Showing posts with label நக்சல்பாரி. Show all posts
Showing posts with label நக்சல்பாரி. Show all posts

Tuesday, 6 May 2025

கழிசடைகளின் கூடாரமாக "புரட்சிகர மக்கள் அதிகாரம்"!

"புரட்சிகர மக்கள் அதிகாரம்" என்ற கோஷ்டியைச் சேர்ந்த புவன் என்கிற ஒரு நபர், பாடகர் கோவனுக்கு எதிராக முகநூலில் ஒரு காணொளி வெளியிட்டிருந்தார். 

புவன் காணொளி

Sekar P: "நீங்கள் பேசியதை நீங்களே ஒரு முறை கேட்டுப் பாருங்களேன். ஏதாவது புரிகிறதா என்று பார்ப்போம். எல்லாம், காணொளிகளுக்கு வந்தக் கேடு."

என அதற்கு ஒரு மறுமொழியை நான் வெளியிட்டிருந்தேன்.

அதற்கு, அதே "புரட்சிகர மக்கள் அதிகாரம்" கோஷ்டியைச் சேர்ந்த பென்னாகரம் "தோழர் கோபிநாத்" என்ற நபருக்கும் எனக்கும் இடையில் நடந்த உரையாடலை அப்படியே தருகிறேன்.

"கோபிநாத்": நீங்க இப்படி பேசுறதெல்லாம் கேக்குறது எங்களுக்கு சாபக்கேடு.

Sekar P:  வாண்டுகளின் வசவுகளைக் கேட்பதும் ஒரு சாபக்கேடுதான்.

"கோபிநாத்": உங்களைப் போன்ற துரோகிகளின் தூற்றலை கேட்பதும் சாபக்கேடுதான்.

Sekar P:  நான் உமக்கு என்ன துரோகம் பண்ணினேன் தம்பி? வசவு பாடி வம்படிப்பதுதான் உங்கள் வேலையோ? மீசைக்கார தாத்தா நல்லா வளத்திருக்காரு. வேறென்ன செய்ய? பெல் சிட்டி ஊழலை வளர்த்தவரின் வாரிசுகள் இப்படித்தானே பேசுவீங்க. நல்லா வருவீங்க தம்பி. வாழ்த்துகள். பணம் கொடுத்து ஏமாந்த பெல் ஊழியர்கள், அகவை 65 ஐத் தாண்டியும் மீசைக்கார ஆசானைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள், நியாயம் கேட்க?

"கோபிநாத்": நீ எனக்கு துரோகம் செயல சேகரு, கட்சியை காட்டி கொடுத்து திமுகவுக்கு அடகு வைத்து, மருதையனின் ரசிகர் குஞ்சியா ? வளம் வந்து புரட்சிகர கட்சியை துரோகம் பாதைக்கு எடுத்துட்டு போன திருடர்களுக்கு, துணை போன நீ துரோகி இல்லையா.

பெரிய தியாகி நீ, பெல் சிட்டி ஊழல் என்றால், அங்கு தங்கி கூத்தடித்த மருதையனும், காளியப்பனும் தியாகியா? சேகர். நீ துரோகிகளின் வாரிசு. அமைப்பு சொத்தை விற்று பங்கு போட்டுக் கொண்ட துரோகிகளின் கூட்டத்தில் உலாவும் பெருச்சாளி நீ. அமைப்பை உடைக்க பெல் சிட்டி ஊழல் என்கிற பதத்தை பயன்படுத்திய அயோக்கியர்கள். ஊழல் இருப்பின் ஏன் மருதையன்  ஓடி ஒளிந்து கொண்டான். எங்கு போனான், ஏன் எந்த கூட்டத்திற்கு வரவில்லை. ஏன் தலை மறைவு, ஏன் வெளிப்படையாக பேசவில்லை, ஏன் அணிகளிடம் வைத்து போராட வில்லை, இப்படி எத்தனையோ கேள்விகள் இருக்கிறது. ஏனென்றால் கட்சி உடைக்க துரோகி மருதையனுக்கு கிடைத்த ஆயுதம் பெல்சிட்டி ஊழல், சரி உங்களுக்கு இதற்கெல்லாம் கேள்வி கேட்க நேரமில்லை, பாவம் திமுகவிற்கு போய் சொம்புபடியுங்கள். உனக்கு எப்படி புரியும். நாங்க பேசறது .

