டெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு தெரிவித்தும், 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும் தமிழகம்-புதுவையில் பல்வேறு இடங்களில் வாகனப் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன.
திருபுவனை, புதுச்சேரி
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்ட மசோதாக்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் விவசாயிகள் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இதில் 149 பேர் போராட்டக் களத்திலேயே உயிர்துறந்த பிறகும் தங்களது கோரிக்கைகளை விடாப்படியாக போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் உழைக்கும் மக்களுக்கான போராட்டம் என்ற அடிப்படையிலும், அவர்களின் போராட்டத்தை வெற்றி பெற செய்வது உணவு உண்ணும் ஒவ்வொருவரின் கடமை என்ற வகையிலும், உழைக்கும் மக்களுக்கான போராட்டத்தில் தொழிலாளர்களும் பங்கு கொள்ளும் விதமாகவும், இந்தியா முழுவதும் விவசாயிகள் - தொழிலாளர் ஒற்றுமை உருவாக்கவும், அனைத்திந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு அறிவித்துள்ள டிராக்டர் பேரணி போராட்டம் வெற்றிப்பெற தொழிலாளர்களும் இணைந்து போராட வேண்டும் என்பதை வலியுறுத்தும்வகையில் இன்று ( 26/01/2021 ) புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக திருபுவனை தொழிற்பேட்டை சுற்றியுள்ள பகுதிகளில் முழக்கப் போராட்டம் மற்றும் இரு சக்கர வாகன பேரணி நடத்தப்பட்டது.
திருவண்டார்கோயில், திருபுவனனனை மதகடிப்பட்டு ஆகிய இந்த மூன்று மக்கள் கூடும் பகுதியில் முழக்கமிடப்பட்டது. இதில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி இணைப்பு மற்றும் கிளை சங்க தோழர்கள் கலந்து கொண்டனர்.
தொழிலாளர்கள் தங்களின் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று மக்கள் நிறைந்த சந்திப்பில் முழக்கமிட்டனர். பிறகு, பேரணியாக சென்றது மக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்க செய்தது.
தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
புதுச்சேரி.
தொடர்புக்கு: 95977 89801
கடலூர்
ஜனவரி 26 அகில இந்திய டிராக்டர் பேரணியின் ஒருபகுதியாக கடலூரில் நடைபெற்றது.
இந்த பேரணியில் மக்கள் அதிகாரம் தோழர்கள்.
மக்கள் அதிகாரம் தமிழ்நாடு - புதுவை
திருச்சி
டெல்லி விவசாயிகள் போராட்டதாதை இதரித்து திருச்சி லால்குடியில் விவசாயிகள் போராட்ட ஒருங்கினைப்புகுழு மற்றும் மக்கள் அதிகாரம் சார்பாக போராட்டம் நடைப்பெற்றது.
கரூர்
AIKSCC ஒருங்கிணைக்க..
அனைத்து தோழமை இயக்கங்களும் பங்கேற்க...
அனைத்து தொழிற்சங்ககளும் கைகோர்க்க..
மக்கள் அதிகாரம் தோழர்களும் கலந்து கொண்டனா்...
பல்வேறு இயக்க தலைவர்கள் தனது கண்டன உரையை பதிவு செய்தனர்...
மக்கள் அதிகாரத்தின் தோழர் வீரணன் அவர்களும் பங்கேற்றார..
உசிலை.-திருமங்கலம் மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளா் தோழர் ஆசையன் கண்டன உரையாற்றினார்...
PRPC வழக்கறிஞர் நட்ராஜ் தனது கண்டன உரையை பதிவுசெய்தார்.
திருமங்கலத்தில் வேளாண் விரோதசட்டத்தை ரத்து செய்யக்கோரி...
இரு சக்கர வாகன ஊர்வலமும் நடந்தேறியது.
மதுரை
26.01.2021 இன்று மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி நாடு முழுவதும் டிராக்டர் பேரணி அறிவித்து அகில இந்திய விவசாய கூட்டமைப்பு சார்பில் இன்று மதுரையில் ஒத்தக்கடையில் வாகன பேரணி நடைபெற்றது.
