Saturday, 21 February 2026
உயிரற்றதில் தொடங்கி ரோபோக்களை நோக்கி விரையும் உயிரின் விசித்திரப் பயணம்!
Friday, 20 February 2026
தமிழைச் சிதைக்காமல் காப்போம்: 2026 உலகத் தாய்மொழி நாளில் ஒரு மீள்பார்வை
Wednesday, 18 February 2026
சாமியார் வேடம்: ஒரு திட்டமிட்ட ஏமாற்று அரசியல்!
சமூகத்தில் "நல்ல சாமியார்", "கெட்ட சாமியார்" என்ற பாகுபாடே கிடையாது. என்னைப் பொறுத்தவரை சாமியார்கள் என்றாலே அவர்கள் போலிகள்தான். ஒருவர் சாமியார் வேடம் தரிப்பதன் நோக்கமே மக்களை ஏமாற்றுவதற்குத்தான்; அந்த வேடத்திற்குப் பின்னால் நடப்பவை யாவும் திட்டமிட்ட ஏமாற்று வேலைகளே!
சுரண்டலின் முதல் படி
ஆன்மீக ஏமாற்று வேலைகளில் இரண்டு வகைகள் உண்டு. அதில் முதலாவது மற்றும் அபாயகரமானது 'கருத்தியல் ஏமாற்று'. கர்ம வினை, விதிப்பயன், மோட்சம் எனப் புரியாத மொழியில் பேசி, மக்களின் சிந்திக்கும் திறனை மழுங்கடிப்பதே இதன் வேலை. இந்தக் கருத்தியல் போதைக்கு ஒருமுறை பலியாகிவிட்டால், மக்கள் தாமாகவே முன்வந்து தங்கள் உழைப்பையும், பணத்தையும் அந்தச் சாமியார்களிடம் கொட்டுகிறார்கள். இவ்வாறு மக்களின் அறியாமையை மூலதனமாக்கித்தான், தெருவில் திரிந்தவர்கள் இன்று 'கார்ப்பரேட் சாமியார்களாக' உருவெடுத்துள்ளனர்.
யார் இந்தச் சாமியார்கள்?
சாமியார்கள் ஒன்றும் வானத்தில் இருந்து குதிப்பதில்லை; அவர்கள் நம்மிலிருந்தே தோன்றுகிறார்கள். தொடக்கக் காலத்தில் சமூகத்தில் நேர்மையாக வாழத் தெரியாதவர்களும், உழைக்க அஞ்சுபவர்களும் தேர்ந்தெடுக்கும் குறுக்கு வழிதான் இந்த ஆன்மீக வேடம். ஏமாற்றுவதற்கு மிகவும் எளிதான களம் ஆன்மீகம் என்பதைப் புரிந்துகொண்டு, இவர்கள் தங்களைச் சுற்றி ஒரு புனித பிம்பத்தைக் கட்டமைக்கிறார்கள். தொடக்கத்தில் பிழைப்புக்காக வேடம் போடுபவர்கள், பின்னாளிலே பெரும் செல்வாக்கும், அதிகாரமும் கொண்ட பிரபல சாமியார்களாக உருமாறுகிறார்கள்.
ஆன்மீகத் திரை: கிரிமினல்களின் புகலிடம்
வாழத் தகுதியற்றவர்கள் சாமியாராகும் போது, அவர்கள் செய்யும் உபதேசங்கள் யாவும் வெறும் வெற்று முழக்கங்களே. கஞ்சா குடிக்கிகளும், சோக்குப் பேர்வழிகளும், சமூக விரோதிகளும் இன்று காவி உடையின் பின்னால் ஒளிந்துகொண்டு தங்களைக் காப்பாற்றிக் கொள்கிறார்கள். மக்கள் அறிவிலிகளாய் இருக்கும் வரை, இந்த முடிச்சவித்திகளுக்கு இங்கே மவுசு இருந்து கொண்டே இருக்கும்.
