Wednesday, 16 December 2020

கரூரில் காத்திருப்புப் போராட்டம்!

 விவசாயிகள் விரோத 3 வேளாண் மற்றும் தொழிலாளர் விரோத சட்டத்தை திரும்பப் பெற வேண்டி காத்திருப்பு போராட்டம் 14/12/2020 அன்று கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.  இப்போராட்டம் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து ஜனநாயக சக்திகள் மற்றும் முற்போக்கு அமைப்புகள் பெண்கள் மாணவர்கள் இளைஞர்கள் என பெருந்திரளாக கலந்து கொண்டனர். இப்போராட்டத்தில் கரூர் மாவட்ட மக்கள் அதிகாரம் தோழர்கள் பங்கெடுத்து கொண்டனர். மேலும் இப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாக அனைத்து மாணவர்கள் விவசாயிகள் இளைஞர்கள் பொதுமக்கள் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பட்ட மக்களும் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்று  போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டுமென்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக அறைகூவி அழைக்கப்பட்டது.






தகவல் : 
மக்கள்அதிகாரம் 
கரூர்

மதுரையில் காத்திருப்புப் போராட்டம்!

மதுரையில்..14.12.2020
3 வேளான் திருத்த சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம்!

அ.இ.வி.போ.ஒருங்கிணைப்புக்குழுவின்,ஒருங்கிணைப்பில், ஜனநாயக கட்சிகள் இயக்கங்கள் பங்கேற்புடன் 

மக்கள் அதிகாரம் தோழர்கள், பு.மா.இ.மு.தோழர்கள், PRPC தோழர்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டனா்







தகவல்
மக்கள் அதிகாரம்
மதுரை மண்டலம்

விழுப்புரத்தில் காத்திருப்புப் போராட்டம்!

வேளாண் திருத்தச்சட்டத்தை திரும்ப பெறு!

விழுப்புரத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம்! 

மோடி அரசால் அவசரமாக கொண்டுவரப்பட்ட வேளாண் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும்என்பதை முன்வைத்து பஞ்சாப் ,அரியானா,உத்தரப்பிரதேசம்,ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலிருந்து விவசாயிகள் டெல்லியில் கடந்த 26ம் தேதி முதல் இன்று வரை தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இப்போராட்டத்தை தடுத்து நிறுத்த  பல்வேறு அடக்குமுறை நடவடிக்கைகளை மோடி அரசு மேற்கொண்டது. 

டெல்லியின் எல்லைப் பகுதிகளில் ரோட்டை பெயர்த்து பள்ளங்கள் தோண்டி வழிமறித்தது,குளிர்ந்த தண்ணீர் பீச்சி அடித் தது,தடியடி நடத்தி காலாவதியான கண்ணீர் புகை குண்டு வீச்சு எதற்கும் சளைக்காமல் டில்லி நகரத்தை நோக்கி விவசாயிகள் 18வது நாள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.

தற்பொழுது பெண்கள் தன்னெழுச்சியாக இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பெண்கள் தனியாக டெல்லியை நோக்கி படையெடுத்தனர் விவசாயிகளின்  பேரெழுச்சி மோடி அரசை நிலைகுலைய செய்துள்ளது.

மோடி அரசு எவ்வளவு முயன்றும் விவசாயி போராட்டத்தை தடுக்க முடியவில்லை அவர்கள் அனைத்து அரண்களையும் தகர்த்தெறிந்து முன்னேறிச் செல்கிறார்கள் பாசிச மோடி அரசு அஞ்சுகிறது.

அவர்களின் விவசாயிகளின் எழுச்சி மிக்க இப்போராட்டம் தான் பாசிச மோடி அரசை அதிகாரத்திலிருந்து வீழ்த்துவதற்கான காரணம் அந்த வகையில் இந்த போராட்டத்தை ஆதரித்து பல்வேறு மாநிலங்களில் விவசாய சட்டத்தை திரும்பப்பெற வேண்டுமென போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 

இதனடிப்படையில் தமிழகம் தழுவிய அளவில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது இதன் ஒரு பகுதியாக விழுப்புரத்தில்

மக்கள் அதிகாரம், தமிழ்நாடு விவசாய சங்கங்கள் அகில இந்திய விவசாயிகள் மகாசபை மற்றும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பில் இன்று  (14/12/2020) விழுப்புரம் மாவட்ட தொடர் காத்திருப்பு போராட்டம்  நடத்தப்பட்டது. 

இதில் டெல்லியில் விவசாய போராட்டத்தில் பங்கேற்க சென்ற விவசாய சங்க தலைவர்களை கைது செய்யப்பட்டவர்களை  உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். 

விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும். 

விவசாய திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து  நடத்தப்பட்டது. அனைவரையும் கைது செய்து மண்டபத்தில் அடைத்துள்ளனர்.





தகவல் : 
மக்கள் அதிகாரம், 
விழுப்புரம் மண்டலம்.

Monday, 14 December 2020

திருவண்ணாமலையில் காத்திருப்புப் போராட்டம்!

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் நடத்தியக் காத்திருப்புப் போராட்டம். 




