திருச்சி மண்டலம் - மக்கள் அதிகாரம்
வேளாண்மை திருத்தச் சட்டத்தைக்கண்டித்து தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் சார்பாக நடைபெறவுள்ள மறியல் போராட்டத்தையொட்டி திருச்சியில் மக்கள் அதிகாரம் சார்பாக பிரசுரம் வினியோகித்து பிரச்சாரம் செய்யப்பட்டது.
24.12.2020 அன்று விவசாயிகளையும், தொழிலாளர்களையும் நிரந்தர கொத்தடிமைகளாக மாற்றும் புதிய வேளாண் மற்றும் தொழிலாளர் விரோத சட்டத்திற்கு எதிராக களமிறங்குவோம் ! 26.12. 2020 ல் நடைபெற இருக்கும் நாடு தழுவிய மறியில் போரட்டத்திற்கு மக்கள் அதிகாரம் தோழர்கள் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் திருச்சி காஜாப்பேட்டை ,கீழ கிருஷ்ணன் கோவில் தெரு, கெமிஸ்டவுன் பகுதிகளில் நோட்டிஸ் அளித்தனர்
தகவல் : புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி , திருச்சி.
தருமபுரி மண்டலம் - மக்கள் அதிகாரம்
கிருஷ்ணகிரி மாவட்டம், நாட்ராம்பாளையத்தில், விவசாயிகளையும், தொழிலாளர்களையும் நிரந்தர கொத்தடிமைகளாக மாற்றும் புதிய வேளாண் மற்றும் தொழிலாளர் விரோத சட்டத்திற்கு எதிராக நவம்பர் 26 நாடு தழுவிய மறியல் போராட்டத்திற்கு ஆதரவாக மக்கள் அதிகாரம் தோழர் மாயாண்டி மற்றும் தோழர்கள் பிரச்சாரம் மேற்கொண்டபோது.
தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகளையும், தொழிலாளர்களையும் நிரந்தர கொத்தடிமைகளாக மாற்றும் புதிய வேளாண் மற்றும் தொழிலாளர் விரோத சட்டத்திற்கு எதிராக நவம்பர் 26 நாடு தழுவிய மறியல் போராட்டத்திற்கு ஆதரவாக மக்கள் அதிகாரம் தோழர் மாயாண்டி மற்றும் தோழர்கள் பிரச்சாரம் மேற்கொண்டபோது.
தஞ்சை மண்டலம் - மக்கள் அதிகாரம்
தஞ்சை மக்கள் அதிகாரம் சார்பில் நவம்பர் 26 நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்பட்டது. இதன் ஒரு பகுதியாக விவசாயிகளை சந்தித்து ஆதரவு திரட்டும் பணியில் மக்கள் அதிகாரம் தோழர்கள் தேவா , அருள் மற்றும் தோழர்கள் ஈடுபட்டனர். ரெட்டிப்பாளையம், வண்ணாரப்பேட்டை, ஆலங்குடி, குருவாடிப்பட்டி, சீராளூர், சக்கரசாமந்தம், வடகால் ஆகிய கிராமங்களில் 22-11-2020 முதல் 24-11-2020 வரை முன்று நாட்கள் பிரசுர விநியோகம் செய்து ஆதரவு திரட்டப்பட்டது.
மதுரை மண்டலம் - மக்கள் அதிகாரம்
மதுரை மண்டலம் - உசிலை - திருமங்கலம்
உழவே தலை,
அதை நசுக்கும் வேளாண் திருத்தச் சட்டத்தையும் தொழிலாளர் விரோத சட்டங்களையும்எதிர்த்து மக்கள் அதிகாரம்
சார்பாக உசிலை பகுதிக்கு உட்பட்ட திருமங்கலத்தில் தோழர்கள் பிரச்சாரத்தை கடைவீதிகளில் மேற்கொண்டனா்.
தகவல்
மக்கள் அதிகாரம்
மதுரை மண்டலம்
9443175256
கடலூர் மண்டலம் - மக்கள் அதிகாரம்
#கடலூர்_மக்கள்_அதிகாரம்_பிரச்சாரம்
நவம்பர் 26 நாடு தழுவிய மறியல் போராட்டத்தை விவசாய தொழிலாளர் போராட்டத்தை ஆதரித்து அழைப்பு விடுக்கும் வகையில் மக்கள் அதிகாரம் தோழர்கள் பகுதி பிரச்சாரம்.
உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தார் என்பார்கள் .
இந்த உலகிற்கே வாழ்வளிக்கும் உணவளிக்கும்
விவசாயிகளையும் தொழிலாளர்களையும் நிரந்தர கொத்தடிமைகளாக மாற்ற துடிக்கும் மோடி அரசை கண்டித்தும், புதிய வேளாண் மற்றும் தொழிலாளர் சட்டத்தை திரும்ப பெற மக்கள் விரோத பாசிச பாஜக கொடுங்கோன்மை ஆட்சியை வீழ்த்த மக்கள் நாம் அனைவரும் வீதியில் இறங்குவோம் என்ற அறைகூவலை முன்வைத்து, கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம்
முகந்தரியாகுப்பம் கிராமத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வமாக கலந்துகொண்டு வீடு வீடாக பிரசுரம் விநியோகித்தனர்.