முடிவுரை
உழைத்து வாழும் மனிதன் ஒருபோதும் சாமியாராக முடியாது. ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்டவர்கள் மட்டுமே பீடங்களில் அமர முடியும். மக்களின் அறியாமையும், கேள்வி கேட்காத தன்மையும் தான் இவர்களுக்கான ஆக்சிஜன். கருத்தியல் ரீதியாக மக்கள் என்று விழிப்புணர்வு பெறுகிறார்களோ, அன்றுதான் இந்த கார்ப்பரேட் சாமியார்களின் சாம்ராஜ்யம் சரிந்து விழும்!
- தமிழ்மணி
வன்னியர்கள் ஒடுக்கப்பட்ட மக்களா?
Saturday, 14 February 2026
தமிழ்நாட்டில் மார்க்சிய-லெனினிய இயக்கங்கள் ஏன் வேரூன்றவில்லை?
Monday, 9 February 2026
பெரியார் சிந்தனைகளும் கம்யூனிசமும்: ஒரு கரம் தட்டினால் ஓசை வராது!
பார்ப்பன ஆதிக்கத்தையும், இந்து மத மூடநம்பிக்கைகளையும் ஒழிப்பதில் இதுவரை யாரும் முழுமையான வெற்றியைப் பெற்றுவிடவில்லை என்பதுதானே எதார்த்தம்? பெரியார் வாழ்ந்த காலத்தைவிட, இன்று பார்ப்பன ஆதிக்கமும் மூடநம்பிக்கைகளும் பல வடிவங்களில் அதிகரித்துள்ளன என்பதை யாராவது மறுக்க முடியுமா? பெரியார் காட்டிய வழி இந்த அதிகார மையங்களில் சிறு விரிசல்களை ஏற்படுத்தியதே தவிர, அவற்றை வேரோடு பிடுங்கி எறியவில்லை. இதை நாம் "பெரியாரியத்தின் தோல்வி" என்று சொல்லிவிட முடியுமா? நிச்சயமாக இல்லை.
2. எதார்த்த நிலை என்ன?
இன்று கம்யூனிசமும் எதிர்பார்க்கும் வேகத்தில் வளரவில்லை; அதே சமயம் பெரியார் எதிர்த்த பார்ப்பன மேலாதிக்கமும் ஒழியவில்லை. இதுதான் கசப்பான உண்மை. எனவே, "நீ தோற்றாய்" என்று ஒருவரை ஒருவர் கையை நீட்டுவதைவிட, நாம் எங்கே தோற்றோம் என்பதை இரு தரப்புமே சுயபரிசோதனை (Self-Introspection) செய்துகொள்ள வேண்டிய தருணம் இது.
3. செயல்பாட்டில் உள்ள இடைவெளி:
இன்றைய கம்யூனிஸ்டுகள் வர்க்கப் போராட்டத்தோடு சேர்த்து, சாதிய ஆதிக்கத்தையும் மதவாதத்தையும் எதிர்த்துத் தீவிரமாகப் போராடுகின்றனர். ஆனால், பெரியாரைப் போற்றுவோர் பார்ப்பன மேலாதிக்கத்தை எதிர்ப்பதில் காட்டும் அதே தீவிரத்தை, ஒரு சமத்துவ (கம்யூனிச) சமூகத்தைக் கொண்டு வருவதற்காகக் காட்டுகிறார்களா? என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.
4. தீர்வு என்ன?
விமர்சனம் செய்வது எளிது; ஆனால் விடை காண்பதுதான் கடினம். ஒரு கை தட்டினால் மட்டும் ஓசை வராது. பார்ப்பன மேலாதிக்கம் அற்ற, மூடநம்பிக்கைகள் இல்லாத, சுரண்டலற்ற ஒரு பொதுவுடமைச் சமூகம் அமைய வேண்டும் என்றால், இரு தரப்பும் இணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்.
விமர்சனங்களைத் தாண்டி, சாதியற்ற மற்றும் சுரண்டலற்ற ஒரு சமூகத்தை உருவாக்க இரு தரப்பும் இணைந்து செயல்பட வேண்டிய பொதுவான புள்ளி எது என நீங்கள் கருதுகிறீர்கள்?
தமிழ்மணி

~2.jpg)
.jpeg)

.png)
.jpeg)
.jpeg)
.webp)