Tuesday, 6 May 2025

கழிசடைகளின் கூடாரமாக "புரட்சிகர மக்கள் அதிகாரம்"!

"புரட்சிகர மக்கள் அதிகாரம்" என்ற கோஷ்டியைச் சேர்ந்த புவன் என்கிற ஒரு நபர், பாடகர் கோவனுக்கு எதிராக முகநூலில் ஒரு காணொளி வெளியிட்டிருந்தார். 

புவன் காணொளி

Sekar P: "நீங்கள் பேசியதை நீங்களே ஒரு முறை கேட்டுப் பாருங்களேன். ஏதாவது புரிகிறதா என்று பார்ப்போம். எல்லாம், காணொளிகளுக்கு வந்தக் கேடு."

என அதற்கு ஒரு மறுமொழியை நான் வெளியிட்டிருந்தேன்.

அதற்கு, அதே "புரட்சிகர மக்கள் அதிகாரம்" கோஷ்டியைச் சேர்ந்த பென்னாகரம் "தோழர் கோபிநாத்" என்ற நபருக்கும் எனக்கும் இடையில் நடந்த உரையாடலை அப்படியே தருகிறேன்.

"கோபிநாத்": நீங்க இப்படி பேசுறதெல்லாம் கேக்குறது எங்களுக்கு சாபக்கேடு.

Sekar P:  வாண்டுகளின் வசவுகளைக் கேட்பதும் ஒரு சாபக்கேடுதான்.

"கோபிநாத்": உங்களைப் போன்ற துரோகிகளின் தூற்றலை கேட்பதும் சாபக்கேடுதான்.

Sekar P:  நான் உமக்கு என்ன துரோகம் பண்ணினேன் தம்பி? வசவு பாடி வம்படிப்பதுதான் உங்கள் வேலையோ? மீசைக்கார தாத்தா நல்லா வளத்திருக்காரு. வேறென்ன செய்ய? பெல் சிட்டி ஊழலை வளர்த்தவரின் வாரிசுகள் இப்படித்தானே பேசுவீங்க. நல்லா வருவீங்க தம்பி. வாழ்த்துகள். பணம் கொடுத்து ஏமாந்த பெல் ஊழியர்கள், அகவை 65 ஐத் தாண்டியும் மீசைக்கார ஆசானைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள், நியாயம் கேட்க?

"கோபிநாத்": நீ எனக்கு துரோகம் செயல சேகரு, கட்சியை காட்டி கொடுத்து திமுகவுக்கு அடகு வைத்து, மருதையனின் ரசிகர் குஞ்சியா ? வளம் வந்து புரட்சிகர கட்சியை துரோகம் பாதைக்கு எடுத்துட்டு போன திருடர்களுக்கு, துணை போன நீ துரோகி இல்லையா.

பெரிய தியாகி நீ, பெல் சிட்டி ஊழல் என்றால், அங்கு தங்கி கூத்தடித்த மருதையனும், காளியப்பனும் தியாகியா? சேகர். நீ துரோகிகளின் வாரிசு. அமைப்பு சொத்தை விற்று பங்கு போட்டுக் கொண்ட துரோகிகளின் கூட்டத்தில் உலாவும் பெருச்சாளி நீ. அமைப்பை உடைக்க பெல் சிட்டி ஊழல் என்கிற பதத்தை பயன்படுத்திய அயோக்கியர்கள். ஊழல் இருப்பின் ஏன் மருதையன்  ஓடி ஒளிந்து கொண்டான். எங்கு போனான், ஏன் எந்த கூட்டத்திற்கு வரவில்லை. ஏன் தலை மறைவு, ஏன் வெளிப்படையாக பேசவில்லை, ஏன் அணிகளிடம் வைத்து போராட வில்லை, இப்படி எத்தனையோ கேள்விகள் இருக்கிறது. ஏனென்றால் கட்சி உடைக்க துரோகி மருதையனுக்கு கிடைத்த ஆயுதம் பெல்சிட்டி ஊழல், சரி உங்களுக்கு இதற்கெல்லாம் கேள்வி கேட்க நேரமில்லை, பாவம் திமுகவிற்கு போய் சொம்புபடியுங்கள். உனக்கு எப்படி புரியும். நாங்க பேசறது .

