Sunday, 8 November 2020

காடாம்புலியூர் செல்வ முருகன் கொண்டடிக் கொலை! மக்கள் அதிகாரம் கண்டனம்!

மக்கள் அதிகாரம்

தமிழ்நாடு – புதுவை

நாள் 8-11-2020

பத்திரிக்கைச் செய்தி

சாதாரண மக்கள் சந்தேக வழக்கில் விசாரணைக்கு சென்றாலே போலீசு லாக் அப் படுகொலை செய்கிறது!

கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், கார்ப்பரேட் முதலாளிகள் செய்யும் அநியாய அக்கிரமங்களுக்கு எந்த தண்டனையும் இல்லை?. 

கடலூர் மாவட்டம், காடாம்புலியூரை சேர்ந்த 39 வயதான செல்வ முருகன் என்ற முந்திரி வியாபாரியை சந்தேக வழக்கில் அக்-28 தேதி விசாரணைக்கு அழைத்து சென்று நெய்வேலி நகர காவல் நிலையத்திலும், பிறகு தனியார் விடுதியிலும் வைத்து அடித்து சித்ரவதை செய்ததால் 4-ம் தேதி மரணமடைந்தார். 

இது அப்பட்டமான போலீசு லாக் அப் படுகொலை. சம்பந்தபட்ட போலீசார் கொலை வழக்கில் கைது செய்யப்பட வேண்டும்.

முதற்கட்டமாக இறந்தவரின் குடும்பத்திற்கு 25 லட்சம் இழப்பீடும், அவர் மனைவிக்கு அரசு வேலையும் தருவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இனி தமிழகத்தில் லாக் அப் படு கொலை நடந்தால் சாத்தான்குளம் வழக்குதான் முன்மாதிரி. சம்பந்தபட்ட போலீசார் கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட வேண்டும். பாதிக்க பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு, அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, வழக்கு முடியும் வரை நீதிமன்ற கண்காணிப்பு இது அனைத்து லாக் அப் கொலை வழக்கிலும் நடப்பதற்கு அனைவரும் போராட வேண்டும்.

விருத்தாசலம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டவர் 2 – ம் தேதியே உடல் நிலை மோசமடைந்தவரை மேல் சிகிச்சைக்காக உள் நோயாளியாக அனுமதிப்படாமல் விருத்தாசலம் அரசு மருத்துவ மனையிலிருந்து உடனே மீண்டும் சிறையில் ஏன் அடைக்கப்பட்டார்? தனியார் விடுதியில் வைத்து கணவரை பார்த்த மனைவியிடம் போலீசார் செல்வ முருகனை கைத்தாங்கலாகத்தான் நிற்க வைத்துள்ளனர். கணவரை விடுவிக்க பணமும் நகையும் கொடு என போலீசார் பேரம் பேசி உள்ளனர். செத்து போகும் அளவிற்கு போலீசார் அடித்து சித்ரவதை செய்த நிலையில் ரிமாண்ட் செய்த நீதித்துறை நடுவர் மற்றும் சான்றிதழ் கொடுத்த அரசு மருத்துவர்களின் பொறுப்பு பற்றி விசாரிக்கப்பட வேண்டும். 

காவல் துறை காட்டுமிராண்டித்தனமாக அடித்து சித்ரவதை செய்து கொலை செய்து விட்டனர் என அவரது மனைவி மற்றும் உறவினர்கள் போலீசார் மீது குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக காவல் ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் இருகாவலர்கள் மீது தான் குற்றம் சொல்கிறார்கள். செல்வ முருகன் உடலை ஆய்வு செய்து நீதித்துறை நடுவர் உடலில் பல இடங்களில் லத்தியால் அடித்த காயம் ரத்த கட்டாக உள்ளது என்பதை அவரது மனைவியிடம் உறுதிபடுத்தி உள்ளார்.

தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்திரவிட்டுள்ளது. ஆனால் சாத்தான் குளம் லாக்அப் கொலை வழக்கை பேன்று நீதிமன்றம் நேரடியாக கண்காணித்தால் மட்டுமே உரிய நீதி கிடைக்கும். குற்றவாளி போலீசார் தண்டிக்கப்படுவார்கள். 

தோழமையுடன்

வழக்கறிஞர்.சி.ராஜு

மாநில ஒருங்கிணைப்பாளர்

மக்கள் அதிகாரம்.

தொடர்புக்கு - 95971 38959

No comments:

Post a Comment