நீங்க போயி திமுக கூட சேர்ந்து புரட்சி பண்ணுங்கள்.

***
இதைத் தொடர்ந்து நான் எழுதிய மறு மொழிகளை வெளியிடாமல் முடக்கிவிட்டது அந்த கோஷ்டி.

***
தொடர்ந்து எனக்கு எதிராக வசவுச் சொற்களை வாரி இறைத்தது.

"கோபிநாத்": டேய் பொறுக்கி, திமுக கிட்ட காசு வாங்கி வேலை செய்ற அயோக்கிய பயலே, உனக்கு கட்சியை பத்தியோ அல்லது நக்சல்பாரி அரசியல் பற்றியோ ஒரு மயிரும் தெரியாதுடா. கட்சியை திமுககிட்ட அடகு வச்சி பிழைப்பு நடத்துற அயோக்கிய பயலுகளுக்கு குண்டி கழுவி விடற நாயி நீ. எவண்டா உன்கிட்ட வரணும். நான் வரண்டா , உன் தலைவனை வர சொல்லுடா பேசுறதுக்கு. எனக்கு புத்தி சொல்ல உனக்கு என்னடா தகுதி இருக்கு அயோக்கிய பயலே.

***
கோபிநாத் என்ற இந்த நபருக்கு ஒரு 35 வயது இருக்கும். எனக்கோ வரும் 27 இல் 67 வயது முடிகிறது.

நான் மகஇக தொடங்கிய 1980 களின் தொடக்கத்திலிருந்து சுமார் இருபது ஆண்டு காலம் மகஇக மாநில செயற்குழுவிலும், தற்போது "மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின்" மாநில நிர்வாகக் குழுவிலும் செயல்பட்டு வருகிறேன். எனது புரட்சிகர வாழ்க்கை அனுபவங்களை "இழி குணம்" என்ற தொடரில் விரிவாக இதே தளத்தில் எழுதி உள்ளேன்.

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் அதிகாரம் அமைப்பிற்குள் வந்த புதிய தலைமுறையைச் சேர்ந்த கோபிநாத் போன்ற இத்தகைய நபர்கள் பொது வாழ்க்கையில் ஈடுபடுவதற்கு லாயக்கற்றவர்கள் என்பதை இந்த உரையாடலே உணர்த்தி விடுகிறது.

'பெல் சிட்டி' ஊழலுக்கு உடனிருந்த இந்தக் கும்பலின் தலைவர் இருவர் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்த போது, மக்கள் அதிகாரம் அமைப்பிலிருந்து சில நபர்களுடன் வெளியேறி, சில காலம் 'மக்கள் அதிகாரம்' பெயரிலேயே செயல்பட்டு, தற்போது "புரட்சிகர‌ மக்கள் அதிகாரம்" என்ற பெயரில் செயல்படுகின்றனர். இது ஒரு ரவுடிக் கும்பல் என்பதை பழைய தோழர் ஒருவர் மிகச்சரியாகவே கணித்திருக்கிறார்.

எனவே, கோபிநாத் போன்ற நபர்களையும், இத்தகைய நபர்களை முன்னணியாளர்களாகக் கொண்ட "புரட்சிகர மக்கள் அதிகாரம்" என்ற குப்பலையும் அடையாளம் கண்டு புறந்தள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்மணி
மகஇக முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர்
06.05.2025

Friday, 1 September 2023

தோழர் தமிழரசன் நினைவு நாள்!

தோழர் தமிழரசனின் தனித் தமிழ்நாடு கோரிக்கையை கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டுள்ள இன்றைய சில தமிழ்த் தேசியர்கள், தோழர் தமிழரசன் அவர்கள் மேற்கொண்ட பொன்பரப்பி வங்கிக் கொள்ளை, திருச்சி நேரு சிலை குண்டு வெடிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை ஆதரிக்கிறார்களா? அத்தகைய நடவடிக்கைகள் இன்றைக்கும் பொருந்துமா? பொருந்தும் என்றால் அத்தகைய நடவடிக்கைகள் இனி இவர்கள் தொடருவார்களா? இல்லை தமிழரசனை துதிபாடிக் கொண்டே வெறும் வாய்ச் சவடாலோடு நிறுத்திக் கொள்வார்களா?