நீங்க போயி திமுக கூட சேர்ந்து புரட்சி பண்ணுங்கள்.

***
இதைத் தொடர்ந்து நான் எழுதிய மறு மொழிகளை வெளியிடாமல் முடக்கிவிட்டது அந்த கோஷ்டி.

***
தொடர்ந்து எனக்கு எதிராக வசவுச் சொற்களை வாரி இறைத்தது.

"கோபிநாத்": டேய் பொறுக்கி, திமுக கிட்ட காசு வாங்கி வேலை செய்ற அயோக்கிய பயலே, உனக்கு கட்சியை பத்தியோ அல்லது நக்சல்பாரி அரசியல் பற்றியோ ஒரு மயிரும் தெரியாதுடா. கட்சியை திமுககிட்ட அடகு வச்சி பிழைப்பு நடத்துற அயோக்கிய பயலுகளுக்கு குண்டி கழுவி விடற நாயி நீ. எவண்டா உன்கிட்ட வரணும். நான் வரண்டா , உன் தலைவனை வர சொல்லுடா பேசுறதுக்கு. எனக்கு புத்தி சொல்ல உனக்கு என்னடா தகுதி இருக்கு அயோக்கிய பயலே.

***
கோபிநாத் என்ற இந்த நபருக்கு ஒரு 35 வயது இருக்கும். எனக்கோ வரும் 27 இல் 67 வயது முடிகிறது.

நான் மகஇக தொடங்கிய 1980 களின் தொடக்கத்திலிருந்து சுமார் இருபது ஆண்டு காலம் மகஇக மாநில செயற்குழுவிலும், தற்போது "மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின்" மாநில நிர்வாகக் குழுவிலும் செயல்பட்டு வருகிறேன். எனது புரட்சிகர வாழ்க்கை அனுபவங்களை "இழி குணம்" என்ற தொடரில் விரிவாக இதே தளத்தில் எழுதி உள்ளேன்.

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் அதிகாரம் அமைப்பிற்குள் வந்த புதிய தலைமுறையைச் சேர்ந்த கோபிநாத் போன்ற இத்தகைய நபர்கள் பொது வாழ்க்கையில் ஈடுபடுவதற்கு லாயக்கற்றவர்கள் என்பதை இந்த உரையாடலே உணர்த்தி விடுகிறது.

'பெல் சிட்டி' ஊழலுக்கு உடனிருந்த இந்தக் கும்பலின் தலைவர் இருவர் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்த போது, மக்கள் அதிகாரம் அமைப்பிலிருந்து சில நபர்களுடன் வெளியேறி, சில காலம் 'மக்கள் அதிகாரம்' பெயரிலேயே செயல்பட்டு, தற்போது "புரட்சிகர‌ மக்கள் அதிகாரம்" என்ற பெயரில் செயல்படுகின்றனர். இது ஒரு ரவுடிக் கும்பல் என்பதை பழைய தோழர் ஒருவர் மிகச்சரியாகவே கணித்திருக்கிறார்.

எனவே, கோபிநாத் போன்ற நபர்களையும், இத்தகைய நபர்களை முன்னணியாளர்களாகக் கொண்ட "புரட்சிகர மக்கள் அதிகாரம்" என்ற குப்பலையும் அடையாளம் கண்டு புறந்தள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்மணி
மகஇக முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர்
06.05.2025

Sunday, 4 May 2025

கண்ணீர்த் துளிகளில் வாழும் மனிதர்கள்!

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொருளாளராக இருந்த களப்பணியாளர் தோழர் சீனிவாசன் மறைந்த நாள் (05.05.2012) இன்று. 

தோழர்கள் மருதையன், காளியப்பன், கதிரவன், சீனிவாசன், தமிழ்மணி ஆகிய ஐந்து பேர் கொண்ட அன்றைய மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில செயற்குழு செயல்பட்ட காலமே மகஇக-வின் பொற்காலம். 

தோழர் சீனிவாசனோடு பழகிய காலங்கள் என்றும் பசுமையாய் நினைவில்.

தோழர் சீனிவாசன் மறைவின் போது நான் எழுதிய நினைவஞ்சலி.