தகவல்:
தோழர்.பாலு (மண்டல ஒருங்கிணைப்பாளர்)
மக்கள் அதிகாரம் .
கடலூர்.
தொடர்புக்கு:
81108 15963
நெய்வேலி
நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம்!
மக்கள் அதிகாரம் NLC-யில் பிரசுர விநியோகம்!
மத்தியில் அமைந்துள்ள பாசிச மோடி அரசு கார்ப்பரேட் நலனுக்காக பல்வேறு அவசர சட்டங்களை தொடர்ச்சியாக கொண்டு வருகிறது. இதில் புதிய கல்விக் கொள்கை,மின்சார திருத்தச் சட்டம்,புதிய கிரிமினல் சட்டம் என அவசரச் சட்டங்கள் மூலம் நாட்டை பாசிச மயமாக்க வேண்டும் என்பதை துரிதப்படுத்துகிறது மோடி அரசு
இதில் குறிப்பாக வேளாண் திருத்த சட்டம் தொழிலாளர் நலச்சட்டம் ஆகியவைகளை எதிர்த்து நாடு தழுவிய அளவில் வருகின்ற நவம்பர் 26,27 ஆகிய தேதிகளில் விவசாய சங்கங்கள் தொழிலாளர் சங்கங்கள் சார்பாக நாடு தழுவிய அளவில் சாலை மறியல் போராட்டம் நடைபெற இருக்கிறது. இதையொட்டி போராட்டத்திற்கு அறைகூவல் விடுக்கும் விதமாக நெய்வேலி இரண்டாம் சுரங்கம் தொழிலாளர்கள் மத்தியில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. இதில் தொழிலாளர்கள் ஆர்வமுடன் பிரசுரங்களை வாங்கிச் சென்றனர்.
தகவல்:
தோழர்.பாலு
(மண்டல ஒருங்கிணைப்பாளர்) மக்கள் அதிகாரம்.
கடலூர்.
தொடர்புக்கு:
81108 15963
கடலூர்
கடலூரில்_மக்கள்_அதிகாரம்_பிரச்சாரம்.
நவம்பர் 26 அகில இந்திய தொழிற்சங்க வேலைநிறுத்தம் மற்றும் 27 பாராளுமன்ற முற்றுகை போராட்டத்தையொட்டி, இன்று கடலூர் மஞ்சக்குப்பம் மக்கள் அதிகாரம் சார்பில் நகரத்தை அருகிலுள்ள குண்டு உப்பலவாடி ஊராட்சிக்கு உட்பட்ட கண்ட காடு கிராமத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் கிராம பொது மக்களிடம் துண்டறிக்கைகள் கொடுத்து போராட்டத்திற்கு அரை கூவல் கொடுத்து வருகின்றனர்.
தகவல்.
இரா. நந்தா.
வட்டார ஒருங்கிணைப்பாளர் மக்கள் அதிகாரம், கடலூர்.
சேத்தியாத்தோப்பு
#நவ26நாடுதழுவியசாலைமறியல் போராட்டம்!
#சேத்தியாதோப்பில்மக்கள்அதிகாரம் பிரசுரம் வினியோகம்!
பாசிச மோடி அரசு பதவி ஏற்றதில் இருந்து விவசாயிகள், தொழிலாளர்கள் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் எதிரான பல்வேறு அவசர சட்டங்களை நடைமுறைப் படுத்துகிறது.
கொரோனாவில் மக்களை காப்பாற்றாமல் சட்டபூர்வமான பாசிச மையத்தை நிறுவி வருகிறது மோடி அரசு குறிப்பாக தொழிலாளர்கள், விவசாயிகள் எதிராக இருக்கக்கூடிய விவசாய திருத்தச்சட்டம், தொழிலாளர் நலச்சட்டம் ஆகியவைகளை எதிர்த்து நாடு தழுவிய அளவில் சாலை மறியல் போராட்டமும்,டெல்லி பாராளுமன்ற முற்றுகை போராட்டமும் அறிவித்திருக்கின்றனர் இதற்கு ஆதரவு தெரிவித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் மாநிலம் முழுக்க தொழிலாளர்கள், விவசாயிகள், உழைக்கும் மக்களை சந்தித்து வருகின்றனர்.
இதில் தோழர் பாலு மகேந்திரன் அவர்களின் தலைமையில் சேத்தியாதோப்பு எம்.ஆர்.கே கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இன்று காலை (23/11/2020) போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் விதமாக பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
தகவல்:
தோழர்.பாலு
(மண்டல ஒருங்கிணைப்பாளர்),
மக்கள் அதிகாரம்
கடலூர்.
தொடர்புக்கு:
81108 15963
No comments:
Post a Comment