குழு உறுப்பினர் ரமேஷ், ஏ ஐ டி யு சி மாநில செயலாளர் சி.சந்திரகுமார், மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம், வங்கி ஊழியர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் க.அன்பழகன், ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் பி.அப்பாதுரை, அரசு போக்குவரத்துக் குடந்தை கழக ஏஐடியுசி பொருளாளர் தாமரைச்செல்வன், துரை மதிவாணன் 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் வே சேவையா, ஆர் பி முத்துக்குமரன், கே மாரிமுத்து, மக்கள் அதிகாரம் தேவா, தமிழ்நாடு இளைஞர் இயக்க நிர்வாகிகள் ஜான் வின்சென்ட், மரிய திலீப் அருண்ஷோரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ்  நிகழ்வில் அனைவருக்கும் இலவச கல்வி மருத்துவம் வேலை உத்திரவாதம் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றிய மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளை, முதலாளிகளின் சுரண்டலை ஒழித்த, பெண் விடுதலையை உறுதி செய்த ரஷ்ய புரட்சியை உயர்த்திப் பிடிப்போம் என்றும் தேசிய இனங்களின், சுயநிர்ணய உரிமை கோட்பாட்டை உலகிற்கு வகுத்துத் தந்து ரஷ்யாவில்  பிரிந்து செல்வதும் சேர்ந்து வாழ்வதும் அந்தந்த தேசிய இனங்களின் உரிமை என்று கொள்கையை செயல்படுத்திய ரஷ்ய புரட்சியை உயர்த்திப் பிடிப்போம் என்றும் ,பாட்டாளிகளின் விவசாயிகளின் உரிமைகளை பறித்து கார்ப்பரேட் முதலாளிகளின் கொத்தடிமை ஆக்கும் மோடியின் பாசிசத்தை ஒழித்துக் கட்டுவோம்என்றும் ,உழைக்கும் மக்கள் தாழ்த்தப்பட்டோர் சிறுபான்மையினரை ஒடுக்கும் இந்து மதவெறிக் கும்பலை வேரறுப்போம் என்றும் ,உலக பாட்டாளி வர்க்கத்தைச் சுரண்டி ஒடுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய சக்திகளை வீழ்த்துவோம் என்றும் முழக்கம் இடப்பட்டது .மேலும் உலக நாடுகளின் ஏழை மக்களை பசி பஞ்சம் பட்டினியில் இருந்து பாதுகாப்போம் என்றும் ,முதலாளித்துவம் மனித குலத்தின் எதிரி அதனை வீழ்த்தி சுரண்டல் அமைப்பை ஒழித்து சோசலிச சமூகத்தை படைப்போம் என்று உறுதி ஏற்கப்பட்டது. 

தஞ்சை இராவணன்

07-11-2020








Sunday, 8 November 2020

காடாம்புலியூர் செல்வ முருகன் கொட்டடிக் கொலை! மக்கள் அதிகாரம் கண்டனம்!

மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
நாள் 8-11-2020
பத்திரிக்கைச் செய்தி

சாதாரண மக்கள் சந்தேக வழக்கில் விசாரணைக்கு சென்றாலே போலீசு லாக் அப் படுகொலை செய்கிறது!

கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், கார்ப்பரேட் முதலாளிகள் செய்யும் அநியாய அக்கிரமங்களுக்கு எந்த தண்டனையும் இல்லை?. 

கடலூர் மாவட்டம், காடாம்புலியூரை சேர்ந்த 39 வயதான செல்வ முருகன் என்ற முந்திரி வியாபாரியை சந்தேக வழக்கில் அக்-28 தேதி விசாரணைக்கு அழைத்து சென்று நெய்வேலி நகர காவல் நிலையத்திலும், பிறகு தனியார் விடுதியிலும் வைத்து அடித்து சித்ரவதை செய்ததால் 4-ம் தேதி மரணமடைந்தார். 

இது அப்பட்டமான போலீசு லாக் அப் படுகொலை. சம்பந்தபட்ட போலீசார் கொலை வழக்கில் கைது செய்யப்பட வேண்டும்.

முதற்கட்டமாக இறந்தவரின் குடும்பத்திற்கு 25 லட்சம் இழப்பீடும், அவர் மனைவிக்கு அரசு வேலையும் தருவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இனி தமிழகத்தில் லாக் அப் படு கொலை நடந்தால் சாத்தான்குளம் வழக்குதான் முன்மாதிரி. சம்பந்தபட்ட போலீசார் கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட வேண்டும். பாதிக்க பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு, அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, வழக்கு முடியும் வரை நீதிமன்ற கண்காணிப்பு இது அனைத்து லாக் அப் கொலை வழக்கிலும் நடப்பதற்கு அனைவரும் போராட வேண்டும்.