தோழர் சீனிவாசன்

***
"எனது 54 ஆண்டு வாழ்நாளில் நான் யாருக்காகவும் இவ்வளவு கண்ணீர் வடித்ததில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர் மரணப் படுக்கையில் கிடந்த போது தோழரை சந்திக்கச் சென்றேன். அன்று அவரைப் பார்த்து அதிர்ச்சியடைந்து நான் ஒரு அரை மணிநேரம் பேசாமல் இருந்தேன். பேசும் ஆற்றல் அன்று எனக்கில்லை. கண்ணீரால் கைக்குட்டை நனைந்ததே தவிர என் கண்களை திறக்க முடியவில்லை.

"தமிழ்மணியா இது?" என அவர் கேட்ட பிறகும் எனக்கு பேச நா எழவில்லை. அவரது முகத்தைப் பார்க்க முயலும் முன்பே என் கண்கள் குளமாகிவிடும். பிறகு எப்படி அவரை நான் பார்ப்பது?

இரண்டு வாரம் கழித்து மீண்டும் அவரைப் பார்த்தேன். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு துயரைத்து மறைத்து ஒரு சில வார்த்தைகள் பேசினேன்.

அவர் மரணமடைந்த செய்தி கேட்டு வழியத் தொடங்கிய கண்ணீர் இன்னும் நிற்கவில்லை. அவர் மரணம் உறுதி செய்யப்பட்டதால் ஏற்கனவே குடும்பத்தினர் மற்றும் தோழர்களின் கண்ணீர் வற்றிப் போய்விட்டதாக இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் தோழர் மருதையன் குறிப்பிட்டார். ஆனால் எனக்கு இன்னும் வற்றவில்லை. கண்ணீர் வழிந்தோடி கொண்டுதான் இருக்கிறது.

ஒரு முப்பது ஆண்டு காலம் உற்ற தோழனாய், நண்பனாய், உறவாய் என என்னுள் அமைப்பு வேலைகளில், எமது உடல் நலனில், எமது குடும்ப உறவில் இரண்டறக் கலந்தவர் தோழர் சீனிவாசன். பொதுக்கூட்டங்களில் பேசும் பொழுது ”ஏன்னு சொல்ச்சுனா” என்று அவர் பயன்படுத்திய சொற்றொடர் எப்படி என் நினைவிலிருந்து அகலாதோ அது போல என் கண்களிலிருந்து எவ்வளவுதான் கண்ணீர் வழிந்தாலும் அது ஒரு போதும் வற்றாது.

ஆனாலும் வெறும் கண்ணீர் மட்டும் அவர் விட்டுச் சென்ற புரட்சிப்பணியை நிறைவேற்ற உதவாது என்பதை உணர்ந்தே இருக்கிறேன். அவரைப் போல வீருகொண்டு எழுவதே அவருக்கு நான் செலுத்து நினைவஞ்சலியாக இருக்க முடியும்.

தோழர் சீனிவாசனுக்கு வீர வணக்கம்!"

தமிழ்மணி

Friday, 2 May 2025

சோளக்கொல்லை பொம்மை!

'பெல் சிட்டி: ஊழல்வாதியின் பக்கம் நின்று, ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளத் திராணி இன்றி அஞ்சி நடுங்கி அமைப்பை விட்டு ஓடிய ஒரு சிறுகும்பல் பக்கம் ஒட்டிக் கொண்ட, ஒரு கிளையின் உறுப்பினரான  ராமலிங்கம் என்ற ஒற்றை நபர் மகஇக பெயரில், தோழர் கோவன் உள்ளிட்ட மகஇக ஒட்டுமொத்த மாநிலத் தலைமையையும் அமைப்பிலிருந்து  நீக்கியதாக வீனாப்போன வினவு தளத்தில் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். 

கோவனின் ரசிகர் ராமலிங்கம், 

ஜனநாயகம் பற்றி பீற்றித் திரியும் இந்தக் கும்பல் கடைபிடிக்கும் ஒற்றை நபர் ஜனநாயகம் என்பது ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டுக்கு எதிரானதொரு  புதுவகை. 

நிற்க, கோவன் கோவையில் ஆணாதிக்கத் திமிரோடு பேசினார் என்று ஒரு செய்தியை அள்ளி இறைத்திருக்கிறது இந்தக் கும்பல். செய்வது கலைப்புவாதம் என்பதைக்கூட புரிந்து கொள்ள முடியாத மூடர் கூட்டத்திடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

தோழர்கள் மருதையன், கோவன் உள்ளிட்டோரின் கடும் உழைப்பால் உருவான மகஇக வின் பாடல்கள் உள்ளிட்ட படைப்புகளுக்குச் சொந்தம் கொண்டாடுகிறார் மேடைக்கு முன்னால் அமர்ந்து பல் இளித்த இந்த இரசிகர்.