மாங்குளம் அருகில் பூசாரிப்பட்டியில் ஆரம்பிய்த்து சிதம்பரம் பட்டி, அயிலாங்குடி, கொடிக்குளம், A.புதூர், அரும்பனூர், புதுப்பட்டி, மங்கலக்குடி விளக்கு, யானைமலை குவாரி, நரசிங்கம், ஒத்தக்கடையில் நிறைவடைந்தது பேரணி பத்துக்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் வாகன பேரணியாக சென்று முழக்கமிட்டு சட்டத்தின் தன்மையையும், அபாயங்களையும், விளக்கி டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக நாம் குரல் கொடுக்க வேண்டிய அவசியத்தை விளக்கினர்.
இந்த வாகன பேரணியில் சி.பி.எம், சி.பி.ஐ, மக்கள் அதிகாரம், ஆட்டோ தொழிலாளர்கள், மற்றும் ஜனநாயக சக்திகள் அனை வரும் கலந்து கொண்டனர்.
இந்த பேரணியை சி.பி.எம. விவசாய சங்க மாவட்ட செயலாளர் எஸ்.பி.இளங்கோவன் தலைமை தாங்கினார், பேரணியை சி.பி.ஐ. புறநகர் மாவட்ட செயலாளர் காளிதாஸ் அவர்கள் துவக்கி வைத்தார், மக்கள் அதிகாரம் தோழர் சரவணன், மற்றும் மாற்று கட்சித் தோழர்கள் மக்களிடையே உரையாற்றினர்.
செய்தி: மக்கள் அதிகாரம், மதுரை.
திருமங்கலம்
AIKSCC ஒருங்கிணைக்க..
அனைத்து தோழமை இயக்கங்களும் பங்கேற்க...
அனைத்து தொழிற்சங்ககளும் கைகோர்க்க..
மக்கள் அதிகாரம் தோழர்களும் கலந்து கொண்டனா்...
பல்வேறு இயக்க தலைவர்கள் தனது கண்டன உரையை பதிவு செய்தனர்...
மக்கள் அதிகாரத்தின் தோழர் வீரணன் அவர்களும் பங்கேற்றார..
உசிலை.-திருமங்கலம் மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளா் தோழர் ஆசையன் கண்டன உரையாற்றினார்...
PRPC வழக்கறிஞர் நட்ராஜ் தனது கண்டன உரையை பதிவுசெய்தார்.
திருமங்கலத்தில் வேளாண் விரோதசட்டத்தை ரத்து செய்யக்கோரி...
இரு சக்கர வாகன ஊர்வலமும் நடந்தேறியது.
விழுப்புரம்
கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக மோடி அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் கோரிக்கையின் அடிப்படையில் 60 நாட்களுக்கும் மேலாக டெல்லியை முற்றுகையிட்டு பல லட்சக்கணக்கான விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். விவசாயத்தை காக்கும் இந்த போராட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இந்த போராட்டம் அடுத்த கட்டம் நோக்கி செல்வதற்கு ஜனவரி 26 குடியரசு தினத்தன்று டெல்லியில் லட்சக்கணக்கான டிராக்டர்களை கொண்டு பேரணியை விவசாயிகள் நடத்துகிறார்கள்.
அதன் அடிப்படையில் இந்தியா முழுவதும் உள்ள 700 மாவட்டங்களில் நடத்துவது என்ற அடிப்படையில் அகில இந்திய விவசாயிகள் போராட்டம் ஒருங்கிணைப்பு குழு சார்பில் விழுப்புரத்தில் ரயில் நிலையம் அருகில் கண்டன முழக்கங்களுடன் பேரணி தொடங்கி புதிய பேருந்து நிலையம் அருகில் ஜல்லிக்கட்டு திடலில் முடிந்தது. அதில் மக்கள் அதிகாரம் சார்ப்பாக கலந்து கொண்டோம்.
தகவல்
மக்கள் அதிகாரம்.
விழுப்புரம் மண்டலம்.
94865 97801
டெல்லி:
புறப்பட்டாகிவிட்டது டிராக்டர் படை!
