"தேர்தல் அரசியலில் ஈடுபடும் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு தெளிவான இலக்கு உண்டு. பொதுவுடைமை கட்சிகளின் இறுதி இலக்கு 'பொதுவுடைமைச் சமூகம்'. பாஜகவைப் பொறுத்தவரை, சனாதன தர்மத்தைப் பாதுகாப்பதும், மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதுமே நோக்கம்.
![]() |
| 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் |
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்திற்கு எதிரான சனாதனத்தை எதிர்த்துப் போராடுவதே திமுக-வின் (தற்போதைக்கு விசிக உள்ளிட்ட கட்சிகளின்) முக்கிய இலக்காக உள்ளது. இவை தவிர மற்ற கட்சிகளுக்கு உருப்படியான கொள்கை இலக்குகள் இருப்பதாகத் தெரியவில்லை.
கம்யூனிஸ்டுகளைத் தவிர ஏனைய கட்சிகளில் ஊழல் மலிந்திருப்பது ஒரு கசப்பான உண்மை. ஆனால், சொத்துரிமை சார்ந்த தற்போதைய சமூக அமைப்பு மாறாமல் ஊழலை ஒழிப்பது என்பது சாத்தியமற்றது. பொதுவுடைமை மலரும் வரை ஊழல் ஒழிப்பு என்பது வெறும் வெற்றுப் பேச்சாகவே இருக்கும்.
சனாதன சக்திகளுக்கு எதிராகப் போராடுவதும், வரும் தேர்தலில் பாஜக, அதிமுக மற்றும் அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளாகத் தோன்றும் தவெக, நாம் தமிழர் போன்ற கட்சிகளைத் தோற்கடிப்பதும் அவசியம். எனவே, திமுக தலைமையிலான முற்போக்குக் கூட்டணியை வெற்றி பெறச் செய்வதே நம் தற்போதைய இலக்காக இருக்க வேண்டும்."
அதற்காக, ஆளும் கட்சியின் தவறுகளுக்கு எதிராகப் போராடக்கூடாது என்று பொருள் அல்ல.
தமிழ்மணி
.jpeg)
No comments:
Post a Comment