விருத்தாசலம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டவர் 2 – ம் தேதியே உடல் நிலை மோசமடைந்தவரை மேல் சிகிச்சைக்காக உள் நோயாளியாக அனுமதிப்படாமல் விருத்தாசலம் அரசு மருத்துவ மனையிலிருந்து உடனே மீண்டும் சிறையில் ஏன் அடைக்கப்பட்டார்? தனியார் விடுதியில் வைத்து கணவரை பார்த்த மனைவியிடம் போலீசார் செல்வ முருகனை கைத்தாங்கலாகத்தான் நிற்க வைத்துள்ளனர். கணவரை விடுவிக்க பணமும் நகையும் கொடு என போலீசார் பேரம் பேசி உள்ளனர். செத்து போகும் அளவிற்கு போலீசார் அடித்து சித்ரவதை செய்த நிலையில் ரிமாண்ட் செய்த நீதித்துறை நடுவர் மற்றும் சான்றிதழ் கொடுத்த அரசு மருத்துவர்களின் பொறுப்பு பற்றி விசாரிக்கப்பட வேண்டும். 

காவல் துறை காட்டுமிராண்டித்தனமாக அடித்து சித்ரவதை செய்து கொலை செய்து விட்டனர் என அவரது மனைவி மற்றும் உறவினர்கள் போலீசார் மீது குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக காவல் ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் இருகாவலர்கள் மீது தான் குற்றம் சொல்கிறார்கள். செல்வ முருகன் உடலை ஆய்வு செய்து நீதித்துறை நடுவர் உடலில் பல இடங்களில் லத்தியால் அடித்த காயம் ரத்த கட்டாக உள்ளது என்பதை அவரது மனைவியிடம் உறுதிபடுத்தி உள்ளார்.

தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்திரவிட்டுள்ளது. ஆனால் சாத்தான் குளம் லாக்அப் கொலை வழக்கை பேன்று நீதிமன்றம் நேரடியாக கண்காணித்தால் மட்டுமே உரிய நீதி கிடைக்கும். குற்றவாளி போலீசார் தண்டிக்கப்படுவார்கள். 

தோழமையுடன்
வழக்கறிஞர்.சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்.
தொடர்புக்கு - 95971 38959

Friday, 6 November 2020

வேலூர்: 103 ஆம் ஆண்டு நவம்பர் புரட்சி விழா நிகழ்ச்சிகள்!

நவம்பர் 7, 1917 கையேந்தி நின்றவர்கள் கைநீட்டி எடுத்துக்கொண்ட நாள்.

உரிமை மறுக்கப்பட்டவர்கள் அதை பறித்து எடுத்துக் கொண்ட நாள்.

அடக்கி ஒடுக்கப்பட்டவர்கள் அதிகாரத்திற்கு வந்த நாள்.

வரலாறு தலைகீழாக மாறிய நாள்.

 ரஷ்ய புரட்சி நாள்.

மக்களைப் பேரழிவில் தள்ளி வரும் முதலாளித்துவத்திற்கு மாற்று சோசலிசம் மட்டுமே. 

சோசலிசப் புரட்சிக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள புரட்சிகர அமைப்புகளின் சார்பாக நவம்பர் புரட்சி 103 ஆம் ஆண்டு விழா - இதுதான் பாட்டாளி மக்களுக்கான விழா என்பதை உணர்த்தும் வகையில் - வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாநில தொழிற்சங்கத்தின் கீழ் செயல்படும் "வேலூர் மாவட்ட சாலையோர வணிகர்கள் மற்றும் சிற்றுண்டி வணிகர்கள் நலச்சங்கம்" சார்பாக வேலூரில் நவம்பர் புரட்சி நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

வேலூர் அண்ணா கலையரங்கம் கிளைச் சங்கத்தின் சார்பாக கிளைப் பொருளாளர் தோழர் வி.குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் கிளைத் தலைவர் தோழர் இ.சுப்பிரமணி அவர்கள் கொடியேறறினார். மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் அகிலன் சிறப்புரையாற்றினார். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த ஆட்டோ தொழிலாளி தோழர் செல்வம் வாழ்த்துரை வழங்கினார். கிளை உறுப்பினர் தோழர் பி.பழனி நன்றி உரையாற்றினார்.


வேலூர் பழைய மீன் மார்க்கெட் கிளைச் சங்கத்தின் சார்பாக கிளை துணைச் செயலாளர் தோழர்  எ.பழனி தலைமையில் நடைபெற்ற விழாவில் கிளை உறுப்பினர் தோழர் ஜி.சுப்பிரமணி கொடியேற்றினார். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாவட்டத் தலைவர் தோழர் பி.சரவணன் சிறப்புரையாற்றினார். மக்கள் கலை இலக்கிய கழகம் செயற்குழு உறுப்பினர்  தோழர் வாணி வாழ்த்துரை வழங்கினார். கிளை உறுப்பினர் தோழர் இஸ்மாயில் பரீத் நன்றி உரையாற்றினார்.






தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
வேலூர் மாவட்டம்