மக்கள் அதிகாரம்
திருவண்ணாமலை

திருச்சியில் காத்திருப்புப் போராட்டம்!

 திருச்சியில் வேளாண் திருத்தசட்டத்தை எதிர்த்து மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து போராட்டம் நடத்தப்பட்டது.






தஞ்சையில் காத்திருப்புப் போராட்டம்!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி  தஞ்சையில் தொடர் காத்திருப்பு போராட்டம்

==============================

தஞ்சை பனகல் கட்டிடம் அருகில் நூற்றுக்கணக்கான விவசாயிகள்அனைத்துக் கடசிகள்  இயக்கங்கள் சார்பில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும்இன்று

(14-12-2020) தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். 

டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த 11 விவசாயிகளுக்கு   அஞ்சலி செலுத்தி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.    வேளாண் திட்டத்திற்கு எதிராகவும், தமிழக அரசு இந்த சட்டத்திற்கு ஆதரவு வழங்கக் கூடாது என வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

போராட்ட பகுதியில், ஏராளமான அதிரடி படையினர் கவச உடையில் குவிக்கப்பட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

இதனிடையே, போராட்டத்திற்கு வரும் விவசாயிகளை தடுக்கும் விதமாக தஞ்சை நகருக்கு வரும் அனைத்து சாலைகளிலும் தடுப்புகள் ஏற்படுத்தி, போலீசு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு போராட்டத்திற்கு  வருகின்ற விவசாயிகளை கைது செய்துவருகிறது. காவல்துறையின் தடையை மீறி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுவருகின்றனர்.

தஞ்சை பனகல் கட்டிடம் அருகில் காத்திருப்பு போராட்டத்திற்கு அனுமதி அளித்த காவல்த்துறை பலவேறு தடைகளை உருவாக்கியது. நாற்காலி எடுத்துவர தடைவிதித்தது. சாமியானா பந்தல் போட தடைவிதித்தது. தடைகளை கடந்து போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

14-12-2020








கடலூரில் காத்திருப்புப் போராட்டம்!

வேளாண் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறு! 

கடலூரில் தடையை மீறி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு (AIKSCC) அனைத்து விவசாய சங்கத்தினர் கைது!

வேளாண் திருத்தச் சட்டம், இலவச மின்சார சட்டத்தைத் திரும்ப பெறு என்று "டெல்லி சலோ" முழக்கத்தை முன்வைத்து கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கடந்த 20 நாட்களாக பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சார்ந்த விவசாயிகள் போராடி வருகின்றனர். 

இந்தப் போராட்டம் "பாரத் பந்த், சாலை மறியல், மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை" என ஒவ்வொரு கட்டமாகக் கடந்து, இன்று விவசாச் சங்கத் தலைவர்கள் உண்ணாவிரதப் போராட்டம், மற்ற மாநிலங்களில் காத்திருப்புப் போராட்டம் என தற்போது நடத்தி வருகின்றனர். 

மத்தியில் அமைந்துள்ள பாசிச மோடி அரசு விவசாயிகளின் போராட்டத்தைத் துளியும் மதிக்காமல் வேளாண் சட்டங்களால் அவர்களுக்கு நன்மையே ஏற்படும் என மத்திய அரசின் செய்தி விளம்பரத்துறை செய்தித்தாள்கள் மூலம் பரப்பி வருகிறது.

மேலும் டெல்லியில் போராடுகின்ற விவசாயிகளுக்கு எதிராக பிஜேபியின் விவசாயச் சங்கங்கள் வேளாண் சட்டத்தை ஆதரித்து பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும் என பாசிச மோடி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

டெல்லியில் நடக்கும்  விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து பல்வேறு தரப்பினரும்  விவசாயிகளுக்குத் தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகளை செய்து வருகின்றனர்.

விவசாயிகளின் நாடு தழுவிய  போராட்டத்தை ஆதரித்து இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து 700க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் பெண்கள், குழந்தைகள், விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து டெல்லிக்குச் சென்றுள்ளனர். இதனால் அச்சமடைந்துள்ள பாசிச மோடி அரசு  டெல்லியின் எல்லைகளில்  துணை இராணுவத்தைக் குவித்து வருகிறது. 

விவசாயிகளின் போராட்டம் உலகம் தழுவிய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது, பாசிச மோடி அரசுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

தமிழகம் முழுக்க இன்று ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் அனைத்துக்கட்சி விவசாய சங்கத்தினர், ஜனநாயக, முற்போக்கு அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று (14/12/2020) கடலூர், கார் ஸ்டாண்ட், மஞ்சகுப்பம் அருகில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு (AIKSCC), சார்பாக சிபிஎம், சிபிஐ, மக்கள் அதிகாரம், காங்கிரஸ், மதிமுக, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் தடையை மீறி போராடி கைது செய்யப்பட்டு கடலூர்  சுப்புராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில்  வைக்கப்பட்டுள்ளனர். 






தகவல்:

அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு,(AIKSCC).

தோழர். பாலு
மண்டல ஒருங்கிணைப்பாளர், 
மக்கள் அதிகாரம், 
கடலூர்.
தொடர்புக்கு:81108 15963