அன்று வணிகம் செய்ய வந்த பரங்கியர் கூட்டம் நாட்டு வளங்களை அள்ளிச் சென்றது. நாட்டைக் காக்க வீரு கொண்டெழுந்த மக்களை அடக்குமுறைச் சட்டங்களாலும் கொடிய அடக்கு முறையாலும் ஒடுக்க முனைந்தக் கூட்டத்தை அஞ்சி நடுங்க வைத்தான் மாவீரன் பகத்சிங்.
இன்றோ நாட்டு வளங்களை தனியாருக்குத் தாரை வார்த்து, ஒட்டு மொத்த மக்களையும் ஓட்டாண்டியாக்கி வருகிறது பிழைக்க வந்த சங்பரிவார் கூட்டம். இந்தக் கூட்டத்தையும் விரட்டியடிக்க வேண்டுமானால் இன்று நமக்கு ஓராயிரம் பகத்சிங்குகள் தேவைப்படுகிறார்கள்.
இதை உணர்த்தும் விதமாக, பகத்சிங் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் 27.09.2021 அன்று வேலூர் மாவட்டம், வேலூர் மாநகர "தோழர் பகத்சிங் அமைப்புசாரா தொழிலாளர் சங்கம்", புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக பழைய பேருந்து நிலையம், ஆட்டோ ஸ்டாண்ட் அருகாமையில் தோழர் பகத்சிங் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
'புதிய வேளாண் சட்டத் திருத்தங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயத் தோழர்களுக்கு துணை நிற்போம்!' என்று முழக்கத்தை முன்வைத்து அனைவரும் உறுதி ஏற்றனர். சங்கத் தலைவர் தோழர் செல்வம் அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். ம.க.இ.க தோழர் இராவணன் அவர்கள், தோழர் பகத்சிங் குறித்தும், வேளாண் சட்டத்திருத்தங்கள் குறித்தும் சிறப்புரையாற்றினார். சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.
தகவல்
No comments:
Post a Comment