Showing posts with label தஞ்சை. Show all posts
Showing posts with label தஞ்சை. Show all posts

Tuesday, 15 August 2023

தஞ்சை: விவசாயிகள் விடுதலை முன்னணி, மாநாட்டு அனுபவம்!... தொடர்-1

2023, ஆகஸ்டு 13, அதிகாலை 4.34 மணிக்கு கைபேசி ஒலிக்கிறது. மறுமுனையில் வேலூரிலிருந்து இராவணன். காலை 7.00 மணிக்கு ஆற்காட்டில் இருக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்துகிறார்.

பயணத்திற்குத் தேவையான உணவை எனது இணையர்  தயார் செய்ய, 23 ஆண்டுகளாக என்னைச் சுமக்கும் எனது இணைபிரியா நண்பன் சுசுகி மேக்ஸ் 100 ஐத் தட்டிக் கொடுத்து காலை 7.20 மணிக்கு ஆற்காட்டை நோக்கி விரைகிறோம்.

எனது நண்பனுக்கு வயதாகி விட்டதால் இப்பொழுதெல்லாம் அவனை அதிக தூரம் விரட்டுவதில்லை. அதனால் அவனுக்குக் கால் வயிறு அளவுக்குத்தான் கஞ்சி ஊற்றுவேன். போகும் வழியில் ஒரு பெட்ரோல் பங்க்கில் நூறு ரூபாய்க்கு அவன் வயிற்றை நனைத்து, பத்து நிமிடத்தில் ஆற்காடு சென்றடைந்தோம்.

நாங்கள் பயணிக்க வேண்டிய வாகனம் ஏற்கனவே அங்கே எங்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தது. தாமதத்திற்கான குற்ற உணர்வு என்னை ஆட்கொள்ள, அருகில் இருந்த வண்டி நிறுத்தத்தில், பத்து ரூபாய் கொடுத்து எனது நண்பனை ஓரங்கட்டினேன். இதுவே பாலாற்றங்கரைக்கு வடக்கே உள்ள முத்துக்கடையிலும், வாலாசாப்பேட்டையிலும் ரூ.15/-, இது 24 மணி நேரத்திற்கு. அதுவே சென்னை போன்ற நகரங்களில் 12 மணி நேரத்திற்கு ரூ.20/-. ஏன் இத்தனை வேறுபாடு? பேராசை யாரைத்தான் விட்டது என்று எண்ணியவாறு தெற்கு நோக்கி தோழர்களுடன் பயணமானேன்.

பசியாற அங்காளத்தாள்

காலையிலேயே முழு வயிற்றை நிரப்பிக் கொண்டதால், சற்றும் களைப்பின்றி எங்களைச் சுமக்கும் வாகனம், ஆரணி மற்றும் சேத்துப்பட்டு நகரங்களைத் தாண்டி விரைந்து கொண்டிருக்கிறது. எங்களுக்குப் பசி எடுக்க, அருக்கம்பூண்டியில் எங்கள் ஆத்தா அங்காளத்தாள் எங்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறாள். பரந்து விரிந்த சிமெண்ட் தரை தளம், ஓய்வெடுக்க கொட்டகைகள், தாகம் தீர்க்க தண்ணீர்த் தொட்டி என தன்னை நாடி வருவோருக்கு தேவையான வசதிகளை செய்து கொண்டு படுகளத்தில் ஒரு ஓரமாக மல்லாக்கப் படுத்துக் கொண்டிருக்கிறாள் அங்காளத்தாள். பார்ப்பனியம் யாரைத்தான் விட்டு வைத்தது? எங்கள் ஆத்தாவையும்  ஈஸ்வரனுக்கு வைப்பாட்டியாக்கி, அவளை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரியாக்கிவிட்டனர்.

இட்லி, பொங்கல், எலுமிச்சை சோறு, புளி சோறு, சப்பாத்தி  மற்றும் மாட்டுக் கறி என தோழர்கள் கொண்டு வந்த  உணவை அனைவரும் பகிர்ந்து கொள்கின்றனர். கிரிவலப் பாதையில் அசைவ உணவா? என ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுமானால் அங்கலாய்க்கலாம். ஆனால் எங்கள் ஆத்தாவே அசைவப் பிரியர் என்பதால் இங்கு அங்கலாய்க்க ஏதுமில்லை. தோழர் சரவணன் குடும்பத்தாரின் முன்முயற்சியால் அவர்கள் கொண்டு வந்த கூடுதல் இட்லி அனைவரின் தேவையையும் இட்டு நிரப்பியது.