அலங்கார பீரங்கிப்படைகள்
இனி வயல்வெளிகள் நோக்கி
உழுவதற்குச் செல்க
புறப்பட்டாகிவிட்டது
நாட்டைக்காக்க
டிராக்டர்கள் படை
முப்படைகளுக்கும் மேலான
டிராக்டர் படையொன்று
காத்திருந்தது யாருக்கும் தெரியவில்லைை
ஒரு கோடி விவசாயிகள்
ஐந்து இலட்சம் டிராக்டர்கள்
தேசியக்கொடிகள்
காற்றில் தீயாய் உயர்கின்றன
தடுப்பரண்கள்
தகர்ந்துவிழுகின்றன
தலை நகரம் முற்றுகையிடப்பட்டிருக்கிறது
தேசத்தின் சொந்தமக்களால்
பயிர்களைத் தின்னும்
வெட்டுக்கிளிகளை
வேரறுக்கும் யுத்தம் துவங்கியிருக்கிறது
அலங்கார ஊர்திகள்
பின்வாங்கிச் செல்க
ஒரு மக்கள் யுத்தப்பேரணியை
தேசம் பார்த்துக்கொண்டிருக்கிறது
அன்னிய ஆட்சியாளனுக்கு
எதிராகக்கூட இப்படியொரு அலை
எழுந்து வந்ததில்லை
எதுவும் அவர்களை
தடுக்க முடியவில்லை
கண்ணுக்கெட்டியதூரம்வரை
எதிர்ப்பின் கடல்
நீண்டுகொண்டேயிருக்கிறது
அதிகாரத்தின் லத்திகள்
விவசாயிகளின் தலை நோக்கி உயர்கின்றன
கண்ணீர் புகைக்குண்டுகள்
வெடிக்கின்றன
ஒரு ரத்தம் வெள்ளத்திற்கான
ஆயத்தங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன
மக்களை எப்படி சீண்டவேண்டுமென
அவர்களுக்குதெரியும்
மக்களை எப்படி வன்முறையார்களாக
காட்டவேண்டும் என
அவர்களுக்குத் தெரியும்
வன்முறையாளர்கள் ஊடுருவுகிறார்கள்
ஏதோ ஒன்று நிகழப்போகிறது
எனும் அச்சம் எங்கும் பரவுகிறது
அதிகாரத்தின் ஏவல் நாய்கள்
கேமிராக்கள் பின்னிருந்து
தேசத்தின் கெளரவம்
அவமதிக்கப்பட்டுவிட்டது என
ஊளையிடுகின்றன
'நான்தான் தேசம்'
என முழங்குகிறான் விவசாயி
விவசாயிகள் அமைதியாக
செல்ல விரும்புகிறார்கள்
அரசு அதை விரும்பவில்லை
யார் முதல் கல்லை எறிவார்கள் என
பசியுடன் காத்திருக்கிறது
டிராக்டர்களை நிறுத்த
பெட்ரோல் பங்குகள் மூடப்படுகின்றன
காவல்துறையினர்
சாலையில் அமர்ந்து மறியல் செய்கின்றனர்
அவர்கள் எண்ணிக்கையில் சிறியவர்கள்
மக்கள் வெள்ளத்தைக்கண்டு
அவர்கள் திகைத்து நிற்கிறார்கள்
விவசாயிகள்
அச்சமற்று முன்னேறுகிறார்கள்
பிசாசுகளின் தலைநகரை
ஆழ உழுது பயிரிட
டிராக்டர்கள் தொடர்ந்து முன்னேறுகின்றன
குரு கோவிந்த் சிங்கின்
மஞ்சள் கொடி அவர்களை
வழி நடத்திச் செல்கிறது
செங்கோட்டைவரை வந்துவிட்டார்கள்
அரசரின் அகங்காரத்தின் கோட்டைகள்
அதிர்கின்றன
டிராக்டர்களில் குழந்தைகளும் பெண்களும்
உற்சாகமாக வந்துகொண்டிருக்கிறார்கள்
டிராக்டர்களின் பேரொலி
போர் விமானங்களின்
பேரொலியாக் கேட்கிறது
எல்லையில் பதட்டம் என்பது
சீன எல்லையிலிருந்து
பாகிஸ்தான் எல்லையிலிருந்து
டெல்லி எல்லையில் பதட்டம் என்றாகியிருக்கிறது
முள் வேலிகள்
வாகன வேலிகள்
கல் வேலிகள் தகர்ந்து விழுகின்றன
செங்கோட்டையில்
நாட்டின் முதல் குடிமகன்
கொடியேற்றிய
அதே நாளில்
அதே இடத்தில்
கடைசிக்குடி மக்களான
விவசாயிகள்
கொடியேற்றிவிட்டார்கள்
ஒரு குடியரசு நாளில்
உண்மையான குடியரசு
பிறந்தேவிடும் போலிருக்கிறது
26.1.2021
பகல் 1.39
மனுஷ்ய புத்திரன்
No comments:
Post a Comment