பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் தொழிற்சங்கத்தில் ஈடுபட்ட போது, உணவக நிர்வாகக் குழு உறுப்பினராக தொழிலாளர்களால் தேர்வு செய்யப்பட்டு நேர்மையோடும் போர்க்கணத்தோடும் செயல்பட்ட காலகட்டத்தில்தான் ஊழல் முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது; ஏற்கனவே ஊழல் செய்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு களை எடுக்கப்பட்டார்கள்.
இத்தகைய செயல்பாடுகளின்போது நெருக்கடிகளும் பாதிப்புகளும் வரவே செய்யும். அதைத் தாங்கிக் கொள்ளக் கூடியவர்கள்தான் இதற்கு முன்வருவார்கள். அதுதான் நக்சல்பாரி அரசியலின் பலம்.
மேற்கண்ட அனுபவம் எனக்கு உணர்த்தும் பாடம்...
உள்ளாட்சி அமைப்புகளை
நக்சல்பாரிகள் கைப்பற்றி, நேர்மையோடும் போர்க்குணத்தோடும் செயல்பட முன்வராதவரை, உள்ளூர் அளவில் பிழைப்புவாதிகளும் இரவுடிகளும் தலையெடுப்பதும், அதைத் தொடர்ந்து உள்ளூர் அதிகாரிகள் துணையுடன் ஊழல் மற்றும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதும், இதில் ஏற்படும் போட்டி மற்றும் மோதல்களில் படுகொலைகள் நடப்பதும் தொடரவே செய்யும்.
மக்களின் அன்றாடத் தேவைகளில் கவனம் செலுத்தி, மக்களோடு மக்களாக பயணிப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகளில் செயல்படுகின்ற அணுகுமுறை வெகுவாக உதவும் என்றே நான் கருதுகிறேன். இதன் போக்கில்தான் பிழைப்புவாதிகளின் பிடியிலிருந்து மக்களை மீட்டெடுத்து அரசியல் படுத்தவும் முடியும்.
மாறிவரும் இன்றைய அரசியல் சூழலில், இது குறித்த விவாதங்கள் அவசியமானவை என்றே கருதுகிறேன்.
தமிழ்மணி
No comments:
Post a Comment