நாம் எதற்காகத் தஞ்சை நோக்கிப் பயணிக்கிறோம் என்பதை விளக்கி, தோழர்கள் அகிலன், இராவணன், சரவணன், சாமி ஆகியோர் உரையாற்ற, 'சாமக்கோழி கூவும் நேரத்திலே', 'வெள்ளி முளைக்கையிலே நெல்லறுக்கப் போயிருந்தோம்', 'ஆலைத் தொழிலாளி நாங்கடா', 'காடுவெட்டி நெல் குவித்து', போன்ற பிரபலமான மக்கள் கலை இலக்கியக் கழகப் பாடல்களைத் தோழர்கள் அகிலன், வாணி உள்ளிட்டோர் பாட, பயணம் தொடர்ந்தது.

மாநில நெடுஞ்சாலைகள் பச்சைக் கொடி காட்ட, தேசிய நெடுஞ்சாலைகளோ மோடி என்ற முகமூடியுடன் ஆங்காங்கே மறிக்கிறது. கேட்டதைக் கொடுத்தால்தான் பாதை கிடைக்கும்.

திருமாந்துறை முகமூடிக் கொள்ளையரைத் தவிர்ப்பதற்காக தேசிய நெடுஞ்சாலையை விட்டு விலகி, உள்ளூர் சாலையின் ஊடாக லப்பைக்குடிக்காடு வழியாக அரியலூரை நோக்கிப் பயணமானோம். 

மருதையன் கோவிலும் ஐய்யனாரும்

பிற்பகல் மணி ஒன்றரையைத்தாண்டி விட்டதால் பசியாறுவதற்காக மாத்தூர் மருதையன்கோவில் அருள்மிகு ஐய்யனார் திருக்கோவிலுக்குள் நுழைந்தோம்.

தங்களைப் பாதுகாத்த வீரனை மதிப்பதும் வழிபடுவதும் பழந்தமிழர் வழக்கம். அத்தகைய வீரனைத்தான் இன்றும் பல்வேறு கிராமங்களில் கோவில் எழுப்பி ஐய்யனாராக தமிழர்கள் வழிபட்டு வருகின்றனர். ஐய்யனார் ஒருவன் அல்ல, அவன் ஒவ்வொரு ஊரிலும் இருந்த ஊர்க்காவலன். ஐய்யனாருக்கு மட்டுமன்றி, அவனது சீடர்கள், அவன் பயன்படுத்திய‌ குதிரை உள்ளிட்ட அனைவருக்கும் சிலையமைத்து அழகு பார்க்கின்றனர் தமிழர்கள். இன்று இவர்களோடு கையில் துப்பாக்கியுடன் காவலர்களுக்கும், இராணுவ வீரர்களுக்கும் சிலை அமைத்து வருகின்றனர்.

ஆனால் இந்த ஐய்யனாரையும் பார்ப்பனர்கள் விட்டு வைக்கவில்லை. ஒவ்வொரு ஊருக்கும் வேறுவேறாக இருந்த ஐய்யனாரை, ஈஸ்வரனுக்கும், பெண்ணாக அவதாரம் எடுத்த விஷ்ணுவுக்கும் பிறந்த வாரிசாகக் கதை அளந்து ஐய்யனாரை அசிங்கப்படுத்தி விட்டனர். இங்கே, மருதையன் கோவில் ஐய்யனார் கையில் வீணையைக் கொடுத்து கேவலப்படுத்தி உள்ளனர். இதுவும் பார்ப்பனர்கள் சூழ்ச்சியாகத்தான் இருக்க முடியும்.

இது அப்பகுதியில் பிரபலமான கோவில் போல. ஒரு சிலர் பொங்கல் வைத்துக் கொண்டும், ஒரு சிலர்‌ விருந்துக்கான உணவு சமைத்துக் கொண்டும் இருந்தனர்.

கோவிலுக்குள் நுழைந்தால் தண்ணீருக்குப் பஞ்சமிருக்காது என்பதனால்தான் கோவிலைத் தேர்வு செய்து தஞ்சமடைந்தோம். இங்கேயும் அவரவர் கொண்டு வந்த உணவை அனைவரும் பங்கிட்டுப் பகிர்ந்து கொண்டோம். வயிறு முட்ட உண்ணவில்லை என்றாலும் மனம் மகிழ உண்டதனால் யாருக்கும் குறையொன்றுமில்லை.

