கடலூர்
கடலூரில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பாக போகி தினத்தில் வேண்டாத பழைய பொருட்களை கொளுத்தும் வகையில் மத்திய பாசிச மோடி அரசின் 3 வேளாண் சட்ட நகலை கொளுத்தப்பட்டது.
தகவல்
மக்கள் அதிகாரம் தமிழ்நாடு புதுவை
கடலூர், வலையமாதேவி
மூன்று வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து 13/01/2021 போகி பண்டிகையில் வேளாண் சட்ட நகல் எரிப்பு கடலூர் மாவட்டம் வலையமாதேவியில் பு.மா.இ.மு தோழர்கள் நடத்தினார்.
தகவல்
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
கடலூர் மாவட்டம்.
கடலூர், திருப்பாதிரிபுலியூர்
கடலூர் திருப்பாதிரிபுலியூர் இல் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக 3 வேளாண் சட்ட நகலை தீயில் கொளுத்தப்பட்டது.
திருமங்கலம்
திருமங்கலத்தில்,
AIKSCC ஒருங்கிணைக்க...
தோழமை இயக்கங்கள் ஒன்னு கூட..
மக்கள் அதிகாரம் தோழர்களும் கலந்துகொண்ட....
போகிப்பண்டிகை திருநாளில்...
பழையன கழிதலும்..
புதியன புகுதலுமான...
விவசாயிகளின் தியாக போராட்ட மரபை புதியன,
புகுத்தலும்...
வேளாண் விரோத சட்ட நகலை பழையன எரித்தலும்...
மகிழ்வோடு போராட்டாம் நடந்தேறியது!
மற்றொரு அராஜகம் போகிப்பண்டிகை
கொண்டாடிய தோழர்கள் அனைவரும் கைது!
மதுரை, ஒத்தக்கடை
மதுரை ஒத்தக்கடைப் பகுதியில்
AIKSCC ஒருங்கிணைக்க...
தோழமை இயக்கங்கள் ஒன்னு கூட..
மக்கள் அதிகாரம் தோழர்களும் கலந்துகொண்ட....
போகிப்பண்டிகை திருநாளில்...
பழையன கழிதலும்..
புதியன புகுதலுமான...
விவசாயிகளின் தியாக போராட்ட மரபை புதியன,
புகுத்தலும்...
வேளாண் விரோத சட்ட நகலை பழையன எரித்தலும்...
மகிழ்வோடு போராட்டாம் நடந்தேறியது!
மற்றொரு அராஜகம் போகிப்பண்டிகை
கொண்டாடிய தோழர்கள் அனைவரும் கைது!
தகவல்
மக்கள் அதிகாரம்
மதுரை மண்டலம்
திருச்சி, காஜாப்பேட்டை
திருச்சி காஜாபேட்டை பகுதியில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக புதிய வேளாண் திருத்தச் சட்ட நகல்களை போகிப்பண்டிகை ஆன இன்று எங்களுக்கும் எங்கள் நாட்டுக்கும் தேவையில்லாத சட்டமான வேளாண் சட்டத்தின் நகல்களை அப்பகுதி இளைஞர்கள் எரித்தனர்
தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
திருச்சி
9944847888
திருச்சி பு.மா.இ.மு
திருச்சி, காந்திபுரம்
வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் இன்று காலை 11 மணி அளவில் மக்கள் அதிகாரம் தலைமையில் தில்லைநகர் காந்திபுரம் பகுதியில் நடைபெற்றது. மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாவட்ட செயலாளர் தோழர் ஜீவா, சரவணன், லதா, பரமசிவம்,
பாலு மணலிதாஸ், நிர்மலா மற்றும் மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர்செழியன் ஜனநாயக சமூகநல கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர்.சம்சுதீன், முத்துக்குமார் கலந்து கொண்டு சட்ட நகலை எரித்தனர். இதில் 30க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். நகலை எரித்த முன்னணியாளர்களை காவல்துறையினர் கைது செய்து மண்டபத்தில் வைத்துள்ளனர்.
செய்தி
மக்கள் அதிகாரம்
திருச்சி
செல்:9445475157
திருச்சி, அரவானூர்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய 3 வேளாண் சட்டத்தை எதிர்த்து அதன் சட்ட நகலை திருச்சி அரவானூர் பகுதியில்
மக்கள் அதிகாரம் மாவட்ட குழு உறுப்பினர் தோழர் ராஜா தலைமையில் ஊர் பொதுமக்களுடன் இணைந்து கொளுத்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
செய்தி:
மக்கள் அதிகாரம்
திருச்சி.