பிரம்மன் படைத்ததை அழிப்பதே ஈசனின் வேலை என்பது புராணங்களில் மட்டும் அல்ல, பலரின் கடும் உழைப்பால் உருவான மகஇக அமைப்பையும் அழிக்கப் புறப்பட்டவனும் ஒரு 'கோட்டீஸன்'தான் என்பது இன்றைய நிஜக்கத்தை.

மக்கள் கலை இலக்கியக் கழகம் என்பதை முழுமையாகக்கூட உச்சரிக்கத் தெரியாத ஒரு நபர், அறிக்கை எல்லாம் தயாரிக்கிற அளவுக்கு ஆற்றல் உள்ளவர் அல்ல.  எல்லாம் அந்த ஈசன் செயலே! பாவம் சோளக் கொல்லை பொம்மையாய் ராமலிங்கம்!

தமிழ்மணி 

Thursday, 24 April 2025

மணவிழாவில் ஒத்த உணர்ச்சி கொண்டோரின் ஒன்று கூடல்!

முன்னிரவு  தொடங்கிய மேடை அலங்கார வேலைகள் முடியும் தருவாயில் ஒரு பக்கம், மாலைநேர மணவிழா விருந்துக்கான சமையல் வேலைகள் மறுபக்கம் நடந்து கொண்டிருக்க, பங்குனியின் கடைசிநாள் ஞாயிறு பிற்பகலில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஒவ்வொருவராக மண்டபத்தை நோக்கி வரத்தொடங்கினர். 

நண்பர்களும் உறவினர்களும் தோழர்களும் மண்டபத்தின் கீழ்வாசல் வழியாக திரள் திரளாய் நுழைவதைக் கண்டு அச்சமோ என்னவோ, கதிரவன் மேற்கு நோக்கி வேகமாக ஓடியதால்  வெக்கையும் சற்றே தணிந்தது.  வந்திருந்தோரின் நேச மழையில், நானோ கொடுங்கோடையிலும் உறைந்து போனேன்.

நண்பர்களை ஆரத்தழுவி கட்டி அணைப்பது வழக்கம்தான் என்றாலும், பல ஆண்டுகள் கழித்து சிலரைக் கட்டித் தழுவியபோது ‘ஸ்பைடர்மேனாக’ நான் பறக்கலானேன். 


வாழ்நாள் முழுக்க கூடவே பயணிக்கின்ற சொந்தங்கள், பொது வாழ்வில் களப்போராட்டங்களில் கைகோர்த்து பயணிக்கின்ற தோழர்கள், மிக நீண்டகாலம் அருகருகே அமர்ந்து வேலை பார்க்கும் சக ஊழியர்கள் 

என இவர்கள், சிலசமயங்களில் சிலபல காரணங்களுக்காக விலகி நிற்கவோ, தோழமையை துண்டித்துக் கொள்ளவோ, மனம் கசிந்து போகவோ நேரிடலாம்.

“நட்பு செய்வதற்கு தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை; ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்” என்கிறான் வள்ளுவன் (785)

அண்மையில் சென்னையில் மின்சாரத்தால் தாக்குண்டு மழை நீரில்  தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனை ஒரு இளைஞன் காப்பாற்றிய போது அவன் மீது அதைப் பார்ப்பவர்களுக்கு ஏற்படுகிற பரிவு ஒத்த உணர்ச்சியின் வெளிப்பாடுதானே? 

உலகையே உலுக்கிய சுனாமியின்போது உணவுக்காக நீண்ட வரிசையில் பலர் பசியோடு காத்திருக்க, முன்வரிசையில் தான்பெற்ற உணவை ‘என்னைவிடப் பசியோடு பலர் காத்துக் கிடக்கின்றனர்’ எனக்கூறி மீண்டும் மொத்த உணவோடு தனது உணவைச் சேர்த்த சிறுவனின் நடத்தையைப் படிக்கும் போது, அவன் எப்படி இருப்பான் என்பதுகூட தெரியவில்லை என்றாலும், அவன் மீது ஏற்படுகிற பரிவு ஒத்த உணர்ச்சியின் வெளிப்பாடன்றோ? 