திருச்சி நேருசிலை குண்டு வெடிப்பில் எந்தவிதத் தொடர்பும் இல்லாத தோழர்கள் சிலர் கைது செய்யப்பட்டு, பல்வேறு மிரட்டல்கள், சித்திரவதைகளுக்கு உள்ளானது பற்றி இன்று தமிழரசனைப் போற்றி புகழுவோருக்கு ஏதேனும் தெரியுமா?
 
மக்கள் விடுதலைக்காகப் போராடித் தியாகிகளான தோழர்கள் குறித்த நேர்மறை அம்சங்களோடு அவர்களின் எதிர்மறை அம்சங்களையும் பரிசீலிப்பதன் மூலம் மட்டுமே மக்கள் விடுதலையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். 
இத்தகைய பரிசீலனைகளினூடேதான் தோழர் தமிழரசன் அவர்களை நினைவுகூற வேண்டும்.

தமிழ்மணி

Monday, 3 July 2023

சாவிலும் சாதிக்குச் சவக்குழி வெட்டிய தோழர் ரங்கநாதனுக்கு வீரவணக்கம்!

சாவிலும் சாதிக்குச் சவக்குழி வெட்டிய 
தோழர் ரங்கநாதனுக்கு வீரவணக்கம் !

ஆம்! இன்று அந்தக் கம்யூனிச புரட்சியாளனின் 32 - வது நினைவு நாள்.

32 ஆண்டுகளுக்கு முன்பு 03.07.1991
அன்று அவரது இறுதி உரையில் மகஇக மாநிலப் பொருளாளர் தோழர் சீனிவாசன் பேசினார்,

"ஒருவன் கம்யூனிஸ்டாக மாறிக் கொள்ளலாம். ஆனால், அவன் வாழ்நாள் முழுவதும் கம்யூனிஸ்டாக வாழ்ந்து மடிவதுதான் வாழ்வில் யாரும் அடைய முடியாதது. அதைத் தோழர் ரங்கநாதன் சாதித்துக் காட்டியுள்ளார்"
என்று அவரது கல்லறையில் முழங்கினார்

இன்று அந்த மாபெரும் மக்கள் தலைவனின் நினைவு நாள். நக்சல்பாரி இயக்கங்கள் வலது இடது சந்தர்ப்பவாதங்களில் சறுக்கி விழுந்த பொழுது, மக்கள் திரள் பாதையை உயர்த்திப் பிடித்து, மக்கள் திரள் அமைப்புகளின் போராட்டங்களை வடிவமைத்து, புரட்சிகர இயக்கங்களுக்கு படை திரட்டிய போராளியின் நினைவு நாள்.

சுற்று வட்டார கிராமங்களில் சாதிய மோதல்கள் ஆனாலும், கிராமங்களுக்கு இடையிலான மோதல்கள் ஆனாலும் பணக்கார கூட்டத்தார் பண்ணையார்களின் நலன்களுக்காக, நிலப்பரப்புகளின் நலன்களுக்காக உழைக்கும் மக்கள் தங்களுக்குள் மோதிக் கொள்ளக் கூடாது
என்று தன்னந் தனியாய் தன் தோழர்களை உடன் இணைத்துக் கொண்டு தடுப்பு வேலியாய் நின்று  தடுத்திட்ட மாவீரனின் நினைவு நாள்.

இறுதியாக ஒன்று...
அன்றைய நக்சல்பாரி இயக்கங்கள் இடது தீவிரவாத ஆயுத சாகசவாத நடவடிக்கையில் இறங்கிய போது, அதன் எதிர்வினையாய் காக்கிச் சட்டைப் போலீசின் அடக்கு  முறைகளை நித்தம் நித்தம் எதிர்கொண்டு உயிரைத் துச்சமென நினைத்து, உழைக்கும் மக்களுக்காக தன் இறுதி மூச்சு வரை இருப்பேன் என்று போலீசுக்கும் அதிகார வர்க்கத்திற்கும், வர்க்க எதிரிகளுக்கும் அச்சமூட்டிய  அந்தக் காரப்பட்டு கிராமத்தின் வசந்தத்தின் இடி முழக்கம் தோழர் ரங்கநாதன்.

