மெய்நிகர் உலகில் சஞ்சரிக்கும் முகநூல் பதிவர் Palani Chinnasamyக்கு ஒரு
கண்டனம்.
Palani
Chinnasamy என்றொரு முகநூல் நண்பர் கீழ்க்கண்டவாறு ஒரு பதிவை முகநூலில் எழுதியிருந்தார்.
“நாம் வாழும் சமூக உற்பத்திமுறை என்னே? உற்பத்தி சக்தி என்னே? சமூக உறவு என்னே? இவை தெரியாமலே நாமும் புரட்சி பேசி புரட்சியாளராக நமது ஆசான்களின் மேற்கோள்களை பேசி அணிகளை எத்தனைக் காலம் ஏமாற்றுவீர்?”
முதல் மூன்று கேள்விகள் நியாயமான கேள்விகள்தான். அவசியம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவைதான். ‘இவை தெரியாமலேயே நாமும் புரட்சி பேசி', அதாவது அவரும் புரட்சி பேசி-நாமும் என்றால் அவரும் உள்ளடக்கம்தானே-என்று தொடங்கி, ‘அணிகளை எத்தனைக் காலம் ஏமாற்றுவீர்?’ என்று அடுத்தவர்களை நோக்கி கேள்வி எழுப்புகிறார்.
மேற்கண்ட பதிவிற்கு கீழ்க்கண்ட பின்னூட்டம் ஒன்றை Vchinnadura Durai போட்டிருந்தார்.
“நீங்களே பதிலையும் சொல்லுங்கள் தோழர்”.
இதற்கு Palani Chinnsamy அவர்கள் எழுதிய பதில்தான் அவரது அதிமேதாவித்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
“தோழர் இவை எழுத ஆய்வு வேண்டும். அந்த ஆய்வுப் பணியை சரியாக நடக்கவில்லை என்றே மருதையன் அன் கம்பெனி ம.க.இ.க உடைந்த மக்கள் அதிகாரம் பிரிவு... இன்னும் சில பிரிவு தாங்கள் ஏதோ சோசலிச கட்டுமானத்தில் வாழ்வதாகவும் மற்றவர்கள் எல்லாம் முதலாளிதுவ சீரழிவில் வாழ்வதாக தூபம் போடுகின்றனர் அவர்களுக்காக எழுதியவை தோழர்”
இவர் கேட்ட கேள்விக்கு இவரிடமே பதில் இல்லையாம். இவை குறித்து எழுத ஆய்வு வேண்டுமாம். ஆய்வு செய்ய வேண்டியது தானே! இவரை யார் தடுத்தது? இதை விடுத்து
ஆதாரம் ஏதுமின்றி அடுத்தவர் மீது அழிச்சாட்டியம் செய்வது ஏன்?
இவரது பதிலுரைக்கு எனது எதிருரை கீழே.
"மருதையைன் அன் கம்பெனி" உங்கள் எழுத்து நடையே அருவருப்பாக உள்ளது. மகஇக அரசியல் தலைமை உடைந்ததற்குக் காரணம் 'பெல் சிட்டி ஊழல்'தான் என்பது ஊர் அறிந்த இரகசியம். உங்கள் வீட்டிலேயே உலை வைக்க ஏதுமில்லை. பிறகு எதற்கு அடுத்த வீட்டை எட்டிப் பார்த்து அங்கலாய்க்கிறீர்கள்?”
அடுத்தவர் குறித்து ஆதாரம் ஏதும் இன்றி கண்டதை எல்லாம் எழுதி சகலகலா வல்லவனாகத் தங்களை காட்டிக் கொள்ள முகநூலை சிலர் பயன்படுத்துவது கண்டனத்துக்குரியது.
தமிழ்மணி
No comments:
Post a Comment