Monday, 29 December 2025
'கவிஞன்' என்ற பெயரில் ஒரு கழிசடை!
Tuesday, 11 November 2025
கம்யூனிஸ்டுகளின் போர்க்களங்கள்!
மனிதர்களும் இங்கே போராடுகின்றனர். தாங்கள் உயிர் வாழ்வதற்கு இடையூறு ஏற்படுத்தும் விலங்குகளுக்கு எதிராகவும் போராடுகின்றனர்; அதே வேளையில் தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும், மேம்படுத்திக் கொள்வதற்காகவும் தங்களது உழைப்பைச் சுரண்டும் முதலாளிகள், பண்ணையார்கள் போன்ற மனித விலங்குகளுக்கு எதிராகவும், அது ஆளும் அரசாயினும் எதிர்த்துப் போராடுகின்றனர்.
கருத்துரிமை, மனித மாண்பு சிதைக்கப்படும் பொழுதும், அரசியல் உரிமைகள் நசுக்கப்படும், பறிக்கப்படும் பொழுதும் மனிதர்கள் உலகம் முழுவதும் போராடுகின்றனர். முதலையின் வாயில் சிக்கிய மானைக் காப்பாற்ற தனது உயிரையும் பணயம் வைத்து உதவும் குரங்கைப் போல, மனிதர்களும், சக மனிதர்களின் நலனைக் காக்க, அது தூரதேசமாயினும் முடிந்தவரை அவர்களுக்கு ஆதரவாகப் போராடுகின்றனர்.
மனித குலத்தின் ஒவ்வொரு சாராரும், தங்களின் நலனுக்காகப் போராடினாலும், பெரும்பான்மையான அடித்தட்டு மக்களின் நலனுக்காகப் போராடுபவர்கள் அகிலம் முழுக்க கம்யூனிஸ்டுகள் மட்டுமே.
ஆம்! கம்யூனிஸ்டுகள் மட்டுமே ஒடுக்கப்படுகின்ற ஒட்டுமொத்த மக்களின் நலன்களுக்காகப் போராடுபவர்கள். ஒரு உழைப்பாளி சுரண்டப்படுவதையும், அவனது உரிமைகள் பறிக்கப்படுவதையும் அவனுக்கு உணர்த்துபவர்கள் கம்யூனிஸ்டுகள் மட்டுமே.
போராட்டங்களில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும். தோல்வியைக் கண்டு துவண்டுவிடாமல், வெற்றியின் சுவடுகளை நினைவுகூர்வதன் மூலம், அவர்கள் மேலும் மேலும் தங்களை ஊக்கப்படுத்திக் கொள்கின்றனர்.
1917 ஆம் ஆண்டு, நவம்பர் 7 அன்று நடைபெற்ற ரஷ்ய சோசலிசப் புரட்சிதான் கம்யூனிஸ்ட்களின் போராட்டங்களில் முதன்மையாகத் திகழ்வது. ரஷ்யப் புரட்சியை ஒவ்வொரு ஆண்டும் குதூகலத்துடன் நினைவு கூர்வதன் மூலம் அவர்கள் தங்களை மெருகேற்றிக் கொள்கின்றனர்.
இந்த ஆண்டு, நவம்பர் 9ஆம் தேதி அன்று, மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய இரு அமைப்புகளின் சார்பில் வேலூர், தொரப்பாடி, வள்ளலார் மண்டபத்தில், நடைபெற்ற 109-வது ரஷ்ய சோசலிசப் புரட்சி விழா நிகழ்ச்சியில் நானும் ஒரு பார்வையாளராகக் கலந்து கொண்டேன்.
சிறுவர்களின் சிலம்பாட்டம், கலைஞர்களின் பாடல்கள், தலைவர்களின் சொற்பொழிவு என களைகட்டிய இந்த விழாவில் எழுந்த கரவொலிகள், வேலூர் கோட்டையில் முட்டி மோதி, கீழ்த்திசை மலைகளில் தவழ்ந்த மேகங்களில் ஊடுருவி சிலாகித்தன.
இந்த விழாவில், இளம் தோழர் இந்துமதி அவர்களின் தெளிந்த நீரோடை போன்ற நேருரையைக் கேட்டபோது ஆனந்தப்பெருக்கில் எனது கண்கள் சற்றே பணிந்து நீரைச் சொரிந்தன. விழாக்கள்கூட கம்யூனிஸ்டுகளுக்கு போர்க்களம்தான். போர்க்களங்களே வீரர்களை அடையாளம் காட்டுகின்றன!
தமிழ்மணி
Tuesday, 27 June 2023
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி: வெள்ளிவிழா மாநாட்டுச் செய்திகள்!...3
பொதுக் கூட்டம்
"தீவிரமாகும் கார்ப்பரேட் சுரண்டல் - காவி பாசிசம் மோதி வீழ்த்துவோம்!" எனும் முழக்கத்துடன் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் வெள்ளி விழா மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் 25.06.2023 அன்று மாலை சென்னை சைதை தேரடியில் பு.ஜ.தொ.மு மாநிலத் தலைவர் தோழர் இல.பழனி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் அவர்கள் பு.ஜ.தொ.மு கடந்து வந்த பாதை பற்றி அறிமுக உரையாற்றினார்.
முன்னிலை
ம.க.இ.க கலைக்குழு பொறுப்பாளர் தோழர் லதா, பு.ஜ.தொ.மு சென்னை உறுப்பினர் தோழர் பேச்சியம்மாள், மக்கள் அதிகாரம் சென்னை பொருளாளர் தோழர் வெண்ணிலா ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.
உரை வீச்சு
பு.ஜ.தொ.மு மாநில பொதுச் செயலாளர் தோழர் லோகநாதன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
தோழர் பிரதீப், அகில இந்திய பொதுச் செயலாளர், IFTU, ஆந்திரா, தோழர் பாலன், பெங்களூரூ உயர்நீதிமன்ற வழக்கறிஞர், தோழர் கு.பாரதி, துணை பொதுச் செயலாளர் LTUC, தோழர் ஸ்ரீகுமார், தேசியச் செயலாளர் AITUC, தோழர் ஜெயராமன், துணைத் தலைவர் CITU, வடசென்னை, மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் தோழர் காளியப்பன் மற்றும் தோழர் ராஜூ, மாநில பொதுச் செயலாளர், மக்கள் அதிகாரம் தமிழ்நாடு - புதுவை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தொடர்புடைய பதிவுகள்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி: வெள்ளிவிழா மாநாட்டுச் செய்திகள்!...2
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி: வெள்ளிவிழா மாநாட்டுச் செய்திகள்!...1
.jpeg)





