தான் விரைவில் இறந்து விடுவேன் என்று தெரிந்து, தனது உடலைத் தாழ்த்தப்பட்டோர் இடுகாட்டில்தான்  புதைக்க வேண்டும்  என்று உயில் எழுதி வைத்து சாதி வெறிக்கும் சனாதன வெறிக்கும் சவுக்கடி கொடுத்த
உத்தமரின் நினைவு நாள் இன்று.

நச்சல்பாரி புரட்சியாளர் காரப்பட்டு தோழர் ரங்கநாதன் அவர்களின் 32 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி 03.07.2023 அன்று விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் வட்டாரம், காரப்பட்டு கிராமத்தில் அனுசரிக்கப்பட்டது.

முதல் நிகழ்ச்சியாக தோழர் ரங்கநாதன் நினைவு அலுவலகத்தில் திருவெண்ணைநல்லூர் வட்டாரப் பொருளாளர் தோழர் ராவணன் அவர்கள் தலைமையில் கொடியேற்றினார்

மக்களுடன் எளிமையாகப் பேசிப் பழகி அரசியல் படுத்துகின்ற தோழர் ரங்கநாதன் அவர்களின் அழகிய நுட்பத்தைப் பற்றியும் அவருடைய அணுகு முறை பற்றியும் பேசினார்.

பிறகு, திருவெண்ணைநல்லூர் விவசாயிகள் விடுதலை முன்னணியினுடைய வட்டார இணைச் செயலாளர் தோழர் கிருஷ்ணமூர்த்தி, இன்று காவிப் பாசிசம் எப்படி மக்களை அடக்கி ஒடுக்குகிறது என்பது குறித்து சிறிது நேரம் பேசினார்.

அதன் பிறகு, அனைவரும் பேரணியாக செங்கொடி உயர தோழர்களின் வீரவணக்கம் முழக்கத்தோடு கல்லறை நோக்கிச் சென்றனர்.

கல்லறை அருகில் இருக்கின்ற கொடிக் கம்பத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணி வட்டாரச் செயலாளர் தோழர் அரிகிருஷ்ணன் தலைமை ஏற்று கொடியேற்றி வைத்தார்.

இறுதியில், விவசாயிகள் விடுதலை முன்னணி மாநிலத் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் அம்பேத்கர், 
'சாதி தீண்டாமையை ஒழிப்பதிலும் மற்றும் கூலி ஏழை நடுத்தர விவசாயிகளுடைய உரிமைகளுக்காகவும் எப்படிப் போராடினார், இறுதி வரை சாதி ஒழிப்பில் சமரசம் இல்லாமல் எப்படிப் போராடினார் என்பதை நினைவு கூர்ந்ததோடு, இன்றைக்கு விவசாயம் அழிந்து வரும் சூழலில் விவசாயிகளுடைய வாழ்க்கை கேள்விக்குறியாக்கப்படுவதும், குறிப்பாக மூன்று வேளாண் திருத்தச் சட்டத்தில் என்னென்ன பாதிப்பு என்பதைப் பற்றியும், தற்போது திமுக அரசால் நிறைவேற்றப்பட்ட நில ஒருங்கிணைப்புச் சட்டம் 2023 எந்தெந்த வகையில் விவசாயிகளை, பொதுமக்களை பாதிக்கின்றது என்பதைப் பற்றியும், மேல்பாதியில் எப்படி அரசே தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறது என்பதைப் பற்றியும், சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழ் வழிபாட்டை மறுக்கும் தீட்சிதர் கும்பலை அம்பலப்படுத்தியும், இறுதியாக விவசாயிகள் விடுதலை முன்னணி நடத்த இருக்கின்ற தஞ்சை மாநாட்டுக்கு அறைகூவல் விடுத்தும் உரையாற்றினார்.

இறுதியாக தோழர்கள் அனைவரும் தங்கள் கைகளை உயர்த்தி தோழர் ரங்கநாதனுக்கும், உழைக்கும் மக்களுக்காக உயிர்த் தியாகம் செய்த நக்சல்பாரி கம்யூனிஸ்ட் தியாகிகளுக்கும் வீரவணக்கம் செலுத்தினர்.

தகவல்: 
விவசாயிகள் விடுதலை முன்னணி விழுப்புரம் மாவட்டம்