அதனால்தான் நாம் உணர்வதை, நாம் செய்ய விரும்புவதை, பிறர் உணரும் போதும், செய்யும் போதும் ஏற்படும் உணர்ச்சிதான் நட்பு ஏற்படுவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கிறது என்கிறானோ வள்ளுவன்?

இரத்த உறவு எப்பொழுது ஒத்த உணர்ச்சியை ஏற்படுத்துகிறதோ அப்பொழுது உறவினர்களும் நண்பர்களாகி விடுவார்கள்; தோழர்களும்தான். ஒத்த உணர்ச்சி இருக்கும்வரை உறவையும் தோழமையையும் நட்பையும் ஒருவராலும் உடைக்க முடியாது. 

இப்படித்தான், நான் எனது உறவினர்களையும் தோழர்களையும் நண்பர்களையும் பார்க்கிறேன்; பாவிக்கிறேன்.

முதுமையையும் உடல் நலனையும் பொருட்படுத்தாமல் தூத்துக்குடி, ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை, திருச்சி, தஞ்சை, கோவை, பொள்ளாச்சி, தாராபுரம், பாண்டிச்சேரி, சென்னை, காஞ்சிபுரம், தருமபுரி, பெங்களூரு, வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கம் மட்டவெட்டு-அத்திமூரான் கொட்டாய்  என தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தொலை தூரங்களிலிருந்தும் அந்த ஒத்த உணர்ச்சிதான் எனது இல்ல மணவிழாவிற்கு  
திருப்பத்தூரை நோக்கி பலரையும் ஈர்த்ததோ?

இதுஒரு மணவிழா என்பதையும் தாண்டி, இது ஒத்த உணர்ச்சி கொண்டோரின் ஒன்றுகூடல் (get together) என்பதாகத்தான் ஒவ்வொருவரையும் உணர வைத்தது. 

“குற்றமற்றவனாகவும், குடிமக்களின் நலத்திற்குப் பாடுபடுபவனாகவும் இருப்பவனை தமது உறவினனாகக் கருதி, மக்கள் சூழ்ந்து கொள்வார்கள்” என்கிறான் வள்ளுவன் (1025). இந்த ஒன்றுகூடல் கூட அப்படித்தானோ?

ஆம்! குற்றமற்றவர்களாகவும், குடிமக்களின் நலன்களுக்கு பாடுபடுவோராகவும் நம்மால் முடிந்தவற்றை செய்ய முனைவோம். நண்பர்களாய், மக்கள் நம்மைச் சூழ்ந்திருக்க நமக்கென்ன கவலை?

மணவிழாவில் பங்கேற்ற அனைவருக்கும் 
நன்றிப் பெருக்குடன்,

பொன்.சேகர்

Tuesday, 11 March 2025

இந்துக்களை மட்டுமே வட்டமடிக்கும் கெரகச் சக்கரம்!

ஜாதகத்தையும், ஜோதிடத்தையும் நம்பும் ஐயன்மீர்! ஐயம் தீர்ப்பீர்!

கிரகங்களின் தாக்கம் இந்த பூமியில் உள்ள அனைத்து மனிதர்கள் மீதும் உள்ளது என்றால், அது ஏன் இந்துக்கள் மீது மட்டும், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டு இந்துக்கள் மீது மட்டும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன?

அக்கம் பக்கமாக வாழுகின்ற இஸ்லாமிய, கிறிஸ்தவர்கள் மீது ஏன் அந்தக் கிரகக் கதிர்கள் விழுவதில்லை? கீழ் வீட்டில் இருக்கிற இந்து மீது, அதுவும் சாதிக்குத் தகுந்தவாறு விழுகிற கிரகக் கதிர்கள், மாடி வீட்டில் இருக்கிற இஸ்லாமிய - கிறிஸ்தவன் மீது விழுவதில்லையே. கிரகங்களுக்கே 'செலெக்ட்டிவ் அம்னீசியாவா'? இல்லை, இஸ்லாமிய - கிறிஸ்தவர்களைக் கண்டு கிரகங்களுக்ககே அச்சமா? 

