Monday, 9 November 2020

திருவள்ளூர்: 103 ஆம் ஆண்டு நவம்பர் புரட்சி விழா நிகழ்ச்சிகள்!

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்

103 வது #நவம்பர்_புரட்சி தின விழாவை முன்னிட்டு புதிய ஜனநாயகத்‌ தொழிலாளர் முன்னணியின் திருவள்ளுர் (கிழக்கு) மாவட்டம் சார்பாக,  அலுவலகத்தில் கொடியேற்றி பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. அதன்பிறகு, உழைக்கும் மக்கள் மத்ததியில் இனிப்புகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு  பு.ஜ.தொ.மு திருவள்ளுர் (கிழக்கு) மாவட்ட துணைதலைவர் #தோழர்_ஹரிநாதன் தலைமைதாங்கினார்.  செயலாளர் #தோழர்_விகந்தர் கொடியேற்றினார்.






புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருவள்ளூர் (கிழக்கு) மாவட்டத்தில் #GMS ஆலையில் 103 வது புரட்சி நாள் விழா கொண்டாடப்பட்டது. கொட்டும் மழையிலும் தோழர்கள் நின்று சூளுரைத்தனர்.

*****

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருவள்ளூர் (கிழக்கு) மாவட்டம் #எஸ்_ஆர்_எஃப் சங்கம் சார்பாக 103வது புரட்சி தின விழா‌ கொண்டாடப்பட்டது.

*****

103 வது ரசிய புரட்சி நாளான நவம்பர் 7 அன்று மாலை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி - திருவள்ளூர் (கிழக்கு) மாவட்டம் சார்பாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.  இதில் பல்வேறு கிரமத்தை வீரர்கள் தங்கள் பெயர்களை பதிந்து விளையாட்டில் கலந்துக்கொண்டனர். ‌இதற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின் செயலாளர் தோழர் விகந்தர் தலைமையில் போட்டிகள் நடந்தது.

இதில் ரசிய புரட்சி நாள் பற்றிய மகத்துவத்தையும், நாம் இந்த சமூகத்திற்கு செய்ய வேண்டிய கடமைகள் பற்றியும் விளக்கி சொல்லப்பட்டது. விளையாட்டி கலந்துக்கொண்ட இளைஞர்கள் அவ்வப்போது எங்களால் இயன்ற பங்களிப்பை இந்த சமூகத்திற்கு நிச்சயம் செய்வோம் என்றனர்.








No comments:

Post a Comment