Monday, 9 November 2020

புதுச்சேரி: 103 ஆம் ம் ஆண்டு நவம்பர் புரட்சி விழா நிகழ்ச்சிகள்!

நவம்பர் 7 ரசிய புரட்சி 103 ஆம் ஆண்டிற்கான விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் #புதுச்சேரி மாவட்ட பகுதி சார்பாக அரங்கக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி புதுச்சேரி மாவட்ட பகுதியில் உள்ள இணைப்பு மற்றும் கிளை சங்க தோழர்கள் பெரும்பான்மையாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

இக்கூட்டத்தை புதுச்சேரி மாவட்ட தலைவர் தோழர் MKK. சரவணன் தலைமை தாங்கி நடத்தினார். இக்கூட்டத்தில் அகில இந்திய தொழிற்சங்க  மைய கவுன்சில் (AICCTU) சார்பாக அகில இந்தியத் துணைத் தலைவர் சோ. பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாநில தலைமைக் குழு உறுப்பினர் தோழர் பழனிச்சாமி கலந்துகொண்டு ரசியாவில் எப்படி புரட்சி மூலம் உழைக்கும் வர்க்கத்திற்கான ஆட்சி கட்டி அமைக்கப்பட்டது. அதேபோல் ஏறி தாக்கி வரும் #கார்ப்பரேட்_காவி_பாசிசத்தை மோதி வீழ்த்த வேண்டும் என்றும் பாசிசம் என்றால் என்ன? உலக வரலாற்றில் எவ்வாறு பாசிசம் வளர்ந்து வருகிறது என உதாரணத்துடன் விளக்கினார். தற்போது நாம் எந்த சூழலில் இருக்கின்றோம் என்பதையும் விளக்கி பேசினார். 

மேலும்,‌இக்கூட்டத்தில் இணைப்பு சங்க தோழர்களும் கலந்துக்கொண்டு தங்களின் கருத்தை பதிவு செய்தனர்.  நவம்பர் புரட்சி தினத்தை பற்றி நடத்தப்பட்ட கட்டுரை மற்றும் கவிதை போட்டிகள்; ஓட்டபந்தயம் மற்றும் ஓவியப் போட்டிகள் வைக்கப்பட்டது.  போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இறுதியாக பார்ப்பனியத்தை எப்படியெல்லாம் வீழ்த்த முடியுமோ அந்த அளவுக்கு நமது உணவிலிருந்து இதனை ஆரம்பிக்க வேண்டும் என்ற அடிப்படையில் நாம் என்ன சாப்பிட வேண்டும் தீர்மானிக்கும் பார்ப்பனியத்தை அம்பலப்படுத்தும் வகையிலும் #மாட்டுக்கறி_விருந்து வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் பெருந்திரளான தொழிலாளர்கள் மட்டுமின்றி உழைக்கும் மக்கள், மாணவர்கள் மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர்கள் கலந்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.  இவ்வாறாக ரசிய புரட்சி நாள் விழா சிறப்பாக நிறைவுற்றது !













#புதுச்சேரி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக #வேல்_பிஸ்கட் தொழிற்சாலையில் 103 வது ரசிய புரட்சி நாளையொட்டி ஆலையில் கூட்டம் போடப்பட்டது.

மேலும் மாவட்டத்திற்கு உட்பட்ட மற்ற இணைப்பு மற்றும் கிளை சங்கங்களில் ஆலவாயிற் கூட்டங்கள் போடப்பட்டது. மேலும் சில பகுதிகளில் ஓட்டப்பந்தயம் கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டது.

திருபுவனை தொழில்பேட்டை நுழைவாயிலில் ரசிய புரட்சி நாளையொட்டி சுமார் 500 பிரசுரங்கள் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது  .








No comments:

Post a Comment