"தொடர் நடவடிக்கையால்
போதைப் பொருள் கடத்தல் சங்கிலியைத் தடுத்துள்ளோம். போதைப் பொருள்
பழக்கத்துக்கு எதிராக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக
டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்தார்"
இந்து தமிழ் திசை நாளேடு டிசம்பர் 21, 2024.
ரொம்ப மகிழ்ச்சி.
அதேபோல,
டாஸ்மாக் சாராயத்துலகூட
போதை ஏறுதுன்னு சொல்றாங்க.
அதனால, இந்த
டாஸ்மாக் சாராயச்
சங்கிலியையும்
கொஞ்சம் தடுத்தீங்கன்னா தாய்மார்களின்
தாலியாவது தப்பி நிற்கும்.
அப்புறம்,
அப்பிடியே
கையோட கையா,
இந்த டாஸ்மாக்
போதைக்கு எதிராகவும்
ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துனா உங்களுக்குக்
கோடி புண்ணியமாப் போவும். நாங்க கோடி போடறதும் மிச்சமாகும்!
ஏதோ தோனுச்சி. சொல்லிப்புட்டேன்.
அம்புட்டுத்தான்.
தமிழ்மணி
No comments:
Post a Comment