தஞ்சை ரயிலடி

மீண்டும் பயணம் தொடர்ந்தது. அரியலூர், திருவையாறு வழியாக தஞ்சையை நெருங்கினோம். விவசாயிகள் விடுதலை முன்னணியின் (வி.வி.மு) பேரணி தஞ்சை கீழ்வாசலுக்குப் பதிலாக, ரயிலடிலிருந்து தொடங்குவதாக செய்தி கிடைக்க, நேராக மாலை நான்கு மணிக்கு முன்பாகவே ரயிலடியைச் சென்றடைந்தோம். நாங்கள் சென்ற பிறகே மற்ற ஊர்களில் இருந்து தோழர்கள் வரத் தொடங்கினர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு கம்பம் மோகன், செல்வராஜ், காரப்பட்டு ஏழுமலை, பெருவளப்பூர் மணி, திருச்சி போஜகுமார், ராஜா, ஜீவா, ஜான், நிர்மலா, குமார், செழியன், வழக்குரைஞர் ஆதி, தருமபுரி இராமலிங்கம், தஞ்சை அருள், இராவணன், காளியப்பன், ராஜன், கோவை சித்தார்த்தன், சிவகங்கை நாகராஜ், சங்கராபுரம் இராமலிங்கம், திருவண்ணாமலை ஆனந்த், பாடகர் கோவன், வழக்குரைஞர் ராஜூ உள்ளிட்ட பழையத் தோழர்களைப் பார்த்து அளவலாவிய போது மனம் ஏனோ குதூகலித்தது. நேரம் ஆக ஆக பல்வேறு மாவட்டங்களிலிருந்து தோழர்கள் குவியத் தொடங்கினர். ரயிலடி எங்கும் செங்கொடிகள் உயரத் தொடங்கின.


தொடரும்….

தமிழ்மணி

தொடர்புடைய பதிவுகள்

Sunday, 27 December 2020

தஞ்சை விவசாயிகள் மாநாடு: டிசம்பர் 29-அணிதிரள்வீர்!

திருச்சி

வேளாண் திருத்த சட்டத்துக்கு எதிராகவும், டெல்லியில் போராடுகின்ற விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சையில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பாக டிசம்பர் 29ஆம் தேதி நடைபெற இருக்கின்ற மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு திருச்சி ,லால்குடி, மணக்கால் பகுதியில் மக்கள் அதிகாரம் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக இளைஞர்களிடம் மற்றும் ஊர் பொதுமக்களிடம் விளக்கக் கூட்டம் நடத்தப்பட்டது.



தகவல்:

புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
திருச்சி.

வருகிற இருபத்தி ஒன்பதாம் தேதி தஞ்சையில் நடைபெறவுள்ள வேளாண் திருத்தச் சட்டத்தைக் கண்டித்து பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை ஒட்டி மக்கள் அதிகாரம் சார்பாக  திருச்சியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது. ம. க. இ. க கலைக்குழுவின் சார்பாக பாடல்கள் பாடப்பட்டது.



வருகிற இருபத்தி ஒன்பதாம் தேதி. வேளாண் திருத்தச் சட்டத்தைக் கண்டித்து  தஞ்சையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தை ஒட்டி திருச்சி  நத்தர்ஷா பள்ளிவாசலில் மக்கள் அதிகாரம் சார்பாக  நோட்டீஸ் பிரச்சாரம் செய்யப்பட்டது.


தகவல்

மக்கள் அதிகாரம் 
திருச்சி

கோத்தகிரி

இன்று 27 /12/ 2020 வேளான் விரோத இந்திய மக்களின் உணவுப் பாதுகாப்பை அளிக்கும் பாசிச மோடியின் சட்டங்களை எதிர்த்து பிரச்சாரம் செய்யப்பட்டது. கோத்தகிரியில் மலை காய்கறிகள் உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம் வரும் 29ஆம் தேதி தஞ்சையில் அனைத்து இந்திய விவசாய ஒருங்கிணைப்புக் குழு(AIKSCC) சார்பாக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறும், ஆதரவு கொடுக்குமாறும் பிரச்சாரம் செய்யப்பட்டது. தஞ்சையை "டெல்லி சிங்கு எல்லையாக" மாற்றுவோம் வாரீர்.




தகவல்
மக்கள் அதிகாரம் 
கோத்தகிரி

தஞ்சை

தஞ்சையில் விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு 29.12.2020 அன்று
பேரணி - பொதுக்கூட்டம் மக்கள்அதிகாரம் பிரச்சாரம்.
============================
மோடி அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று டெல்லியில் கடும் பனியில் இரவு பகல் பாராமல் உயிர் தியாகத்திற்கு அஞ்சாமல்  தொடர்ந்து போராடும் விவசாயிகளின் எழுச்சிமிக்க போராட்டத்தை ஆதரித்தும்,  விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு  தஞ்சையில் 29-12-2020 மாலை நடைபெற இருக்கும் மாநிலம் தழுவிய பேரணி பொதுக்கூட்டதை பிரச்சாரம் செய்தும், மக்கள் அதிகாரம் தஞ்சை ஒருங்கினைப்பபாளர் தோழர் தேவா தலைமையில் விவசாயிகள் சந்திப்பு இயக்கம் ரெட்டிப்பாளையம், வண்ணாரப்பேட்டை, ஆலக்குடி, கள்ளப்பெரம்பூர், பிள்ளையார்நத்தம், தென்னங்குடி .சீராளூர் ஆகிய கிராமங்களில் நடைபெற்றது.  பிரச்சார இயக்கம் தொடர்கிறது. 



