- விளைபொருள் ஊக்குவிப்புச் சட்டம் என்று சொல்லக்கூடிய விவசாயிகள் உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தகச் சட்டம்.
- ஒப்பந்தச் சாகுபடிச் சட்டம் என்று சொல்லக்கூடிய விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் சட்டம்.
- அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்
Monday, 27 September 2021
வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக வேலூரில் ஆர்ப்பாட்டம்!
Sunday, 26 September 2021
வேலூரில் பகத்சிங் பிறந்த நாள் விழா!
அன்று வணிகம் செய்ய வந்த பரங்கியர் கூட்டம் நாட்டு வளங்களை அள்ளிச் சென்றது. நாட்டைக் காக்க வீரு கொண்டெழுந்த மக்களை அடக்குமுறைச் சட்டங்களாலும் கொடிய அடக்கு முறையாலும் ஒடுக்க முனைந்தக் கூட்டத்தை அஞ்சி நடுங்க வைத்தான் மாவீரன் பகத்சிங்.
இன்றோ நாட்டு வளங்களை தனியாருக்குத் தாரை வார்த்து, ஒட்டு மொத்த மக்களையும் ஓட்டாண்டியாக்கி வருகிறது பிழைக்க வந்த சங்பரிவார் கூட்டம். இந்தக் கூட்டத்தையும் விரட்டியடிக்க வேண்டுமானால் இன்று நமக்கு ஓராயிரம் பகத்சிங்குகள் தேவைப்படுகிறார்கள்.
இதை உணர்த்தும் விதமாக, பகத்சிங் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் 27.09.2021 அன்று வேலூர் மாவட்டம், வேலூர் மாநகர "தோழர் பகத்சிங் அமைப்புசாரா தொழிலாளர் சங்கம்", புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக பழைய பேருந்து நிலையம், ஆட்டோ ஸ்டாண்ட் அருகாமையில் தோழர் பகத்சிங் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
'புதிய வேளாண் சட்டத் திருத்தங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயத் தோழர்களுக்கு துணை நிற்போம்!' என்று முழக்கத்தை முன்வைத்து அனைவரும் உறுதி ஏற்றனர். சங்கத் தலைவர் தோழர் செல்வம் அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். ம.க.இ.க தோழர் இராவணன் அவர்கள், தோழர் பகத்சிங் குறித்தும், வேளாண் சட்டத்திருத்தங்கள் குறித்தும் சிறப்புரையாற்றினார். சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.
தகவல்
Saturday, 6 March 2021
வேளாண் சட்டங்களை எதிர்த்து நூறாவது நாள்! தொடரும் போராட்டங்கள்!
வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நூறாவது நாளை எட்டி உள்ள நிலையில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் 06.03.2021 அன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
கடலூர்
நூறு நாட்களாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் மோடி அரசு அதை கண்டுகொள்ளாமல் தேர்தல் வேலைகளை செய்து கொண்டிருக்கிறது. இந்த மூன்று வேளாண் சட்டங்களை இரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாகவும் அதைக் கண்டுகொள்ளாத மோடி அரசை கண்டிக்கும் வகையில் கடலூர் பேருந்து நிலையம் அருகில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்கள் அதிகாரம் தோழர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
தகவல்
Wednesday, 13 January 2021
போகியில் பொசுங்கிய வேளாண் சட்டங்கள்!
கடலூர்
கடலூரில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பாக போகி தினத்தில் வேண்டாத பழைய பொருட்களை கொளுத்தும் வகையில் மத்திய பாசிச மோடி அரசின் 3 வேளாண் சட்ட நகலை கொளுத்தப்பட்டது.
தகவல்
மக்கள் அதிகாரம் தமிழ்நாடு புதுவை
கடலூர், வலையமாதேவி
மூன்று வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து 13/01/2021 போகி பண்டிகையில் வேளாண் சட்ட நகல் எரிப்பு கடலூர் மாவட்டம் வலையமாதேவியில் பு.மா.இ.மு தோழர்கள் நடத்தினார்.














