கிரகங்களப் பாத்து இந்துக்கள் அச்சப்படுகிறார்கள். ஆனால், கிறிஸ்தவர்களையும், இஸ்லாமியர்களையும் பார்த்து கிரகங்களே அஞ்சுகின்றன. என்ன கொடுமை 'சார்' இது?


ஓ! புரியுது! புரியுது! உங்க அச்சம் ஏன்னு? இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள். அவிங்க குண்டு போட்டா கிரகங்களின் குண்டியே கிழிஞ்சிடுமோ? பெறவு, கிருஸ்தவன்? ஏசுவ பகைச்சிக்கிட்டா தேசம் போன இந்துக்கள் எல்லாம் திரும்ப வர வேண்டி இருக்குமே? அவங்களுக்கும் சேர்த்து பலன் பாக்கணும்னா கிரகங்களுக்கு 'ஒர்க்லோடு' அதிகமாயிடுமே? படா கில்லாடிங்கப்பா நீங்க?

அவன் இந்து, இவன் இஸ்லாமியன், இவன் கிருஸ்தவன் என்ற 'டேட்டாவை' கிரகங்களுக்கு யாரப்பா கொடுத்தது? மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவே அரசுகள் ஓடி ஒளியும் பொழுது நீங்க எப்படிப்பா கணக்கெடுப்பு நடத்துனீங்க? அந்த ரகசியத்தை டாக்டர் ஐயாகிட்ட சொல்லலாம் இல்ல? பாவம் புலம்பிக்கிட்டே இருக்காரு.

ஜாதகம், ஜோதிடம், நல்ல நேரம், கெட்ட நேரம், ராகு காலம், எமகண்டம், குளிகை, பொறந்த நேரம், புண்ணாக்கு நேரம் இதெல்லாம், ஏன்டா இந்துக்களுக்கு மட்டுமே வைக்கிறீங்க? 

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவீர் இந்த நாட்டிலே?

ஊரான்

Thursday, 6 March 2025

தமிழன்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டுமா?

தமிழன் என்பதற்கு அடையாளம் என்ன? ஒருவன் தமிழன்தான் என்பதை எதை வைத்து முடிவு செய்வது? தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவன் எல்லாம் தமிழன் ஆகிவிட முடியுமா? தமிழன் என்பதை மரபணு ரீதியாக நிரூபிக்க வேண்டாமா? 

கருப்புதானே ஆதி தமிழனின் நிறம். அப்படியானால்
மரபணு ரீதியாக மாநிறம் மற்றும் சிவப்பாய் இருகிறவன் எவனும் தமிழனாக இருக்க முடியாதே? 


யார் தமிழன் என்பதற்கே இத்தனை சோதனைகளைச் செய்ய வேண்டி இருக்கிறது. அதற்காக கருப்பா இருக்கிற பாலியல் குற்றவாளி சீமான் போன்றவர்கள் எல்லாம் ஆள வந்தால் என்னவாகும்? 

ஆள வருகிறவன் நல்லவனா கெட்டவனா என்பதுதானே முதன்மைத் தேவை. இதையெல்லாம் பார்க்காமல் தமிழன்தான் ஆள வேண்டும் என்றால் சாக்கடைகள்கூட உங்களை ஆள நேரிடும். பிறகு நீங்கள் புழுக்களாய்தான் நெளிந்து கொண்டிருப்பீர்கள்.

கடைசியாக ஒரு கேள்வி. பள்ளிக்கல்வி முதல் கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் டெல்லிதானே தமிழ்நாட்டை ஆளுகிறது.  டெல்லியை ஆளுகிறவன் குஜராத்தியாக இருக்கிறானே? என்ன செய்ய?

தமிழ்மணி

Monday, 3 March 2025

சிந்து சமவெளி நாகரிகத்தை 'ஐஜேக்' பண்ண ஆளுநர் ஆர்.என்.ரவி முயற்சி!

உலகில் வெள்ளை, மஞ்சள், கருப்பு ஆகிய மூன்று இனங்களில் வெள்ளை இனம்தான் உயர்ந்தது என, நிற அடிப்படையில் பாகுபாடு இருந்ததாகவும், வின்சன்ட் சர்ச்சில் மற்ற இனத்தை நாய் போலக் கருதினார் என்றும் அங்கலாய்க்கிறார் ஆர்.என்.ரவி. 