தகவல் 
மக்கள் அதிகாரம் 
தஞ்சை

விழுப்புரம்

முதல் நாள்

மோடி அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று டெல்லியில் கடும் பனியில் இரவு பகல் பாராமல் உயிர் தியாகத்திற்கு அஞ்சாமல் இன்றோடு 28 நாட்கள் தொடர்ந்து போராடும் விவசாயிகளின் பேர் எழுச்சிமிக்க போராட்டத்தை ஆதரித்தும், இந்த வேளாண் சட்டங்களால் ஒட்டுமொத்தமாக அனைத்து மக்களும் வருங்காலத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாலும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பில் தமிழகத்தில் தமிழக விவசாயிகள் சங்கங்கள், மக்கள் அதிகாரம் மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து நவம்பர் 26 ஆம் தேதியில் இருந்து பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம் அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டத்திலும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறோம் குறிப்பாக 2 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்.

 5 ஆம் தேதி மோடி, அமித்ஷா, அம்பானி, அதானி உருவபொம்மை எரிப்புப் போராட்டம்.

 8 தேதி மறியல். 

14, 15 ,16  தேதிகளில் காத்திருப்பு போராட்டம் என தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த காத்திருப்பு போராட்டத்தை மோடியின் அடிமை எடப்பாடி அரசு  போராட்டத்தை ஒடுக்க முயன்றும் தடுத்தும் அனுமதி மறுத்த நிலையிலும் விழுப்புரத்தில் தடையை மீறி  போராட்டம்  நடத்தப்பட்டது. 
இந்தப் போராட்டத்தின் அடுத்த கட்டமாக 23, 24 ,25 தேதிகளில் தொடர் பிரச்சார இயக்கத்தை விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய வட்டாரங்களிலும் தாலுகாவிலும், நடத்துவது என்ற அடிப்படையில்  முதல் நாளான 23 ஆம் தேதி   தொடர் பிரச்சார இயக்கத்தை கோலியனூர், வளவனூர், கண்டமங்கலம், திருச்சிற்றம்பலம், கூட்ரோடு கிளியனூர், மரக்காணம் ஆகிய இடங்களில் நடத்தி முடித்திருக்கிறோம். திட்டமிட்ட இடங்களில் அடுத்தடுத்த நாள் நடக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.






தகவல்
மக்கள் அதிகாரம், 
விழுப்புரம் மண்டலம்.
94865 97801

2-வது நாள்

இரண்டாவது நாளான 24 ஆம் தேதி  தொடர் பிரச்சார இயக்கத்தை விக்கிரவாண்டி,
கூட்டேரிப்பட்டு,
திண்டிவனம்,
செஞ்சி,
வளத்தி 
ஆகிய இடங்களில் நடத்தப்பட்டது.




தகவல்
மக்கள் அதிகாரம், விழுப்புரம் மண்டலம்.
94865 97801

மூன்றாவது நாள்

மூன்றாவது நாளான 25 ஆம் தேதி   தொடர் பிரச்சார இயக்கத்தை கண்டாச்சிபுரம்,
கெடார்,
காணை,
திருவெண்ணெய்நல்லூர்,
அரசூர்
ஆகிய இடங்களில் நடத்தப்பட்டது.



தகவல்
மக்கள் அதிகாரம்
விழுப்புரம் மண்டலம்.
94865 97801



விவசாயிகள் விரோத ஆட்சிக்கு எதிராக அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒங்கிணைப்புக்குழு நடத்தும் 

#பேரணி_பொதுக்கூட்டம் 
டிசம்பர் 29, திலகர் திடல் தஞ்சை.
அழைக்கிறது மக்கள் அதிகாரம்

தஞ்சை அழைக்கிறது அணிதிரண்டு வாரீர்.

தோழர் சி.ராஜூ,  
மாநில ஒருங்கிணைப்பாளர், 
மக்கள் அதிகாரம் தமிழ்நாடு - புதுவை  

https://youtu.be/bTTTeqP3QYo