சேந்தநாடு
மோடி அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டம் எரிக்கும் போராட்டம் .... இந்தியாவில் வாழக்கூடிய 130 கோடி மக்கள் வாழ்வாதாரம் பறிக்கும் திட்டம் ....டெல்லியை முற்றுகை இட்டு 1.40 கோடி மக்கள் மேல் கலந்து கொண்டு நடக்கும் போராட்டம் ....62 நபருக்கு மேல் உயிர் தியாகம் செய்து தொடர் போராட்டம் நடக்கிறது .. மோடி அரசு விவசாயி போராட்டத்தை ஒடுக்கி வருகிறது ....அதையும் முறியடித்தும் போராட்டம் நடக்கிறது ..மூன்று வேளாண் சட்டம் நடைமுறை ஆனால் விவசாயம் ,விவசாயம் சார்ந்த தொழில் ,விவசாயம் சார்ந்த வர்த்தகம் என எல்லாம் கார்ப்பரேட்டிடம் கொடுக்கப்படும் உணவு ஆதாரம் விற்பனை பண்டமாக மாறும் ,உணவு வாழ்வாதாரம் சுரண்ட படும் .இதன் விளைவு ரேஷன் கடை மூட படும் ,ரேஷன் அரிசி இல்லை , சத்துணவு இல்லை ...உணவு பொருள் விலை தங்க விலைபோல் உயரும் .இது நடைமுறை ஆனால் பட்னி,பஞ்சம் தலை விருத்தி ஆடும் ...80 கோடிக்கும் மேற்ப்பாட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்க்கெதிரான ...இந்த மூன்று வேளாண் சட்டங்களை முறியடிக்கும் போராட்டம் ஆதரவாக போகி இன்று வேளாண் சட்டம் நகல் எரிப்பு போராட்டம் சேந்தநாடு கிராம பகுதியில் தோழர் பால்ராஜ் தலைமையில் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டு நகல் எரிப்பு போராட்டம் நடத்தப்பட்டது ...
தகவல்
புரட்சிகர மாணவர் -இளைஞர் முன்னணி தொடர்புக்கு .9788808110
தருமபுரி
வேளாண் திருத்த சட்டத்தை முறியடிப்போம்! என்ற முழக்கத்தை முன்வைத்து பு.மா.இ.மு சார்பில் தமிழ்நாடு முழுவதும் சில இடங்களில் போகி பண்டிகையான இன்று (13/01/2021) எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் புதிய மூன்று வேளாண் சட்ட நகலை எரிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் தோழர் அன்பு பு.மா.இ.மு, மாவட்ட அமைப்பாளர் தலைமையில் நடைபெற்றது.
தகவல்
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
தருமபுரி மாவட்டம்.
தஞ்சை
வேளாண்சட்டங்களை தீயிலிட்டு எரித்து நாடெங்கிலும் போகிக்கொண்டாட்டம்.
=======================
வேளாண்சட்டங்களை ரத்து செய்யக்கோரி போராடிவரும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு அறிவிப்பை ஒட்டி நாடுமுழுவதும் வேளாண்சட்ட எரிப்பு 13-01-2021 போகிப்பண்டிகை அன்று நடைபெற்றது. . மக்கள் தன்னெழுச்சியாக இதனை சொந்த போராட்டமாக கொண்டாடுவதை சமூக ஊடகங்கள் மூலம் உணர முடிகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் நான்கு ரோடு சாலையில் சமவெளி விவசாயிகள் இயக்க நிறுவுனர் தலைவர் தோழர். பழனிராஜன் தலைமையில் மக்கள் அதிகாரம் தோழர். பிரவின் குமார், புரட்சிகர மாணவர் -இளைஞர் முன்னணி தோழர். மகேந்திரன், ஓய்வு பெற்ற ஆசிரியர் அய்யனாபுரம் ஞாணசம்பந்தன், சமூக ஆர்வலர் பூதலூர் ஆர். எஸ். புத்தர் மற்றும் விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு வேண்டுகோளை ஏற்று வேளாண்சட்டத்தை தீயிட்டுக்கொளுத்தினர். கைதுசெய்யப்பட்டு மாலை விடுதலை செய்யப்பட்டனர்.
தஞ்சை மானோஜிப்பட்டியில் மக்கள் அதிகாரம் தஞ்சை ஒருங்கிணைப்பாளர் தேவா தலைமையில் அப்பகுதி மக்கள் வேளாண் சட்டத்தை தீயிட்டுக் கொளுத்தினர்.
தஞ்சை இரயிலடியில் விவசாயிகள் போராட்டக்குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர். என்.வி.கண்ணன் தலைமையில் வேளாண்சட்ட எரிப்பு போராட்டம் நடைபெற்றது. மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் தோழர். காளியப்பன்,
தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வீரமோகன்,
சிபிஐ மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ஆர்.கே. செல்வகுமார், மக்கள கலை இலக்கியக் கழக மாநகர செயலர் இராவணன், ஏஐடியூசி மாவட்ட துணைச் செயலாளர் துரை. மதிவாணன்,
சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே அன்பு,
தரைக்கடை சங்க மாவட்ட பொருளாளர் எ. ராஜா,
எஸ்எஃப் ஐ மாவட்ட செயலர் அரவிந்தசாமி மற்றும் குணா,
விசிறி சாமியார் முருகன் உட்பட பதிமூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கக்கரக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவுரருணி, பாபநாசம், வெளளாண்சட்ட எரிப்பு நடைபெற்றது.
தகவல்: மதிவேல்
14-01-2021
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டத்தை எதிர்த்து அதன் சட்ட நகலை கொளுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை காவல்துறை கைது செய்துள்ளனர்..
இடம் : தஞ்சை
மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் தோழர் காளியப்பன் உரை
https://youtu.be/dTqcWa7
No comments:
Post a Comment