"ஆரியர்-திராவிடர் வெவ்வேறு இனம். இந்தியா மீது ஆரியர் படை எடுத்தனர்" என்பதெல்லாம் கடந்த 60-70 ஆண்டுகளில் திராவிட சித்தாந்தம் கொண்டவர்களால் உருவாக்கப்பட்டதாம். அதை பெரியார் தமிழகத்தில் திணிக்க முயற்சித்தாராம். ஆர்.என்.ரவி சொல்கிறார்.

இந்து தமிழ் மார்ச் 4, 2025

சர்ச்சில் ஒருபக்கம் இருக்கட்டும் சார், எங்களைப் போன்று கருப்பாய் இருப்பவர்களைப் பற்றி, பார்ப்பனர்களாகிய நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? எங்களையெல்லாம் 'சூத்திரவாள்' 'வேசி மக்கள்' என்று, நாயைவிட மிகக் கேவலமானவர்களாக சொன்னது நீங்கள்தானே சார்? உங்கள் கூட்டம்தானே சார்? இன்றும்கூட எங்களை 'சூத்திரவாள்' என்றுதானே சார் விளிக்கிறீர்கள்!

பார்ப்பனர்கள் அனைவரும் இந்தியா முழுக்க ஏன்
வெள்ளையாக இருக்கிறார்கள்? 'வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்' என்று பார்ப்பனர்கள் பெருமை பேசுவததற்கும் சர்ச்சிலுக்கும் என்ன வேறுபாடு ஐயா ஆர்.என். ரவி அவர்களே? இப்போ என்ன தீடீர் ஞானோதயம்? 

வரலாற்றைத் திருத்துவதுதானே உங்களது வேலை. அறநெறி தந்த வள்ளுவனை இந்து மத ஆன்மீக சன்யாசியாக்க முயற்சிப்பவர்கள்தானே நீங்கள். அதனால்தானே இன்று "சிந்து சமவெளி" நாகரிகத்தை 'சிந்து சரஸ்வதி' நாகரிகம் என்று கூற வேண்டும் என தொல்லியல் தரவுகள் எதுவும் இன்றி மடைமாற்ற முனைகிறீர்கள்.

ஆரியன் என்ற சொல்லை பெரியாரா உருவாக்கினார்? நீங்கள்தானே அந்தச் சொல்லை சமஸ்கிருதத்தில் வேதங்களில் வைத்திருக்கிறீர்கள்? ஆரியர்கள் என்றால் உயர்ந்தவர்கள் என்று நேற்று வரை நீங்கள்தானே பெருமை பேசிக் கொண்டிருந்தீர்கள்? 

அப்புறம், ஆரியர்கள் என்றால் 'ஆசிரியர்கள், சிறந்தவர்கள்' என்பதைக் குறிப்பிடவே 'ஆரியர்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டது என்று புது 'டிக்ஷனரி' எழுதுகிறீர்கள். அது எப்படி சார், பார்ப்பனர்கள் மட்டுமே ஆசிரியர்களாகவும், சிறந்தவர்களாகவும் இருந்தார்கள்? இதற்கு யார் சார் காரணம்? வெள்ளைத் தோல் பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்கள் எல்லாம் ஆசிரியர்களாக ஆவது இருக்கட்டும், நாலு எழுத்துக் கூட்டிப் படிப்பதற்குக்கூட முடியாமல் போனதற்கு யார் சார் காரணம்? 

கடைசியா "அனைவரும் சமம், அனைவரும் ஒரே குடும்பம்" என்று ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளதாகச் சொல்கிறீர்கள். இருக்கட்டும். இருக்கட்டும். அப்படியானால் இந்துக் கோவில்களில் அனைத்து சாதி அர்ச்சகர் விசயத்தில் பார்ப்பனர்கள் மட்டுமே பூசை செய்ய வேண்டும் என்று ஏன் சார் அடம்பிடிக்கிறீர்கள்? 

நீங்கள் மட்டுமே ஆசிரியர்களாக, சிறந்தவர்களாக இருந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது சார். இப்பொழுது நாங்களும் ஆசிரியர்களாக, சிறந்தவர்களாக வளர்ந்துவிட்டோம் என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள் ரவி சார். 

தமிழ்மணி